Published:Updated:

அஸ்லான் ஷா ஹாக்கி போட்டி: இந்தியா போராடி தோல்வி

அஸ்லான் ஷா ஹாக்கி போட்டி: இந்தியா போராடி தோல்வி
அஸ்லான் ஷா ஹாக்கி போட்டி: இந்தியா போராடி தோல்வி
அஸ்லான் ஷா ஹாக்கி போட்டி: இந்தியா போராடி தோல்வி

இபோக்: அஸ்லான் ஷா ஹாக்கி போட்டியில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 3–4 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் போராடி தோல்வியடைந்தது.

6 அணிகள் இடையிலான 22வது அஸ்லான் ஷா ஹாக்கி தொடர் மலேசியாவின் இபோக் நகரில் நேற்று தொடங்கியது. இதில் 5 முறை சாம்பியனான இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்தியது.

ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலியா 24வது, 38வது, 39வது நிமிடங்களில் கோல் அடித்து ஆஸ்திரேலியா வலுவான முன்னிலை பெற்றது.

இதன் பிறகு 40வது நிமிடத்தில் இந்திய அணி முதல் பதில் கோல் திருப்பியது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ரூபிந்தர்பால் சிங் இந்த கோலை அடித்தார். 51வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் மாலாக்சிங் 2–வது கோலை அடித்தார்.

##~~##
53வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணி 4வது கோலை போட்டது. இதைத் தொடர்ந்து இந்திய வீரர் ரூபிந்தர்சிங் பால்சிங் 67வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார்.
முடிவில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 3–4 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
இந்திய அணி இன்று மாலை நடைபெறும் ஆட்டத்தில் கொரியாவை சந்திக்கிறது.
முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 4–3 என்ற கோல் கணக்கில் நடப்பு சாம்பியன் நியூசிலாந்தை வீழ்த்தியது.
வேறொரு ஆட்டத்தில் போட்டியை நடத்தும் மலேசிய அணி 3–2 என்ற கோல் கணக்கில் கொரியாவை வென்றது.