கலாய்
Published:Updated:

டிரெண்டிங் டிக்கெட்ஸ்!

டிரெண்டிங் டிக்கெட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
டிரெண்டிங் டிக்கெட்ஸ்!

டிரெண்டிங் டிக்கெட்ஸ்!

டிரெண்டிங் டிக்கெட்ஸ்!

`எத்தனை நாள்தான் இவங்களே கலாய்ப்பாங்க'னு இவங்களையே கொத்துபுரோட்டா போட்டது தமிழ்சினிமா வட்டாரம். அப்படி இப்படி எப்படி டிரெண்ட் ஆனார்கள் இவர்கள்?

டிரெண்டிங் டிக்கெட்ஸ்!

காவிரியில் தன் கெட்டி சட்னியியை ஊற்றி டிரண்ட் அடித்தது `புட் சட்னி' யூ-டியூப் சேனல். இதில் பேசிய ராஜ்மோகன்க்கு சாட்டை அடிப் பதிவு தோழா ரேஞ்சுக்கு லைக் மற்றும் ஷேர்கள் அள்ளியது. தேவை இல்லாதவற்றைப் பேசும் சேனல்கள் மத்தியில் ஒரு சேஞ்சாக அமைந்தது இது. உங்க `தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு'க்கு நாங்க ஃபேன் பாஸ்... ராஜ்மோகன் ராக்ஸ்! https://youtu.be/NYtPf7PEKNM

டிரெண்டிங் டிக்கெட்ஸ்!

மேல் நாடுகளில் ரோஸ்ட் பிரபலம். இங்கேயும்தான்னு சொல்லாதிங்க... இது வேற ரோஸ்ட்! அதாவது செலிபிரிட்டி ஒருவரை அழைத்து வந்து ஸ்கிரிப்ட் ரெடி செய்து அவருக்கே வெடி வைப்பது. `சத்தியமா நான் சொல்வது எல்லாம் சொல்லிக் கொடுக்கப்பட்டது'னு சொல்லிக் அவரை சகட்டுமேனிக்குக் கலாய்க்கிறதுதான் கான்செப்ட்! இதை பண்றதுக்கெல்லாம் தனி தைரியம் வேணும் பாஸ். வாழ்த்துகள்!  https://youtu.be/FWIZNVgKplA

டிரெண்டிங் டிக்கெட்ஸ்!

டீ கடைக்குள் ஒரு சட்னி சாட், யூடியூப் முதல் ஃபேஸ்புக் வரை... சரி சரி இந்த டிரெண்டில் மட்டும் செலிபிரிட்டியுடன் லைவாக போய் டிரண்ட் ஆனது இந்த சாட் ப்ரோக்ராம். நாம் கேட்கும் கேள்விகள் அவர்கள் கேட்கும் கேள்விகள் யாருமே கேட்காத கேள்விகள் எனக் கலவையாக வருகிறது. இதில் வரும் டீ கடை செட்டப் இன்னொரு பிளஸ். இதோ பாஸ்  ரெடி ஆகிட்டேன் ஐ யம் கம்மிங்!  https://youtu.be/pLXp68-jQa8

டிரெண்டிங் டிக்கெட்ஸ்!

சினிமா ரிவ்யூனா பேசணும், அந்தப் படத்தைப் பத்திப் பேசணும், முடிஞ்சா வீடியோவைப் பத்தியும் பேசணும். இதை உடைச்சது இந்த `ஸ்மைல் சேட்டை டம்பஸ்ட் ரிவ்யூ'. அடிச்சுக் கேட்டாலும் பேசமாட்டாங்க. அப்பயும் பேசமாட்டாங்க. எப்படி பாஸ் படத்தைவிட உங்க ரிவ்யூ நல்லா ஓடுது? அடப் பேசித்தான் பாரு... நீ பேசித்தான் பாரு! https://youtu.be/BQOspSa-AoM

டிரெண்டிங் டிக்கெட்ஸ்!

டிப்ஸ் தருவாங்க... அட எதுக்கு? எல்லாத்துக்கும்தான்! சரி எதுக்கு எல்லாம்..? அட, போய்த்தான் பாருங்க பாஸ். கல்யாணத்துல ஓசி சோறு முதல் ஜென்ரல் கம்பார்ட்மென்ட்ல வித் அவுட்ல போகிற வரை நம்ம வாழ்க்கைய கலர்ஃபுல்லா ஓட வைக்க உதவுகிறது இந்த பாரசெட்மால் பணியாரம் வீடியோக்கள். அதுக்கு ஏன் பணியாரம் பாஸ்...? https://youtu.be/8MY44iNPnb4

- க.மணிவண்ணன்