பிரீமியம் ஸ்டோரி
கண்ணிலே கலைவண்ணம்!

படம்: யது போட்டோகிராஃபி

`கண்ணுக்கு மை அழகு’தான். ஆனால் மை மட்டுமா அழகு? திருமண மகிழ்ச்சியில் பட்டாம் பூச்சியாய் படபடக்கும் மணப்பெண்ணின் கண்களை நிச்சயதார்த்தம், முகூர்த்தம், ரிசப்ஷன் என ஒவ்வொரு நிகழ்வுக்கும் விதவிதமாய் அழகாக்கி காட்ட கொட்டிக் கிடக்கும் `ஐ மேக்கப்’கள் ஏராளம். `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என மாப்பிள்ளையை பாட வைக்கும் ‘ஐ மேக்கப்’ டெமோவை வழங்குகிறார் சென்னை, அண்ணாநகரில் உள்ள ‘ஸ்ரீபிரைடல் க்ரியேஷன்ஸ்’ உரிமையாளரும், பியூட்டீஷியனுமான ஸ்ரீதேவி ரமேஷ்.

கண்ணிலே கலைவண்ணம்!
கண்ணிலே கலைவண்ணம்!
கண்ணிலே கலைவண்ணம்!

அட்ராக்டிவ் அரேபியன் ஐ மேக்கப் அரேபிய அழகுக் கண்களின் நீலநிற லுக்கினை மணமகளுக்கு தரக்கூடிய ஐ-மேக்கப் வகை இது. சில்வர் நிற பூச்சை இரண்டு கண்களின் உட்பக்க இமை வளைவுகளிலும் தீட்ட வேண்டும். பின்பு, நீல நிற ஐஷேடினை கண் இமையின் மேற்பகுதியில் முழுவதுமாக பூசிவிட்டு, வெளிப்புற இமையோரங்களில் கறுப்பு நிற ஐ ஷேடோவால் வளைவுகளை வரைந்துவிட்டால் நீல நிறத்தில் மனதை மயக்கும் அரேபிய லுக் கிடைத்துவிடும். கூடவே காஜல், ஐ லைனர், மஸ்காராவால் ஃபினிஷிங் டச் கொடுத்தால், அரேபியன் ஐ மேக்கப்பில் ரெடியாகிவிடலாம்...திருமண பார்ட்டி, சங்கீத், ரிஷப்ஷனுக்கேற்ற வைப்ரண்ட் லுக் இது.

கண்ணிலே கலைவண்ணம்!
கண்ணிலே கலைவண்ணம்!

டிரமாடிக் ஸ்மோக்கி ஐஸ் பார்ட்டிகளில் அணியக்கூடிய நவநாகரிக உடைகளுக்கான `ஐ மேக்கப்’ இது. அடர்கறுப்பு நிறம் மற்றும் ஊதா கலந்த ஐ ஷேடோவால் கண் இமைகளின் மேற்புறம் மற்றும் கீழ் கண் இமைகளின் வெளிப்பகுதி என ஐஷேடோவை பூச வேண்டும். பின்னர், சில்வர் நிற துகள்களால் ஆன கண் களுக்கென பிரத்யேகமாக இருக்கும் ஐ-க்ளிட்டரை கண் இமைகளின் மேற்பகுதியில் லேசாக ஒற்றியெடுத்து, காஜல், ஐலைனர், மஸ்காராவால் அழகுபடுத்தினால் சொக்க வைக்கும் `ஐ மேக்கப்’பில் பார்ட்டிக்கு கிளம்பி விடலாம்.

கண்ணிலே கலைவண்ணம்!
கண்ணிலே கலைவண்ணம்!

டூ ஷேட் ஐ ஷேடோ லுக் அதிகாலை முகூர்த்த நேரத்துக்கு அழகை வாரித் தரும் `ஐ மேக்கப்’ இது. திறந்தவெளியில் நடைபெறக்கூடிய முகூர்த்தத்துக்கும் இந்த ஸ்டைல் மேக்கப் நல்ல சாய்ஸ். ஒளிரும் தன்மை யுடன் கூடிய நிறமற்ற ஐ ஷேடோ மற்றும் பிரவுன் நிற ஐ ஷேடோவை கண் இமைகளின் மேற்புறம் மற்றும் கீழ் கண் இமைகளின் வெளிப்பகுதியில் பூச வேண்டும். பிறகு காஜல், ஐலைனர், மஸ்காராவால் கண்களுக்கு ஃபினிஷிங் டச் கொடுத்தால் சிம்பிள் அண்ட் நீட் லுக்கில் கண்கள் ஜொலிப்பது நிச்சயம்.

கட் க்ரீஸ் ஐ மேக்கப் மணமகளை அழகு தேவதை யாக மிளிரச்செய்யும் `ஐ மேக்கப்’ இது. மிதமான பிங்க் நிற ஐ ஷேடோவை கண் இமைகளின் மேற்புறம் மற்றும் கீழ் கண் இமை களின் வெளிப்பகுதியில் பூச வேண்டும். பின்பு அதன்மேல் கிளாஸிக் லுக் தரும் அடர் பிங்க் நிற ஐ ஷேடோவால் `டச் அப்’ செய்து கொள்ள வேண்டும். தேவையெனில் பிங்க் நிற க்ளிட்டர்களும் உப யோகிக்கலாம். இறுதியாக காஜல், ஐலைனர், மஸ்காரா என பினிஷிங் டச் கொடுத்தால் கொஞ்சும் கண்கள் ரெடி.

கண்ணிலே கலைவண்ணம்!
கண்ணிலே கலைவண்ணம்!

“கண்களுக்கு எப்போதும் போதுமான ஓய்வு அவசியம். கருவளையம், சோம் பலான கண்களைத் தவிர்க்க அதற்கானபயிற்சிகளையும் மேற்கொள்வது நல்லது. நல்ல உணவும், சரியான தூக்கமும் மேக்கப்பைவிட கண்களுக்கு இன்றியமை யாதது” -மேக்கப் டிப்ஸுடன் கண்கள் பராமரிப்பின் முக்கியத்து வத்தையும் முத்தாய்ப்பாய் சொல்லி முடித்தார் ஸ்ரீதேவி.

- பா.விஜயலட்சுமி

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்
மாடல்: திவ்யா
மேக்கப் - ஸ்ரீதேவி ரமேஷ் (ஸ்ரீ பிரைடல் க்ரியேஷன்ஸ்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு