‘பியர்டு ஐகான் ஆஃப் தமிழ்நாடு' -ஆகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார் வெக்கி சிம்பு. நீளமான தாடி, விதவிதமான ஹேர் ஸ்டைல் மூலம் பலருக்கும் பரிச்சயமான மாடல். திருச்சியைச் சேர்ந்தவர். அவரைச் சந்தித்தால், வாஞ்சையுடன் குழந்தையைத் தடவுவதுபோல நொடிக்கு ஒருமுறை தாடியைத் தடவிக்கொண்டே பேசுகிறார்.

‘`நீண்ட தாடி வளர்க்கும் எண்ணம் வந்தது எப்படி?’’

‘`காலேஜ் ஃபைனல் இயர் படிக்கும்போதே நிறைய தாடி வளர்க்க ஆரம்பிச்சிட்டேன். சினிமாவுல நடிக்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்னு தெரிஞ்சதால, காலேஜ்லயும் எதுவும் சொல்லலை. இந்தப் பெரிய தாடியை, கடந்த மூணு வருஷமா வெட்டாம வளர்த்துக்கிட்டு இருக்கேன்.’’

‘`காதல்ல தோல்வி அடைந்தவங்கதான் தாடி வளர்ப்பாங்க. உங்க தாடியைப் பார்த்தா, நிறைய முறை தோல்வி அடைந்த மாதிரி தெரியுதே?’’

‘`அதெல்லாம் இல்லை பாஸ். காலேஜ் முதல் வருடம் படிக்கும்போது ஒரு பொண்ணு மேல ஆசை இருந்துச்சு. ஆனால், அந்தப் பொண்ணுக்கு என்னைப் பிடிக்கலை. அதுக்காகவெல்லாம் தாடி வளர்க்கலை. இது என் தாடி மேல சத்தியம், நம்புங்க பாஸ்!’’

‘`தாடியை எப்படி மெயிண்டெய்ன் பண்றீங்க?’’

‘`ஒருத்தரோட தலைமுடி எப்படி இருக்குமோ, அதேமாதிரிதான் தாடியும் இருக்கும். ஷாம்பு, கண்டிஷ்னர், எண்ணெய் எனத் தலைமுடியை எப்படியெல்லாம் பராமரிக்கிறீங்களோ, அப்படித்தான் தாடியையும் பராமரிக்கணும். தினமும் தண்ணீரால சுத்தப்படுத்தணும். இப்போ, தாடிக்கு என பிரத்யேகமாக எண்ணெய், கிரீம் எல்லாம் வந்திடுச்சு.’’

‘`நிறைய செலவாகும் போலயே..?’’

‘`பின்னே, நான் தினமும் ஒரு அவகோடா பழம் சாப்பிடுறேன். அதுலதான் நிறைய சத்துகள் இருக்கு. சமயங்கள்ல, அந்தப் பழத்தையே நேரடியா தாடியில் அப்ளை செய்வேன். ஆனால், அந்தப் பழத்தோட விலை அதிகம். அப்புறம், எண்ணெய், அது இதுன்னு மாசம் ஐயாயிரத்துக்குக் குறையாம செலவாகும்.’’

‘`இவ்வளவு கஷ்டப்பட்டு தாடி வளர்க்குறதுனால என்ன பயன்?’’

‘`என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? என்னைப் பல பேருக்குத் தெரிய வெச்சதே இந்தத் தாடிதான். சினிமாவுல நடிக்க ஆசைப்பட்ட என்னை, மாடல் ஆக்கினது இந்தத் தாடிதான். இன்னைக்கு தென்னிந்தியாவுலயே `பியர்டு மாடல்'னா, அது நான் மட்டும்தான். என்னைப் பார்த்துதான் இப்போ நிறையபேரு தாடி வளர்க்க ஆரம்பிச்சிருக்காங்க.’’

‘`இந்தத் தாடியோட வெளியில போனா, வித்தியாசமா பார்ப்பாங்களே?’’

‘`ஆமா பாஸ். அதுவும் ஊருக்குப் போனா, எல்லாரும் ஒருமாதிரியா பார்ப்பாங்க. ஒருமுறை கடை வாசல்ல வண்டியை பார்க் பண்ணும்போது, ஒரு பொண்ணு என்னைப் பார்த்து `காட்' னு கத்திடுச்சு. இப்படிப் பல சம்பவங்களைக் கடந்தது இந்தத் தாடியோட வரலாறு.’’

‘`சினிமா முயற்சிகள் எந்த அளவுல இருக்கு?’’

‘`இந்தத் தாடியைப் பார்த்திட்டுதான் வாய்ப்பு வந்தது. ஒரு படத்துல தாடி வளர்க்குற கேரக்டர்லயே நடிச்சிருக்கேன். இன்னொரு படத்துல முக்கியமான நெகட்டிவ் ரோல் பண்ணியிருக்கேன். இன்னும் ரெண்டு படங்கள் பேச்சுவார்த்தைல இருக்கு.’’

‘`லட்சியம்?’’

`` ‘நோ ஷேவ் நவம்பர்’ இப்போ எல்லா இடத்துலயும் பிரபலமாகிட்டு வருது. அதாவது, நவம்பர் மாசம் முழுக்க ஷேவ் பண்ணாம, அதுக்கு ஆகுற காசை சேர்த்துவெச்சு, அந்தக்காசை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுப்பாங்க. அமெரிக்காவில் தொடங்கப்பட்ட இந்த விஷயம், இப்போ தமிழ்நாட்டுலயும் பயங்கர ஃபேமஸ் ஆகிடுச்சு. அதை, இன்னும் பெரிய அளவுல கொண்டு போகணும்.''

- சி.காவேரி மாணிக்கம்