Published:Updated:

மாடல் மங்காத்தாஸ்..!

மாடல் மங்காத்தாஸ்..!
பிரீமியம் ஸ்டோரி
News
மாடல் மங்காத்தாஸ்..!

மாடல் மங்காத்தாஸ்..!

தென்னிந்திய அழகிப்போட்டி 2017-ல் மொத்தம் பதினெட்டு இறுதிப்போட்டியாளர்கள். அவர்களில் சிலரின் பெர்சனல் பக்கங்கள் இவை...

மாடல் மங்காத்தாஸ்..!

பிரதீக்‌ஷா ரவி: (வயது 24)

சென்னைப் பொண்ணு. ஐ.டி வேலையை உதறிவிட்டு முழு நேர மாடலாக இருக்கிறார், இந்த `மிஸ் செளத் இந்தியா' இறுதிப்போட்டியாளர்.

முதல்மாடலிங்: 
நான் படிப்பு படிப்புன்னு மட்டுமே இருந்த பொண்ணு. எப்பிடி மாடலிங்குள்ள வந்தேங்குறது எனக்கே ஆச்சர்யமாதான் இருந்தது.  மேக்கப் கத்துக்கலாம்னுதான் உள்ள வந்தேன். அப்படியே மாடலிங் பண்ண வாய்ப்பு வந்தது. இன்ஃபோசிஸ் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேலை வேண்டாமென முடிவெடுத்து மாடல் ஆகிட்டேன்.

இன்ட்ரெஸ்டிங் மேட்டர்ஸ்:
டான்ஸ்ர், பாடகர், பெண்கள் முன்னேற்றத்துக்கான   எல்லா செயல்திட்டங்களிலும் தொடர்ந்து இயக்கி வருகிறேன். நிறைய எழுதப் பிடிக்கும். நிறைய வாசிக்கவும் பிடிக்கும்!

மறக்க முடியாத அனுபவம்:
இந்த மிஸ் செளத் இந்தியா 2017, இறுதிப்போட்டியாளருக்கான ரிசல்ட் அறிவிக்கும்போது கடைசி வரை என் பெயர் இல்லை. சரி எனக்கு வாய்ப்பு இல்லைன்னு நினைச்சப்போ  இன்னொரு கடைசிப் போட்டியாளார் இருக்கார்னு சொல்லி என்னோட நம்பரான 14ஐ கூட, பத்து பிளஸ் நாலுன்னுதான் சொன்னாங்க. கிட்டத்தட்ட கண்ணுல தண்ணி வந்த மொமன்ட் அது. டைட்டில் வின் பண்ணனும். வாழ்த்துங்க ஜி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மாடல் மங்காத்தாஸ்..!

அபிராமி: (வயது27, உயரம் 5.8)

பொதுவா மாடலிங்ல யாரும் யாருக்கும் சப்போர்ட் பண்ணமாட்டாங்கன்னு பேச்சு இருக்கும் ஆனா எனக்கு அப்படி எதுவுமே இல்ல. போன வருஷ மிஸ் சென்னை மீரா மிதுன் தான் எனக்கு நிறைய டிப்ஸ் கொடுத்துருக்காங்க. என்னைச் சுத்தி இருக்கும் மாடல்ஸ்தான் எனக்கு சப்போர்ட்டிவா இருக்கிறாங்க!

இன்ட்ரெஸ்டிங் மேட்டர்ஸ்: சென்னை பிரியை. கலாஷேத்ரா ஸ்டூடன்ட். தாரா உமேஷ் என்னை மாடலிங் பண்ணச் சொல்லி கேட்டுட்டே இருந்தாங்க. கிளாஸும் மாடலிங்கும் மாறி மாறி இருக்கும். இடைப்பட்ட நேரத்துலதான் முதல் விளம்பரம் நல்லி சில்க்ஸ்க்காக பண்ணினேன். நிறைய குறும்படங்கள் பண்ணிருக்கேன். மறக்க முடியாத விளம்பரம்னா அது பாராசூட்க்காக பண்ணியது!

அடுத்த பிளான்: நிறைய சினிமா வாய்ப்புகள் வருது.விரைவில் வெள்ளித்திரையில்...

மாடலிங் தவிர: டான்ஸ் டான்ஸ் டான்ஸ்தான்!

உங்களோட பிளஸ்: never give up

மைனஸ்:
இனிமேதான் கண்டுபிடிக்கணும்!

மாடல் மங்காத்தாஸ்..!

சுஜா சூர்ய நிலா: (வயது 23, உயரம் 5.6)

சென்னையில் பிறந்து ராஜஸ்தானில் வளர்ந்து ஒடிசாவில் படித்த பொண்ணு. சின்ன வயசுல  இருந்தே மாடலிங் ஆசை, அப்படித்தான் அந்தக் கனவு தொடங்கியது. வீட்டுல எந்த எதிர்ப்பும் இல்ல. இப்போவரை சப்போர்ட்டிவா இருக்காங்க. ஒவ்வொரு விஷயத்தையும் எனக்கு பார்த்துப் பார்த்து பண்றது ஃபேமிலிதான். அதான் ஹெச் ஆர் வேலையை விட்டுட்டு முழுநேர மாடலாகவே மாறிட்டேன்.

மிஸ் செளத் இந்தியா இறுதியாளர் பயணம்: எல்லா ரவுண்டுமே மறக்க முடியாத அனுபவம்னுதான் சொல்லணும். ஆனாலும் ஒரு ரவுண்ட்டுல பாட்டு பாட சொல்லிட்டாங்க. பாட்டு கேட்கப் பிடிக்கும். பாடி பழக்கம் இல்லை, அது கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்காகவும் இருந்துச்சு.

பிளஸ்:
நான் கொஞ்சம் இல்ல... ரொம்பவே தைரியமான பொண்ணு. அநியாயத்தைக் கண்டா பொங்குவேன். ஆனா, எல்லாத்துலயுமே பாசிட்டிவ் அப்ரோச்தான்!

உங்க மைனஸ்:
ரொம்பவே எமோஷனல் டைப் நான். அதைத்தான் முடிஞ்ச அளவு கட்டுப்படுத்திக்க நினைப்பேன்.

- ந.புஹாரி ராஜா