பதறவைத்த மோடி

2016-ம் ஆண்டு முடிவடையும்போது இணையத்தில் ட்ரெண்ட் செட்டர் என்றால் அது சந்தேகமே இல்லாமல் மோடிதான். புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களுக்குப் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு தரப்போவதாக தகவல் வெளியானது முதல், ‘அடுத்து என்ன குண்டைத் தூக்கிப் போடப்போறாரோ?’ என ட்விட்டரில் மீம்களைத் தெறிக்க விட்டனர் நெட்டிசன்ஸ். டிசம்பர் 31-ம் தேதி மாலை தொலைக்காட்சியில் தோன்றிய மோடி, கர்ப்பிணிப் பெண்களுக்கு அக்கவுன்ட்டில் பணம் செலுத்துவது உட்பட சில திட்டங்களை பட்ஜெட்டிற்கு முன்னரே அறிவித்ததோடு, புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்த உரை முடிந்த சிறிது நேரத்தில், நியூ இயர் கொண்டாட்டங்களையும் தாண்டி, ட்விட்டர் ட்ரெண்ட்டில் #Modi முதலிடம் பிடித்தார். ஏ.டி.எம்-ல எப்ப சார் பணம் வரும்?

வம்பிழுத்த மல்லையா

சர்ச்சைக்குப் பெயர்பெற்ற விஜய் மல்லையா தற்போது லண்டனில் தஞ்சம் புகுந்திருந்தாலும், இந்திய அரசியல் நிலவரங்களைப் பற்றி தனது கருத்துகளை அவ்வப்போது வெளியிட்டு சர்ச்சை திரி கொளுத்திவருகிறார். தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மோடி அரசு விவசாயிகளுக்குக்கூட தொழில்நுட்பத்தைக் கொண்டு சேர்க்கிறது. ஆனால் அமலாக்க அமைப்புகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்த மறுக்கின்றன. மோடியின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள குற்றவியல் ஏஜென்சிகள், நடுநிலையாகச் செயல்பட வேண்டும்’ எனக் கூறி மோடியை வம்புக்கு இழுத்திருக்கிறார். நெட்டிசன்கள் மல்லையாவை ட்ரோல் செய்ததால், #Mallya பெயர் ட்ரெண்ட் ஆனது. ஹூம்...ம். அவங்க பிடிச்சு உட்கார வெச்சிருந்தா இப்படியெல்லாம் பேசியிருப்பாரா?

வைரலான அன்பு

ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த பத்து வயதான `டெய்லர்’ என்ற சிறுவனின் புகைப்படம், கடந்த வாரம் இணையத்தில் வைரலானது. புகைப்படத்தில் அடர்ந்த முடியோடு இருக்கும் டெய்லரைப் பார்த்தால், இது சிறுவனா? சிறுமியா? என்றே பலருக்கும் சந்தேகம் வரும். ஆனால் Alopecia என்ற நோயால் பாதிக்கப்பட்டு முடி கொட்டும் தனது தோழிக்கு விக் தயார் செய்யவே, கடந்த இரண்டு ஆண்டுகளாக முடி வளர்த்து வருகிறான் இந்தச் சிறுவன். தகவல் அறிந்து இணையத்தில் பலரிடமிருந்தும் டெய்லருக்கு வாழ்த்துகள் குவிந்துகொண்டிருக்கின்றன. அவன் பெயரில் டேக் ட்ரெண்டாகி வருகிறது. உள்ளத்தால் உயர்ந்தவன்!

உறுதிமொழி ஃபீவர்

இந்தியக் குடிமக்களை சில்லறைக்காகவும், ஏ.டி.எம் தேடியும் அலைக்கழிச்சு ஒருவழியாக 2016-ம் ஆண்டு முடிந்துவிட்டது. புத்தாண்டு பிறந்த நிலையில், உலகம் முழுவதும் அதிகம்பேர் கூகுளில் தேடியது என்ன தெரியுமா? #newyearresolution எடுப்பதைப் பற்றிதான். உறுதிமொழி எடுக்க டிப்ஸ், கெட்டபழக்கங்களை விட என்ன செய்ய வேண்டும் போன்றவையெல்லாம் இது தொடர்பாகத் தேடிய உதிரி டாபிக்ஸ். அதுவும் சரியாக புத்தாண்டு பிறக்க அரைமணி நேரம் இருக்கும்போது 21 லட்சம் பேர் இதைப்பற்றித் தேடியிருக்கிறார்கள். எல்லாம் ஒரு வாரம்தானே!

வர்லாம் வா... ஷெர்லாக்!

துப்பறியும் கதாபாத்திரங்களில் ஜேம்ஸ் பாண்டிற்கு நிகராய் பிரபலமான கேரக்டர் ஷெர்லாக். இந்தக் கதாபாத்திரத்தை மையமாக வைத்து, திரைப்படத்திற்கு நிகரான பிரமாண்ட செலவில் தயாராகி ஒளிபரப்பான ஷெர்லாக் தொடர் உலக அளவில் பிரபலம். ஹெச்.பி.ஓ. நிறுவனம் தயாரித்திருக்கும் இத்தொடரின் நான்காவது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இது குறித்த ஃபர்ஸ்ட் லுக் வெளியான சிறிது நேரத்தில் #Sherlock ட்ரெண்ட் ஆனது. ட்விட்டரில் இந்த ட்வீட் 14 ஆயிரம் ரீ ட்வீட்கள் மற்றும் 23 ஆயிரம் லைக்குகளைத் தாண்டிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்தியா உள்பட பல நாடுகளில் கூகுளில் அதிகம் தேடப்படும் பெயராகவும் ஷெர்லாக் மாறியுள்ளது. தேடுங்க, கண்டடைவீர்கள்!

ஹாலிவுட் குசும்பு

டப்பிங் புண்ணியத்தில் ஹாலிவுட் சினிமாக்கள், தமிழகத்தின் பட்டி, தொட்டி யெங்கும் பரவிக்கிடக்கின்றன. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் அருகில் இருக்கும் ஹாலிவுட் என்ற நகரத்தில்தான் அமெரிக்கத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களைத் தயாரிக்கும் அலுவலகங்களும், ஸ்டுடியோக்களும் நிரம்பியுள்ளன. இதைக் குறிக்கும் விதமாக அருகில் உள்ள மலைப்பகுதியில் ‘ஹாலிவுட்’ என்ற உலகப்பிரசித்தி பெற்ற பிரமாண்ட போர்டு இருக்கும். ஆண்டுப் பிறப்பன்று சில குசும்புக்கார ஆசாமிகள், Hollywood என்பதை Hollyweed என மாற்றி அட்டகாசம் செய்துள்ளனர். கஞ்சாவைக் குறிக்கும் இவ்வார்த்தையை மாற்றிய நபர்களைக் காவல் துறை தேடிவருகிறது. ஆனால் புத்தாண்டு பிறந்த முதல்நாளே உலகம் முழுவதும் இந்தச் செய்தி பேசப்பட்டு #Hollyweed ட்ரெண்ட் ஆகியுள்ளது. லொள்ளு புடிச்சவங்க பாஸ்!

வெள்ளித்திரையில் மாரியப்பன்

பிரேசில் தலைநகர் ரியோ-டி-ஜெனிரோவில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இவரது வாழ்க்கை தற்போது திரைப்படமாக உருவாகிறது. மாரியப்பன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைக் கடந்த வாரம் பாலிவுட் நடிகர் ஷாருக் கான், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். சிறிது நேரத்தில் #Mariyappan #Mariyappanthangavelu ஆகியவை ட்ரெண்ட் ஆனதோடு, பிரபலங்கள் பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததில் ட்விட்டரில் மெயின் டாபிக் ஆனது. வீ ஆர் வெயிட்டிங்!

டைட்டானிக்

டைட்டானிக் கப்பல் பற்றிய விளக்கமே தேவையில்லை என்னும் அளவிற்கு நம் அனைவருக்கும் அதைப்பற்றித் தெரியும். பிரமாண்டமான அந்தக் கப்பல் பனிப்பாறையில் மோதி மூழ்கியதாகத்தான் நம்பப்பட்டு வருகிறது. ஆனால் எரிபொருள் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கப்பல் தனது இறுதிப் பயணத்தை தொடங்கும் முன்னரே பலவீனமாக இருந்ததாகவும், இதன் காரணமாகத்தான் கப்பல் மூழ்கியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். கப்பல் தனது பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இதற்கான ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இதன் காரணமாக இணையத்தில் மீண்டும் #Titanic வலம் வந்தது. ஒரு முடிவுக்கு வாங்க பாஸ்!

- ட்ரெண்டிங் பாண்டி