Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா! - அழகின் ரகசியம் எது?

அனுஷா... ஆதிரா... இனியா! - அழகின் ரகசியம் எது?

டிஜிட்டல் கச்சேரிஓவியம்: ஸ்யாம்

அனுஷா... ஆதிரா... இனியா! - அழகின் ரகசியம் எது?

டிஜிட்டல் கச்சேரிஓவியம்: ஸ்யாம்

Published:Updated:
அனுஷா... ஆதிரா... இனியா! - அழகின் ரகசியம் எது?

‘`இனியா... உனக்கு ஃப்ரெஞ்ச் ப்ளாட் ஹேர்ஸ்டைல் போடத் தெரியுமா?’’

``இருக்குற டென்ஷன்ல நீ வேறயா?!’’

``ஹலோ மேடம், இது ஒண்ணும் அவ்ளோ தப்பான கேள்வி இல்லையே..!’’

``அய்யோ ஆதிரா... என் தலைமுடியை நினைச்சாத்தான் ரொம்ப டென்ஷன் ஆகுது. தினமும் கொத்துக்கொத்தா கொட்டுது...’’

``இதுக்குத்தான் இவ்ளோ டென்ஷனா? தலைமுடி கொட்டாம இருக்கணும்னா, மொதல்ல டென்ஷனே ஆகக் கூடாது. அடுத்து நல்ல சாப்பாடு, கேசப்பராமரிப்பு - இதெல்லாம் இருந்தா அலைபோல கூந்தலுக்கு கேரன்டி!’’

``நிஜமாவா சொல்றே?’’

அனுஷா... ஆதிரா... இனியா! - அழகின் ரகசியம் எது?

``நான் சொல்வதெல்லாம் உண்மை! தலைமுடியைப்பத்திக் கொஞ்சமும் கேர் எடுத்துக்காம, ஃப்ரீ ஹேர் ஸ்டைலுக்கு  மட்டும் ஆசைப்பட்டா எப்படி? நான் கொஞ்சம் டிப்ஸ் சொல்றேன்... கேட்டுக்கோ கேர்ள்!’’
``ஷேர் இட் கேர்ள்!’’

``ஆமா அனு, உன்னோட ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன?’’

``ஃபிட்னஸ்னு கேட்கிறதுக்கும், அதை கண்ணடிச்சுக்கிட்டே கேட்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கே பேபி. நீ எதைப் பத்தி கேட்கிற?!’’

``டி-ஷர்ட், சல்வார், புடவைன்னு எந்த டிரெஸ் போட்டாலும் உன் கட்ஸ் அண்ட் கர்வ்ஸ் எல்லாம் செமையா இருக்கே... எப்படி?!’’

``உங்க ரவுஸை ஆரம்பிச்சிட்டீங்களா?! சரி, அதுக்கும் டிப்ஸ் சொல்றேன் கேளு. பிரேசியர் வாங்கிறப்போ சைஸை மட்டும் சொல்லி வாங்கினா பத்தாது. பிளவுஸ், டி-ஷர்ட், சல்வார்னு ஒவ்வொரு டிரெஸ்ஸுக்கும் பொருந்துறமாதிரி பல வெரைட்டிகளில் பிரேசியர் கிடைக்குது. ஒல்லியா இருக்கிறவங்களுக்கு, குண்டா இருக்கிறவங் களுக்குன்னுகூட பிரத்யேக பிரேசியர்ஸ் கிடைக்கிறப்போ, பெர்ஃபெக்டா இருக்கிறதுல என்ன பிரச்னை?!’’

``அப்ப... இதான் உன் சீக்ரெட்டா!’’

``ஆதிரா... எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட். அழகின் ரகசியம்னு சொல்றோமே, அது கச்சிதமான உடல் அமைப்பை வெச்சு சொல்றாங்களா... இல்லை, நிறத்தை வெச்சு சொல்றாங்களா?’’

``அடிப்படையில எல்லா பெண்களுமே அழகா இருக்கணும்னு ஆசைப்படுவோம். அதுக் காக அளவுக்கு அதிகமா உடலை வருத்துறதும், நிறத்தைக் கூட்டுறேன்னு தேவையில்லாம கண்டதையும் வாங்கிக் காசைக் கரியாக்கறதும் தப்பு. அதனால ஷேப், கலர் ரெண்டையும்விட ஒரு பெண்ணுக்குத் தன்னம்பிக்கைதான் முக்கியம்னு நான் நினைக்கிறேன்!’’

``சூப்பர்!’’

``நாம இன்னும் கேசப்பராமரிப்பு, அழகின் ரகசியம்னே பேசிட்டு இருக்கோம். ருமேனியா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தன்னோட பீரியட்ஸ் ரத்தம் மூலமாவே ஓவியம் ஒன்றை வரைஞ்சு, மக்கள் கவனத்தைத் தன்பக்கம் இழுத்திருக்காங்க. மாதவிடாய் பற்றிய புரிதலை ஆண்களுக்கும் ஏற்படுத்தணும்னு அவங்க வரைந்த ஓவியத்தைப் பார்க்கிறப்ப, பெண்கள் பேசத் தயங்குற விஷயங்களைத் தைரியமாப் பேசி நமக்கான உரிமைகளை மீட்டெடுக்கணும்னு ஓர் உத்வேகம் கிடைக்குது...’’

``இன்னிக்கு ரொம்ப சீரியஸா பேசிட்டு இருக்கோம்ல?’’

‘’உருப்படியா பேசுறோம்னு சொல்லு!’’

- கச்சேரி களைகட்டும்...

அனுஷா... ஆதிரா... இனியா! - அழகின் ரகசியம் எது?

கொத்துக் கொத்தாக உதிரும் தலைமுடி?! தவிர்ப்பது எப்படி?
http://bit.ly/2iOwgHe

அனுஷா... ஆதிரா... இனியா! - அழகின் ரகசியம் எது?

‘ஒரே வாரத்தில் கறுப்பழகு’- இப்படி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?!
http://bit.ly/2j7ZTAU

அனுஷா... ஆதிரா... இனியா! - அழகின் ரகசியம் எது?

உள்ளாடையைத் தேர்ந்தெடுக்கும் முன் இதை கவனியுங்கள் பெண்களே!
http://bit.ly/2k3jPZY

அனுஷா... ஆதிரா... இனியா! - அழகின் ரகசியம் எது?

பெண்களின் வலி பேசும் 28 வயது பெண்ணின் பீரியட்ஸ் ஓவியம்!
http://bit.ly/2izZr2b

அனுஷா... ஆதிரா... இனியா! - அழகின் ரகசியம் எது?

அசத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணையதள முகவரியைத் தொடருங்கள். அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.