கூகுள் ப்ளே ஸ்டோரில் ஏற்கெனவே எக்கச்சக்க ஆப்ஸ் கொட்டிக் கிடக்குது. போதாததுக்கு மோடி வேற டிஜிட்டல் இந்தியாங்கிற பெயர்ல எல்லா மேடையிலும் ஏதாவது ஒரு ஆப்பை ரிலீஸ் பண்ணிட்டு இருக்கார். ஏற்கெனவே இருக்கிற ஒரு மொபைல் அப்ளிகேஷன் பெயரைப் போட்டுத் தேடினா, கூகுளே குழம்பிப் போற அளவுக்கு, அதே பெயர்ல வேற வேற ஆப்ஸ்-ஐ க்ளோனிங் பண்ணி வெச்சுருக்காங்க டெவலப்பர்ஸ். நமக்கே தூக்கிவாரிப் போடுற ஐடியாவை வச்சு, நம்மைக் கலாய்க்கும் டூப்ளிகேட் ஆப்ஸ், பிராங்க் (prank) ஆப்ஸ் நிறைய இருக்கு. அதைக் கொஞ்சம் பார்ப்போம்னு ப்ளே ஸ்டோரில் தேடினோம்...

மோடி கீ நோட்: Modi Keynote

https://play.google.com/store/apps/details?id=com.modi.note&hl=en

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, சில நாட்களில் வெளிவந்த இந்த ஆப், ப்ளே ஸ்டோரின் தெறி வைரல். 2000 ரூபாய் நோட்டில் இருக்கும் மங்கள்யான் படத்தை, மொபைல் போன் வைத்து ஸ்கேன் செய்தால் போதும், அதில் மோடி பேசுகிறார் என வதந்தி பரவ, தீயாக டவுன்லோட் ஆனது இந்த ஆப். ஆனால் கணினி டிஸ்ப்ளேயில் இருக்கும் ரூபாய் நோட்டை ஸ்கேன் செய்தால்கூட, மோடி உரையாற்றத் துவங்கினார்.

அதோடு நிறுத்தாமல் இதை வைத்து, 2000 ரூபாய் நோட்டு ஒரிஜினலா, இல்லையா என்பதையும் கண்டுபிடிக்கலாம் எனக் கிளப்பிவிட்டார்கள். “இது மோடியின் கருத்தை மக்களிடம் கொண்டு செல்ல, ஆக்மென்டட் ரியாலிட்டியில் ஒரு சின்ன முயற்சி. அவ்ளோதான். இதை வச்சு ஒரிஜினல் நோட்டை எல்லாம் கண்டுபிடிக்க முடியாது” என ப்ளே ஸ்டோரிலேயே டெவலப்பர்ஸ் டிஸ்கி போட்டாலும், அதை நம்பவில்லை ஆண்ட்ராய்டு மக்கள். ‘அது வந்துங்க... இந்த ஆப் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா?’ என இதை வைத்து விதவிதமாக ரிவ்யூ செய்து வியூஸ் வாங்கினர் டெக்கீஸ். மொத்தத்தில் தற்போது 5 மில்லியன் டவுன்லோட்ஸ் கடந்துவிட்டது இந்த ஆப்.

ரெட் கேண்டில்: Red Candle

https://play.google.com/store/apps/details?id=com.zvboxandroid.game.candle.android

கேண்டில் லைட் டின்னர் சாப்பிட கேண்டில் கூட வேணாம்ப்பா... இந்த ஆப் இருந்தா போதும். டிஜிட்டல் இந்தியாவில் ஏற்ற வேண்டிய விளக்கு இப்படித்தான இருக்கணும்? இன்ஸ்டால் பண்ணி, திறந்து பார்த்தால் பெரிய மெழுகுவத்தி, சின்ன மெழுகுவத்தி, இன்னும் சின்ன மெழுகுவத்தி என மூன்று ஆப்ஷன்கள் வைத்திருக்கிறார்கள். எவ்வளவு நேரம் எரிய வேண்டும் என டைமிங் செட் செய்துவிட்டு, ஒரு க்ளிக் செய்தால் போதும். மொபைல் பேட்டரியில் ஜோராக எரிகிறது சுடாத சுடர். அப்படியே ப்ளே ஸ்டோரில் Virtual Candle (https://play.google.com/store/apps/details?id=com.kauf.particle.virtualcandle&hl=en) என்னும் ஆப் கண்ணில் தட்டுப்பட, ‘இது என்னடா புதுசா வந்து மாட்டுது?’ என இன்ஸ்டால் செய்து, திறந்தேன். ஊதினாலே அணைந்துவிடும் என்றுதான் ப்ளே ஸ்டோர் டிஸ்க்ரிப்ஷனில் இருந்தது. ஐ.. சூப்பரா இருக்கே, என மெழுகுவத்தியைப் பற்ற வைத்து ஊதி ஊதிப் பார்த்தேன். நோ யூஸ்!

Mood Detector: மூட் டிடெக்டர்:

https://play.google.com/store/apps/details?id=com.siliconZest.mooddetector&hl=en

மகிழ்ச்சி, கோபம், கவலை, உறவு, மன அழுத்தம், நார்மல் என நாம் என்ன மன நிலையில் இருக்கிறோம் என்பதைச் சொல்லும் ஆப் எனப் பார்த்ததும், அட... இதையும்தான் பார்த்துடுவோமே என இன்ஸ்டால் செய்தேன். எல்லா மூடுக்கும் ஒரு டெஸ்ட் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு மூடுக்கும் ஒவ்வொரு டெஸ்ட். ஒவ்வொரு டெஸ்ட்க்கும், கேள்விகள் கேட்டு, நமது பதிலைப் பொறுத்து பதில் தந்தது. மகிழ்ச்சியாக இருக்கும் போது டெஸ்ட் எழுதுனா கூட, அடுத்து கோபத்துக்கு டெஸ்ட் எடுக்கிற அளவுக்கு வெறுப்பேற்றுகின்றன கேள்விகள். அட அப்ரசண்டீஸ்... எங்களைக் கடுப்பாக்குறதே உங்க டெஸ்ட்தாண்டா!

Translator for dogs Simulator: டிரான்ஸ்லேஷன் ஃபார் டாக்ஸ்:

https://play.google.com/store/apps/details?id=com.freshmint.dog.voice.translator&hl=en

‘நீங்கள் எங்களிடம் சொல்லுங்கள்... உங்கள் நாயிடம் நாங்கள் சொல்கிறோம்’ என பையிங் லைன் மட்டும்தான் இல்லை. சில நாய்களின் குரலை ஆப்பில் ரெக்கார்டு செய்து வைத்திருக்கிறார்கள். அத்தோடு நாம் நமது குரலை ரெக்கார்டு செய்து, டிரான்ஸ்லேட் செய்தால், நாய் குரைப்பது போல மாற்றித் தருகிறது இந்த ஆப். ஆனால் இது பிராங்க் ஆப்தான்னு அவங்களே சொல்லிட்டாங்க. அதனால உங்க வீட்டு செல்லப் பிராணி முன்னாடி வச்சு டெஸ்ட் பண்ணிடாதீங்க. வேணும்னா, நம்ம வாய்ஸ் நாய் பாஷைல எப்படி இருக்கும்னு டெஸ்ட் பண்ணிக்கலாம்!

இதே மாதிரி இன்னொரு ஆப்பில், பூனை, கிளி, கழுதை, மாடு என எல்லாத்துக்கும் ஒரு டிரான்ஸ்லேட்டர் வெச்சிருக்காங்க! சாட்டிலைட் டிடெக்ட்டர்ஸ் என வேறு சில ஆப்ஸ்கள் ரவுண்ட் அடிக்கின்றன. இன்ஸ்டால் செய்து, ஆன் செய்தால், நம் தலைக்கு மேலே, தற்போது என்ன செயற்கைக்கோள் சுற்றுகிறது என்பதைச் சொல்லிவிடுமாம். என்னடா... கலர் கலரா ரீலு விடுறீங்க?

- ஞா.சுதாகர்