Published:Updated:

`இந்த ஆஃப் சைடுன்னா என்னங்கய்யா?' - திடீர் ஃபுட்பால் ஃபேன்ஸின் அலப்பறைகள் #WorldCup

`இந்த ஆஃப் சைடுன்னா என்னங்கய்யா?' - திடீர் ஃபுட்பால் ஃபேன்ஸின் அலப்பறைகள்  #WorldCup
`இந்த ஆஃப் சைடுன்னா என்னங்கய்யா?' - திடீர் ஃபுட்பால் ஃபேன்ஸின் அலப்பறைகள் #WorldCup

.பி.எஸ்-ன் `தர்மயுத்தம்' தொடங்கியபோது இருந்ததை விட, தினகரனும், ஜெ.தீபாவும் `ஜினல்... ஜினல்... ஒரிஜினல்!' எனச் சொன்னபோது இருந்ததை விட... அடுத்த ஒரு மாதத்துக்கு `அப்புறம் ப்ரோ... உங்க சப்போர்ட் யாருக்கு?' என்ற கேள்வி `டாஸ்மாக் சூழ்' தமிழகத்தை ஆட்டிப் படைக்கவிருக்கிறது. ஆமா பாஸ்... ஃபுட்பால் வேர்ல்டு கப் ஸ்டார்ட் ஆகப்போகுது. ஆனா, அதுக்குள்ளயே சிலபேரோட அக்கப்போரும் ஸ்டார்ட் ஆகிருச்சு. காலம் காலமா ஃபுட்பால் பார்த்துட்டு வர்றவங்க கூட ட்விட்டர், ஃபேஸ்புக்ல அம்பியாய் வலம் வருவார்கள். ஆனால், `ஓ ஃபுட்பால்ங்கிறது ஸ்போர்ட்ஸா’ எனக் களத்தில் குதித்துள்ள `திடீர்’ ரசிகர்கள் செய்யும் அடாவடிகளை கொஞ்சம் அலசிப் பார்ப்போமா?!

 ஃபர்ஸ்ட் கோல் விழறவரைக்கும் எந்த டீம், எந்த கலர் ஜெர்சில விளையாடுதுனே தெரியாம குத்துமதிப்பா மேட்ச் பார்த்துக்கிட்ருப்பாங்க இந்தத் திடீர் ரசிகர்கள். விவரம் தெரியாம ஆரம்பத்துல எதிரணிக்கு சப்போர்ட் பண்ணிட்டு, கோல் போட்டதுக்கப்புறம் `இவ்வளவு நேரம் களவாணிப்பயகூடவா சகவாசம் வெச்சுருந்தோம்' என ஜெர்க் ஆவார்கள். சரி இந்த கலர் ஜெர்சிதான் இந்த டீம்னு மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணி வெச்சா, அடுத்த கேம்ல அதே டீம் வேற கலர் ஜெர்சியில வந்து ஏகத்துக்கும் குழப்பும். `அவே கலர்’ டீசர்ட் இருக்கிற விஷயமே அப்புறமா விசாரிச்ச பிறகுதான் தெரியும்.

திடீர் ரசிகர்களுக்கு வரும் இன்னொரு மிகப்பெரிய குழப்பம், ஃபுட்பாலுக்கு எதுக்கு டாஸ்? அதாவது... காருக்கு எதுக்கு அச்சாணி? கிரிக்கெட்ல டாஸ் போடுறது பேட்டிங், பெளலிங் தேர்ந்தெடுக்க... ஆனா, ஃபுட்பாலைப் பொறுத்தவரை மாறிமாறி ரெண்டு பக்கமும் ஓடப்போறாங்க. இதுக்கெதுக்கு டாஸ்? நியாயமான கேள்விதானே!

ஃபுட்பால் ரசிகரா ஃபார்ம் ஆகிறவங்க செய்யும் அலப்பறையில் பொறுத்துக்கவே முடியாதது என்னன்னா... எங்கேயாவது விமர்சனம் படிச்சுட்டு, `இந்த மேட்ச்ல இந்த டீம் ஜெயிக்கத்தான் அதிக வாய்ப்பு. ஜக்கம்மா சொல்றா’ ரேஞ்சுக்கு ஜோசியம் பார்க்கக் கிளம்பிடுவாங்க. அதிலும் சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், நான் சொன்னது நடக்கலைனா, இனி சோஷியல் மீடியா பக்கமே வரலைனு சீன் போடுவாங்க. `பெரிய கலெக்டர் வேலை. ரிசைன் பண்ணிட்டுப் போறாரு'-னு நமக்கு கவுன்டர் வாய்ஸ் மனதில் ஓடும்!

ரெண்டு சீனியர் ரசிகருங்க பேசுறதைக் கேட்டுட்டு, அடுத்த ஃபுட்பால் மேட்ச்ல அது எல்லாத்தையும் `அன்பே சிவம்’ சந்தானபாரதி மாடர்ன் ஆர்ட் ஓவியத்தை நாசருக்கு விளக்கிட்டு `நானே உத்து உத்துப் பார்த்துக் கண்டுபிடிச்சேன்’னு சொல்றது மாதிரி, தன்னோட சொந்தக் கருத்தா நைஸா எடுத்துவிடுவாங்க பாருங்க! அடாடடடடா!

இன்னும் சிலர் ஃபுட்பால் முடியறவரைக்கும் ஆன்லைன்ல உள்ள பசங்ககிட்ட தப்பித்தவறியும் பேசிடக் கூடாதுங்கிற கொள்கையோட இருப்பாங்க. `ஹே நைஸ் கோல்யா’ என்று சீன் போடும் ஃபிகருங்க ப்ரொஃபைலில் குத்தவெச்சு உட்கார்ந்து கமென்ட் போடும் பசங்களைப் பார்க்கும்போது `இந்த வீட்ல மீச வெச்ச ஆம்பளைங்க 28 பேரு இருக்கோம். ஆனா எப்போ பாரு பொண்ணுங்க கூடத்தான் நீ பேசிட்ருக்க’னு சந்தானம் மாதிரி திட்டத் தோணும். ஆனா எங்கே ஃபிகர் கோச்சுக்குமோனு பயந்து இதை கமென்ட்டா போட மாட்டோம்!

கோலுக்குப் போற பந்தை கோல்கீப்பர் தடுத்துட்டா, உடனே `வெல் கீப்பிங்’ என ட்வீட் பறக்கும். சீனியர் ரசிகர்கள் அதுக்குப் பேர் `Save’ எனத் தலையில் அடித்துக்கொள்வார்கள். சில நேரம் வெளியே போகிற வேலை வந்துட்டா, டைம்லைன் பார்த்தே `திடீர் ரசிகர்கள்’ சீன் போடுவார்கள். சமயத்தில் நெட்வொர்க் காலை வாரிவிட, கவுண்டமணி தியேட்டர்ல தனியா கை தட்டுற மாதிரி ஆகிடும்! மூதேவி... கோல் விழுந்து அஞ்சு நிமிசமாச்சு!

புதுசா பார்க்கிறவங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் மெஸ்ஸிடா, ரொனால்டோடா, நெய்மர்டாதான்! மத்தவங்க பேரெல்லாம் சமோசாவுக்குள்ள ரொட்டியாங்கிற மாதிரிதான் அனுமானமா புரிஞ்சுக்க வேண்டிவரும். அதனாலயே இவங்கல்லாம் இருக்கிற டீமுக்கு சப்போர்ட் பண்ண வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இவங்ககிட்ட யூரோ சீரிஸ்ல எந்த டீமுக்கு உங்க சப்போர்ட்டுனு கேட்டா,  நல்லா தெரிஞ்ச டீம்களான பிரேசில், அர்ஜென்டினா பெயர்களைச் சொல்லி அசடு வழிவார்கள். இன்னும் சிலர் பார்சிலோனா, ரியல் மேட்ரிட் எனப் பெருமை பொங்கச் சொல்லிச் செல்வார்கள். கிளப் டீமுக்கும், தேசிய அணிக்குமேவா வித்தியாசம் தெரியாம இருப்பாங்க!

தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் ஃபுட்பால்ல உள்ள ஆஃப்சைட் என்னன்னு இவங்களால கண்டுபிடிக்கவே முடியாது. வெட்கத்தை விட்டு யாரிடமாவது சந்தேகத்தைக் கேட்டாலும், முகத்தை இரண்டு நிமிஷம் உற்றுப்பார்த்துவிட்டு, நீ அந்த விஷயத்துக்குச் சரிப்பட்டு வர மாட்டேன்னு கிளம்பிப் போய்டுவாங்க! ஐயா... இந்த ஆஃப் சைடுன்னா என்னங்கய்யா?!

இவர்கள் செய்யும் அலப்பறைகள் அனைத்தையும் கவனித்துக்கொண்டிருக்கும் சீனியர் ரசிகர்கள் சும்மாவா இருப்பார்கள். `எத்தன   வருசமா கூழ் ஊத்தினிருக்க?’ என இவர்களது ப்ரொஃபைலில் கலாய்க்கும் மீம்களைக் குவித்துவிடுவார்கள். சிலரோ ‘சிவாஜி’ படத்தில் ரஜினியைக் கட்டிப்போட்டு பாஸ்வேர்டு சொல்லச் சொல்லி மிரட்டும் போலீஸ்காரர்களைப் போல `இதுக்கு முன்னாடி கிளப் மேட்ச்லாம் பார்த்திருக்கியா? COPA-ன்னா என்னன்னு தெரியுமா? டேரக்ட் ஃப்ரீ கிக், அட்வான்டேஜ் அப்படின்னாலாவது என்னன்னு தெரியுமா?’ என வரிசையாகக் கேள்வி கேட்டுட்டா, சைலன்டா ஆஃப்லைன் போக மட்டும் யார்தான் இவங்களுக்குச் சொல்லிக்கொடுத்ததோ?

அப்புறம் ப்ரோ... உங்க சப்போர்ட் யாருக்கு?