மிட்நைட்டில் அடித்துப் பிடித்துப்போய் கேக்கை நீட்டி நம் மனதுக்கு நெருக்கமானவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதெல்லாம் போன ஜென்மத்து நிகழ்வாகிவிட்டது. தனி விமானத்தில் சர்ப்ரைஸ் பயணம், ஹெலிபேடில் டின்னர், ஆடி, பி.எம்.டபிள்யூ போன்ற சொகுசு கார்களில் ஊர் சுற்றுவது, முதியவர்களை, குழந்தைகளைத் தத்தெடுத்துக்கொள்வது என வித்தியாச வித்தியாசமான ஆச்சர்யங்களை அள்ளி வழங்குகிறார்கள் இந்தத் தலைமுறை இளைஞர்கள். இப்படியான புதுப்புது சர்ப்ரைஸ்களை வழங்குவதற்காகவே பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமானது Oye Happy என்ற ஸ்டார்ட் அப். வாடிக்கையாளர்களுக்கு வெரைட்டி விருந்து வைக்கும் அந்நிறுவனத்தின் சி.இ.ஓ ஹர்ஷிடம் சாட் செய்ததிலிருந்து...

``எப்படி வந்தது இந்த ஸ்டார்ட் அப் ஐடியா?''

``சின்ன வயதிலிருந்தே சுற்றியிருப்பவர்களை சர்ப்ரைஸ் செய்வது மிகவும் பிடிக்கும். கார்ப்பரேட் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, பிடித்தவர்களுக்கு சர்ப்ரைஸ் தரக்கூட நேரமில்லாமல் மற்றவர்கள் ஓடிக்கொண்டே இருப்பதைப் பார்த்தேன். நாம் ஏன் அவர்கள் சார்பில் சர்ப்ரைஸ் தரக் கூடாது எனத் தோன்றியது. விளம்பர நிறுவனங்களுக்கு க்ரியேட்டிவ் கன்சல்டன்ட்டாக இருந்த என் கஸின் வருணிடம் இதுபற்றிப் பேசினேன். உடனே ஹைதராபாத் ஏர்போர்ட்டில் ஒரு சின்ன இடத்தில் இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம். இப்போது 22 முழுநேர ஊழியர்கள் எங்களிடம் பணிபுரிகிறார்கள்.''

``எங்கிருந்து இந்த வெரைட்டி ஐடியாக்களைப் பிடிக்கிறீர்கள்?''

``எல்லா புகழும் எங்கள் க்ரியேட்டிவ் கன்சல்டன்ட்களுக்கே. எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு ஐடியா வித்தியாசமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அதற்கு முன்னுரிமை கொடுப்போம். லைவ் கிரிக்கெட் மேட்ச்சிற்கு நடுவே ஸ்க்ரீனில் வாழ்த்துகளை ஒளிபரப்புவது, ஒரு பெரிய தீவையே வாடகைக்கு எடுப்பது போன்ற பல வித்தியாச ஐடியாக்களை இந்தியாவில் முதன்முறையாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறோம்.''

``நீங்கள் கொடுத்த சர்ப்ரைஸ்களிலேயே உங்களுக்குப் பிடித்த சர்ப்ரைஸ் எது?''

``இந்தியாவிலேயே வாடிக்கையாளர்களின் கண்ணீரைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே நிறுவனம் எங்களுடையதாகத்தான் இருக்கும். யெஸ் பாஸ். அது ஆனந்தக் கண்ணீர். அந்த வகையில் ஒவ்வொரு சர்ப்ரைஸும் எங்களுக்கு ஸ்பெஷல்தான். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் விவாகரத்து கோரியிருந்த தன் மனைவிக்கு கடைசியாக ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பினார் ஒருவர். ரொம்பவும் மெனக்கெட்டு நாங்கள் கொடுத்த அந்த சர்ப்ரைஸ் சூப்பராக ஒர்க் அவுட் ஆகியது. அவர்கள் மீண்டும் இணைந்துவிட்டார்கள்.''

``Oye Happy-ன் அடுத்த ஸ்டெப்?''

``இப்போது பெருநகரங்களில் மட்டுமே பரவியிருக்கிறோம். சீக்கிரமே இந்தியா முழுக்க கிளை பரப்ப வேண்டும். இன்னும் எக்கச்சக்க வித்தியாச ஐடியாக்களை யோசிப்பதற்காக மூளையைக் கசக்கிப் பிழிய வேண்டும். அவ்வளவுதான்'' என்கிறார் ஹர்ஷ் சிரித்தபடி!

- நித்திஷ்