விற்கிற விலைவாசிக்கு பியூட்டி பார்லர்லாம் எதுக்கு? வீட்டிலேயே ஏதாவது செய்யலாம்னு முடிவெடுத்து களத்துல இறங்கிப் பட்டபாடு இருக்கே...

* அதாவது நாம செய்ய நினைக்கிற ஃபேஸ் பேக்குக்கான பொருட்களின் எண்ணிக்கை அஞ்சுனா, அதுல மூணு கண்டிப்பா நம்மகிட்ட இருக்கவே இருக்காது. பத்துவிதமான பொருளையும் பக்குவமா அரைச்சுத் தேய்ச்சாலே `ஙே'னுதான் இருக்கும். இதுல இருக்கிறதை வெச்சு அட்ஜெஸ்ட் பண்ணினா ரிசல்ட் வேற எப்படி இருக்கும்? அதே அதேதான்!

* `நான் பெற்ற துன்பம் எல்லோரும் பெற்றே ஆகணும்'கிறதுல மட்டும் குறியா இருப்பாங்க. `ஐப்ரோ த்ரெட்னிங் பண்ணிவிடுறேன்டி'னு ஜியாக்ரஃபி சேனல் பார்த்துட்டு இருக்கிற சின்னப்பிள்ளையைலாம் கூப்பிட்டு வெச்சு அலியாபட் புருவம் மாதிரி இருந்ததை தையல் போட்ட ‘அன்பே சிவம்’ கமல் புருவம் மாதிரி மாற்றிடுவாங்க. பயங்கரம்!

* அறிவியலுக்கு ஒரு எலின்னா ஃபேஷியலுக்கு இருக்கவே இருக்கு வீட்டுலேயே ரெண்டு ஜீவன்கள். எப்படியாச்சும் ஆசை வார்த்தை காட்டி அம்மா, தங்கச்சி முகத்துல தடவி நாம பண்ணிக்கப் போற அயிட்டத்தையெல்லாம் அவங்களை வெச்சுத் தேறுமா, தேறாதா, மிக முக்கியமா இருக்கிற முகத்துக்கு ஏதும் டேமேஜ் ஆகுதா இல்லையானு டெஸ்ட் பண்ணிக்கலாம். பாவம்யா!

* `பஜ்ஜி செய்யலாம், போண்டா செய்யலாம்'னு இனி விளம்பரம் போடுறதை விட `இதுல ஃபேஷியல் செய்யலாம்'னே கடலைமாவுக் கம்பெனிகள் விளம்பரம் பண்ணலாம். ஏன்னா அந்த அளவுக்கு முகத்துக்குதான் புள்ளைங்க அதை யூஸ் பண்ணுதுக. கடலைமாவுல பஜ்ஜி செய்யலாம்கிறதுகூட சில பேருக்குத் தெரியாதுனா பாத்துக்கோங்களேன். அந்த அளவுக்கு அது பியூட்டி மெட்டீரியலாகவே ஆகிப்போச்சு. அவ்வ்வ்வ்!

* இதுவரைக்கும் உடைச்சதெல்லாம் பத்தாதுனு அடுத்ததாக வீட்டுல சாம்பாருக்கு வாங்கி வெச்சிருந்த காய்கறியையெல்லாம் ஃபேஸ் பேக்காக்கி சில பேர் கலவரம் பண்ணுவாங்க. ரிசல்ட்டு வந்த பிறகுதான் முகம் போச்சேங்கிறதைவிட சாம்பார் போச்சேனு ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க.

* ஃபிரிட்ஜ்ல இருக்கிற முட்டையையும் தயிரையும் ஆட்டயப்போட்டு ரூம்ல யாருக்கும் தெரியாமல் மஞ்சமஞ்சேள்னு முகத்துல அப்பி அதைப் பாட்டி பார்த்து மயங்கி விழுந்த கதையை எல்லாம் புத்தகமாகவே தொகுத்து பொங்கலுக்கு புக் ஃபேர்ல ரிலீஸ் பண்ணலாம். அம்புட்டு இருக்கு. ஆமா அனுபவம்தான்!

* மாதுளம்பழத்தை தேய்ச்சா உதடு சிவப்பாகும்னு எதோ ஒரு எஃப்.எம்ல சொன்ன டிப்ஸைக் கேட்டு பிஞ்சுக்காயை வெச்சு தேய்தேய்னு தேச்சு உதடு என்னங்க உதடு... ஒட்டுமொத்த வாயே சிகப்பாகிடுச்சு. பின்னே... ரத்தம் பச்சைக் கலர்லயா இருக்கும்?

இதெல்லாம் வெறும் முகத்துக்கு மட்டும் நடக்கிற அக்கப்போர். இன்னும் தலைமுடியில ஆரம்பிச்சு கால் நகம் வரைக்கும் டிப்ஸ் இருக்கு. அதை இன்னொரு தடவை பார்ப்போம். இப்போ செமத்தியான பியூட்டி டிப்ஸ் ஒண்ணு சிக்கி இருக்கு. போய் ட்ரை பண்ணிட்டு வந்துடுறேன் ஃப்ரெண்ட்ச்!

- சங்கீதா