பிரீமியம் ஸ்டோரி
தேவதைப் பெண்ணே!

நிச்சயம் முடித்த பெண்ணைப் பார்க்கும் அனைவரும் முதலில் சொல்வது ‘முகத்துல கல்யாணக்களை வந்துடுச்சு...’ என்பதுதான். அப்படிப் பட்ட களையான முகத்தை மேலும் மெருகூட்டுவதுதான் மேக்கப் கலைஞர்களின் திறமை. முன்பெல்லாம் பியூட்டி பார்லர்களுக்குச் சென்று மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வதுபோல் இல்லாமல், மண மகளுக்கென தனித்துவமாக அலங்காரம் செய்வதற்கென மட்டுமே மேக்கப் செய்யக்கூடிய நிபுணர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் மணநாளை எதிர்கொள்ளவிருக்கும் பெண்களிடையே அதிக வர வேற்பைப் பெற்றிருக்கும், சென்னையைச் சேர்ந்த ‘பிரைடல் மேக்கப்’ கலைஞரான இப்ராஹிம்... திரைப்படங்கள், விளம்பரப்படங்கள் என இத்துறையில் அவர் வந்த பாதை மற்றும் மணப்பெண்ணை ஜொலிக்க வைக்கும் மேக்கப் சூட்சுமங்கள் என அனைத்தையும் பகிர்கிறார்...

“நான் முதன்முதலா விளம்பர ஷூட்டிங்கில் வலம் வரும் மாடல் களுக்கான மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாதான் என்னோட கரியரை ஆரம்பிச்சேன். நிறைய ஜுவல்லரி அட்வர்டைஸ்மென்ட்டுக்கு மேக்கப் கலைஞரா வேலை செய்யும்போது, அதில் நடிக்கும் மாடல் அப்படியே கல்யாணப்பொண்ணாவே மாறிவிடும் அளவுக்கு என்னோட வேலை இருக்கறதா எல்லாரும் பாராட்டுவாங்க. அப்பதான் ‘நாம ஏன் ரியல் லைஃப் மணமகளுக்கான மேக்கப் கலைஞரா ஆகக்கூடாதுன்னு யோசிச்சேன். டி.வி-யில் மட்டும்தான் பெண்கள் ஜொலிக்கணுமா என்ன?  அதே ஜொலிப்பை திருமணநாளில் மணமகளுக்கு கொடுக்கணும்’னு நினைச்சு களம் இறங்கி கிட்டத்தட்ட 17 வருஷம் ஆகிடுச்சு” எனும் இப்ராஹிமின் தந்தை 48 வருடங்களாக மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டாக பணியாற்றியிருக்கிறாராம்.

தேவதைப் பெண்ணே!

“பியூட்டி சலூனுக்கும் எங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அவங்களோட கஸ்டமர் சர்வீஸில் இருக்கும் மெனிக்யூர், பெடிக்யூர் போன்ற ஸ்கின் கேர் மாதிரி மேக்கப்பும் ஒரு கேட்டகிரி. ஆனா, நான் திரைப்படங்களுக்கும் வொர்க் பண்றதால எந்த லைட்டிங்குக்கு எப்படிப்பட்ட மேக்கப் தேவை, மேக்கப் எந்த அளவுக்கு இருக்கணும் என எல்லாத்தையும் மனசுல வெச்சுட்டு வேலை செய்வேன். பொதுவா மணமகளின் தோற்றம் மற்றும் உடைகளை வெச்சு மட்டும்தான் மேக்கப் எப்படி இருக்கணும்னு டிசைட் பண்ணுவாங்க. ஆனா, மணமகளுக்கான நகைகள்ல ஆரம்பிச்சு என்ன மாதிரியான கேமரா யூஸ் பண்ணப் போறாங்க, மண்டபத்தின் பேக்கிரவுண்ட் என எல்லாத்தையும் விசாரிச்சு, இது எல்லாத்துக்கும் ஏத்தமாதிரி மணமகளுக்கு ஒரு ரியல் அண்ட் பியூட்டிஃபுல் லுக் கொடுப்போம். ஸ்கின்ல அடுத்த அடுத்த லேயரா மேக்கப்பை மட்டும் போடறதுக்கும், ஒரு தனித்துவமான ஒரு லுக் க்ரியேட் பண்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. மேக்கப் போடாமல் புது லுக்கை கிரியேட் பண்றவங்கதான் பிரைடல் மேக்கப் ஆர்ட்டிஸ்ட்” என்கிறார்.

“மேக்கப் போடறதுக்கு முன்னாடி மூணு விஷயங்களை ஃபாலோ பண்ணுவேன். க்ளையன்ட் கொடுக்குற மேக்கப் ரெஃபரன்ஸ் அவங்களுக்கு பொருத்தமா இருக்குமா, இருக்காதான்னு தெளிவா சொல்லிடுவேன். அடுத்ததா க்ளையன்ட்டுக்கு எந்தமாதிரியான லுக் சூட் ஆகும்னு முடிவு எடுக்கறது; அவங்க போடும் உடைக்கு நாம போடற மேக்கப் பர்ஃபெக்ட்டா செட் ஆகுமான்னு டிசைட் பண்றது... இதுதான் என்னோட மேக்கப் சூட்சுமங்கள். மேக்கப்பில் நாம என்ன கத்துக்கிட்டோமோ அதை சோதனை செய்து பாக்குறதுக்கு கஸ்டமரை யூஸ் பண்ற பழக்கம் கூடவே கூடாது. சில க்ளையன்ட்ஸ் நான் வேறொருத்தருக்கு போட்ட மேக்கப்பின் புகைப்படத்தை என்னிடம் காட்டி அதேமாதிரி செய்யச்சொல்லி கேப்பாங்க. ஆனா, அதை அப்படியே செய்யாம அவங்களுக்கு ஏத்தமாதிரி சில மாற்றங்கள் செஞ்சுதான் மேக்கப் போடுவேன். இதுதான் என்னோட ஸ்டைல். கல்யாணப் பொண்ணு கேமராவுல மட்டும் இல்லாம நேர்லயும் அழகா இருக்கணும்னு கவனமா இருப்பேன்.  பார்க்கறப்போவும் லுக் அழகா இருக்கணும். நிறையபேர் பக்கத்தில் நின்னு பேசறப்போ, ‘என்ன இவ்ளோ மேக்கப்?’னு ஃபீல் பண்ணிடக்கூடாதுனு நினைப்பேன்.
அப்புறம் ட்ரெடிஷனல் ஈவென்டான நிச்சயம், முகூர்த்தம் மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு ஸ்கின் டோன் கொஞ்சம் மஞ்சள் டோனில் இருந்தா அழகா இருக்கும். ஐலைனர் தின் லேயரா இருக்கணும், கண்களை எடுப்பாவும் காட்டணும். செர்ரி ரெட் கலர் லிப்ஸ்டிக் அழகா இருக்கும். 

தேவதைப் பெண்ணே!

ரிஷப்ஷன்னு வந்துட்டா டிரெஸ்சுக்கு ஏத்தமாதிரி கலர்ஸ்ல விளையாடிடுவேன். அதுவும் ஈவ்னிங் ஃபங்ஷனுக்கு அழகா செட் ஆகும் ‘ஸ்மோக்கி ஐ லுக்’குக்கு எல்லாரும் பிளாக் கலர் யூஸ் பண்ணுவாங்க. ஆனா, நான் பிரவுன் கலர்தான் யூஸ் பண்ணுவேன். ஏன்னா பிளாக்கைவிட பிரவுன் கலர் கல்யாணப் பொண்ணை ஒரு தேவதை மாதிரி காட்டிடும். அப்புறம், பளபளக்கற மாதிரி ஹேர் லுக், முகமும் நல்ல க்ளோ ஆகுறமாதிரி என்னோட மேக்கப் இருக்கும்.” என தனது தொழி ரகசியத்தை பகிர்ந்த இப்ராஹிம் மேலும்...

தேவதைப் பெண்ணே!


“இந்த பீல்ட்ல என்னோட வெற்றிக்கு காரணம் என்னோட டீம். ஷபா, இவர் என்னோட மெயின் மேக்கப் ஆர்ட்டிஸ்ட். பயங்கர பர்ஃபெக்‌ஷனிஸ்ட். என்னோட எல்லா கமிட்மென்ட்ஸையும் அவர்தான் பார்த்துக்கறார். அடுத்தது ஹேர்ஸ்டைலிஸ்ட் விஜயராகவன். அழகான மேக்கப் மட்டும் பத்தாது... அதுக்கேத்த மாதிரி ஹேரும் செட் ஆகணும்ல, அதுவும் விஜய் கரெக்ட் டைமிங்கில் முடிச்சுக் கொடுக்கறதுல கில்லி. சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோயின்ஸுக்கு ஹேர் ஸ்டைலிங் பண்றார். அதே மாதிரி கோபி, ரசனையான கலைஞன். அவ்வளவு ரசிச்சு ரசிச்சு மேக்கப் போடுவார்.

இன்னொரு முக்கியமான விஷயம்... கல்யாணப் பொண்ணுக்கு மேக்கப், ஹேர் ஸ்டைல் எல்லாம் கரெக்டா அமைஞ்சு, புடவையை நேர்த்தியா கட்டலைன்னா நல்லா இருக்காது. அதுக்காகவே என் டீம்ல மூணு சாரி ட்ராப்பர்ஸ் இருக்காங்க. அனு, ஜீவிதா, சரசு. மூணு பேருமே ‘தி பெஸ்ட் சாரி ட்ரேப்பர்ஸ் இன் சென்னை’ என்று டீமுக்கும் நன்றி சொல்கிறார்.

என் டீமோட முக்கியமான ப்ளஸ் என்னென்னா... ஜோக்ஸ், எங்களுக்குள்ள கலாய்க்கறதுன்னு திருமண நாளுக்கான படபடப்பில் இருக்கும் கல்யாணப் பொண்ணை, சந்தோஷமா வெச்சுப்போம். மேக்கப்பைத் தாண்டி மலர்ந்த முகம்தானே பொண்ணுக்கான இயற்கை அழகு!” என்று அழகாக முடித்து வைக்கிறார் இப்ராஹிம்.

- பா.விஜயலட்சுமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு