Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா! - இதெல்லாம் ஜோக்கா...நாளைக்கு சிரிக்குறேனே!

அனுஷா... ஆதிரா... இனியா! - இதெல்லாம் ஜோக்கா...நாளைக்கு சிரிக்குறேனே!

டிஜிட்டல் கச்சேரி

அனுஷா... ஆதிரா... இனியா! - இதெல்லாம் ஜோக்கா...நாளைக்கு சிரிக்குறேனே!

டிஜிட்டல் கச்சேரி

Published:Updated:
அனுஷா... ஆதிரா... இனியா! - இதெல்லாம் ஜோக்கா...நாளைக்கு சிரிக்குறேனே!

‘அனு...பொங்கலுக்கு டிரெஸ் எடுத்தாச்சா?’

‘அதான் சேலை கட்டிக்கக் கத்துக் கிட்டோம்ல... இந்த வருஷம் மூணு பேருமே சேர்ந்து சேலைதான் வாங்கணும்... டாட்!’

அனுஷா... ஆதிரா... இனியா! - இதெல்லாம் ஜோக்கா...நாளைக்கு சிரிக்குறேனே!

‘பார்றா... அனு, நீ சேலைக்கட்ட கத்துக்கிட்டதால நாங்களும் கட்டிக்கணுமா என்ன?’

‘புடவையைக் கட்டிக்கிட்டு அதை தூக்கி செருகிட்டு, வியர்த்து விறுவிறுத்துப் போயிடுது...நமக்கு எப்பவுமே சல்வார்தான் பெஸ்ட் சாய்ஸ்.’

`ஆதிரா, சேலை கட்டிக்கப் பிடிக்காமப் போறதுக்கு ஒரு டஜன் காரணங்கள்கூட இருக்கலாம். ஆனால், நம்மோட பாரம்பர்ய பண்டிகையை, பாரம்பர்ய உடையோட கொண் டாடிப் பாரேன். அவ்ளோ கலர்ஃபுல்லாவும் சந்தோஷமாவும் இருக்கும்.’

‘ஆமால்ல... சேலையைக் கட்டிக்கிட்டு கையில கரும்பு வெச்சுக்கிட்டு, பக்கத்துல பொங்கல் பொங்குறப்ப ஒரு செல்ஃபி எடுத்தோம்னு வையி...’

‘எடுத்து..?’

‘எடுத்து... அதை ஃபேஸ்புக்ல அப்லோடு பண்ணினா லைக்ஸ் பிச்சிக்குமே.’

‘உன் நினைப்புல தீயை வைக்க. எப்பப் பார்த்தாலும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப். ஏம்ப்பா... அந்த மாய உலகத்துல இருந்து மீண்டு நிஜ வாழ்க்கையை அனுபவிக்கத் தோணவே தோணாதா உனக்கு?’

‘ஹாஹா... சும்மா சொல்லிப் பார்த்தேன். நீங்க என்ன சொல்றீங்கன்னு பார்க்கலாம்னு.’

‘சரி... பொங்கலுக்கு என்ன பிளான்?’

‘ நம்ம தமிழ் ஆசிரியை சியாமளா அம்மா...இப்ப என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னு தெரியுமா?’

‘தெரியாதே... என்ன ஆச்சு அவங்களுக்கு?’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனுஷா... ஆதிரா... இனியா! - இதெல்லாம் ஜோக்கா...நாளைக்கு சிரிக்குறேனே!

‘அவங்களுக்கு ஒண்ணுமில்லை. ஆனா, ரிடையர்மெண்டுக்குப் பிறகு முழுநேர விவசாயியா மாறிட்டாங்க. அவங்களுக்கு ஒரு குட்டி நிலம் இருக்கு. அதுல வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் பயிரிட்டு, சின்ன லாபத்தோட வாட்ஸ் அப்ல மூலமா மார்க் கெட்டிங் செஞ்சு விற்பனை பண்ணிட்டு இருக்காங்க.’

‘வாவ்... நல்ல விஷயம்ல!’

‘ஆமா... அவங்களைத்தான் பொங்கலுக்குப் போய் மீட் பண்ணலாம்னு நினைக்கிறேன்.’

‘ஹேய்... சூப்பர்பா... நானும் வரேன்.’

‘சியாமளா டீச்சர் போலவே எனக்கும் ஒரு யூடியூப் டீச்சரை தெரியும். அவங்க பேரு ரூபி கேத்தரின் தெரசா. கணக்கு டீச்சர். கணக்குப் பாடத்தை ரொம்ப ஈஸியா சொல்லிக் கொடுத்து, அதை யூடியூப்ல அப்லோடு பண்ணியிருக்காங்க. இப்படி சில பேர் நல்லது பண்றதைப் பார்க்குறப்ப நமக்கும் எனர்ஜி கூடுது!’

‘எனக்கு இப்ப யாரையாவது அடிக்கணும் போல இருக்கு.’

‘இப்ப அப்படி என்ன சம்பவம் நடந்துச்சு?’

‘பாஸிடிவ் விஷயங்களைப் பேசி எனர்ஜி ஏறிடுச்சுல அதான்.’

‘இதெல்லாம் ஜோக்குன்னு சொன்னா, நான் நாளைக்கு சிரிக்குறேனே...’

‘ஈஈஈஈஈ....’

‘ஓகே கம் டு த பாயிண்ட். இது குளிர்காலம்னு நாம பழங்கள் எடுத்துக்காம இருப்போம். ரைட்டா?!’

‘ஆமா... ரைட்டு’

‘ஆனா... அதுதான் தப்பு... பழங்கள் சாப் பிட்டாதான் பனிக்காலத்துல ஏற்படக்கூடிய சருமப் பாதிப்புகள்ல இருந்து நம்மை காப் பாத்திக்க முடியும்.’

‘இப்ப நான் சொல்றேன்... இன்னைக்கு நம்ம டார்கெட் ஃப்ரூட் ஷாப். அதானே?!’

‘பர்ஃபெக்ட்...ரெடி ஜூட்!’

- கச்சேரி களைகட்டும்...

அனுஷா... ஆதிரா... இனியா! - இதெல்லாம் ஜோக்கா...நாளைக்கு சிரிக்குறேனே!

சத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணையதள முகவரியைத் தொடருங்கள். அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

அனுஷா... ஆதிரா... இனியா! - இதெல்லாம் ஜோக்கா...நாளைக்கு சிரிக்குறேனே!

யூடியூபில் கலக்கும் நம்மூர் கணக்கு டீச்சர்!

http://bit.ly/2iPmntD

அனுஷா... ஆதிரா... இனியா! - இதெல்லாம் ஜோக்கா...நாளைக்கு சிரிக்குறேனே!

பழங்களில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

http://bit.ly/2iPnr0w

அனுஷா... ஆதிரா... இனியா! - இதெல்லாம் ஜோக்கா...நாளைக்கு சிரிக்குறேனே!

இந்த 12 காரணங்களால்தான் பெண் களுக்குச் சேலை கட்டிக்கொள்ளப் பிடிக்க வில்லையாம்!

http://bit.ly/2hZSOEb

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism