ஏ.டி.எம் வெளியே
‘நோ சர்வீஸ்’ போர்டு
சித்தார்த்தன் புத்தனாகிறான்!

நீண்ட வரிசையில்
நின்று விலகுகின்றன
பணம் கிடைக்காத
ஜோடிக்கால்கள்!

ஏ.டி.எம் வரிசையில் காத்துக்கிடக்கும்
அத்தனை பேரிடமும்
மோடிக்கு அடுத்தபடியாக
வாங்கிக் கட்டிக்கொள்கிறான்
மூன்று கார்டுகளைத் தேய்க்கும்
எவனோ ஒருவன்!

அட்ராசிட்டி
என்ற தலைப்பில்
மிகச்சிறிய
கவிதை கேட்டார்கள்...
‘சின்னம்மா’
என்றேன் உடனே!
கேட்ட தலைப்பு
வெறுமை என்றிருந்தால்
இன்னும் சின்னதாய்
சொல்வேன்
ஏ.டி.எம்... என்று!

ஏ.டி.எம் வாசலில்
எதிரே வந்தவர்...
‘இருக்கிறதா?’ என்றார்
‘இல்லை’ என்றேன்
எது என்று அவரும் கேட்கவில்லை
நானும் சொல்லவில்லை!

‘எல்லையில் அங்கே’
என ஆரம்பித்தவனிடம்
முன் இருந்தவர்
‘நான் ரிட்டயர்டு ஆர்மிப்பா’
எனப் பதில் சொன்னார்.
சிவன் தன்
முதுகுத்தழும்பைத் தடவிக்கொண்டான்.

அனைவருக்கும் வாய்ப்பதில்லை...
லன்ச் பாக்ஸ் உடன்
பேங்க் வந்தவனின்
சாமர்த்தியம்!

வரிசையிலிருந்து விலகிய
கால்கள் இரண்டு
செல்லாத ஏ.டி.எம்-களில்
தன் ஏமாற்றத்தைச் செருகிச் செல்கிறது...

- கருப்பு

ஏ.டி.எம் வெளியே
‘நோ சர்வீஸ்’ போர்டு
சித்தார்த்தன் புத்தனாகிறான்!

நீண்ட வரிசையில்
நின்று விலகுகின்றன
பணம் கிடைக்காத
ஜோடிக்கால்கள்!

ஏ.டி.எம் வரிசையில் காத்துக்கிடக்கும்
அத்தனை பேரிடமும்
மோடிக்கு அடுத்தபடியாக
வாங்கிக் கட்டிக்கொள்கிறான்
மூன்று கார்டுகளைத் தேய்க்கும்
எவனோ ஒருவன்!

அட்ராசிட்டி
என்ற தலைப்பில்
மிகச்சிறிய
கவிதை கேட்டார்கள்...
‘சின்னம்மா’
என்றேன் உடனே!
கேட்ட தலைப்பு
வெறுமை என்றிருந்தால்
இன்னும் சின்னதாய்
சொல்வேன்
ஏ.டி.எம்... என்று!

ஏ.டி.எம் வாசலில்
எதிரே வந்தவர்...
‘இருக்கிறதா?’ என்றார்
‘இல்லை’ என்றேன்
எது என்று அவரும் கேட்கவில்லை
நானும் சொல்லவில்லை!

‘எல்லையில் அங்கே’
என ஆரம்பித்தவனிடம்
முன் இருந்தவர்
‘நான் ரிட்டயர்டு ஆர்மிப்பா’
எனப் பதில் சொன்னார்.
சிவன் தன்
முதுகுத்தழும்பைத் தடவிக்கொண்டான்.

அனைவருக்கும் வாய்ப்பதில்லை...
லன்ச் பாக்ஸ் உடன்
பேங்க் வந்தவனின்
சாமர்த்தியம்!

வரிசையிலிருந்து விலகிய
கால்கள் இரண்டு
செல்லாத ஏ.டி.எம்-களில்
தன் ஏமாற்றத்தைச் செருகிச் செல்கிறது...

- கருப்பு