Published:Updated:

'கருணாநிதி வந்தாலும் ஆட்சியை அசைக்க முடியாது'- கொந்தளிக்கும் செல்லூர் ராஜூ

'கருணாநிதி வந்தாலும் ஆட்சியை அசைக்க முடியாது'- கொந்தளிக்கும் செல்லூர் ராஜூ

ஆட்சியை ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது என கக்கன் பிறந்தநாளில் செல்லூர் ராஜூ சூளுரை .

'கருணாநிதி வந்தாலும் ஆட்சியை அசைக்க முடியாது'- கொந்தளிக்கும் செல்லூர் ராஜூ

ஆட்சியை ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது என கக்கன் பிறந்தநாளில் செல்லூர் ராஜூ சூளுரை .

Published:Updated:
'கருணாநிதி வந்தாலும் ஆட்சியை அசைக்க முடியாது'- கொந்தளிக்கும் செல்லூர் ராஜூ

' ஸ்டாலினோ அல்லது அவரது தந்தையோ வந்தால்கூட இந்த ஆட்சியை ஆட்டவோ அசைக்கவோ முடியாது'' என கக்கன் பிறந்தநாளில் செல்லூர் ராஜூ சூளுரைத்தார்.

மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி எனும் கிராமத்தில் பிறந்தவர்தான் பூசாரிக் கக்கன், எளிமையிலும் எளிமையாகத் தோற்றம் அளிக்கும் அவர், முடியாத நிலையில்கூட தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் தானும் ஒரு சாதாரண மனிதன்தான் என மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டவர். எளிமையின் சிகரமாக விளங்கிய தியாகசீலர் கக்கனின் 109-வது பிறந்தநாள் இன்று. தும்பைபட்டியிலுள்ள அவரின் மணிமண்டபத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ``ஸ்டாலின் பேசுவது எல்லாம் ஜோக்காகதான் எடுத்துக்கொள்ளமுடியும். அடிக்கடி ஊடகங்கள் மூலம் அவர் தன்னை விளம்பரப்படுத்த ஏதாவது கருத்தை தெரிவிக்கிறார். அவர் நினைப்பது போன்று குறுக்கு வழியில் அவர் முதல்வராக வர வாய்ப்பே இல்லை. மீண்டும் அ.தி.மு.க.தான் ஆட்சியைப் பிடிக்கும். சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் போட்டிபோட்டு தொகுதி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்கின்றனர். ஆகவே, ஸ்டாலினோ அல்லது அவரது தந்தையோ வந்தால்கூட இந்த ஆட்சியை ஆட்டவோ அசைக்கவோ முடியாது. சேலம், சென்னை பசுமை வழிச்சாலை தெளிவாக எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. நிலம் எவ்வளவு ஏக்கர் எடுக்கப்போறோம் என்பதை முதல்வர் திட்டவட்டமாக கூறிவிட்டார் . இந்தத் திட்டம் மூலம் 10,000 கோடி ரூபாய் தமிழகத்துக்குக் கிடைக்கக் கூடியதைத் தடுக்கும் வகையில் தமிழ் விரோதிகள், தமிழனத் துரோகிகள் தூண்டிவிடுகின்றனர்'' என தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism