Published:Updated:

டெக்மோரா

டெக்மோரா
பிரீமியம் ஸ்டோரி
News
டெக்மோரா

டெக்மோரா

டெக்மோரா

`வெச்சது வெச்ச இடத்துல இருக்கா?'னு திட்டுற அம்மாக்கள் தொடங்கி, `யார் இடத்துலேயாவது சேர் இருந்த இடத்துல இருக்கா?'னு கிளாஸ் முடிஞ்சும் பாடம் எடுக்குற வாத்தியார் வரை... எல்லோருமே நமக்குப் பொறுப்பில்லைனு நினைக்கிறாங்க. அந்த அவப்பெயரைத் துடைக்கிறதுக்காகவே வந்திருக்கிறது ஒரு டெக்னாலஜி. ஆமா பாஸ், உட்கார்ந்த இடத்துல இருந்து சேரை நகர்த்தி வெச்சாலும், எந்த இடத்துல இருந்துச்சோ, அந்த இடத்துக்கே தானாப் போய் சேர்ந்தா எப்படி இருக்கும்? நம்ப முடியலைல...

நிஸான் நிறுவனம் ஆட்டோமேட்டிக் கார்களில் உள்ள டெக்னாலஜியை வீல் சேர்களுக்கும் நகர்த்திக் கொண்டுவந்திருக்கிறது. ஒவ்வொரு வீல் சேரின் அடிப்பாகத்திலும் சென்சார் பொருத்தப்பட்டிருக்கும். இந்த சென்சார் மூலமாக அதன் இயக்கத்தை வடிவமைக்கலாம். 360 டிகிரியிலும் சுற்றும் வீல் சேர்களை இருந்த இடத்தில் நகர்த்த, இனி நீங்கள் மெனக்கெடத் தேவையில்லை. நிஸான் நிறுவனத்தின் இந்த டெக்னாலஜி, தானாக நகர்த்தி வைத்துவிடும். இதுக்கு நாம என்ன செய்யணும்? 'கை தட்டினால் போதும்' என்கிறது நிஸான் நிறுவனம்.

டெக்மோரா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அப்புறமென்ன? `மீட்டிங் முடிஞ்சு அப்படியே போறீங்க. சேரை இருந்த இடத்துல வெச்சுட்டுப் போங்க'னு மிரட்டும் மேனேஜர்களுக்கு முன்னால், ஸ்டைலாகக் கை தட்டி வீல் சேரை நகர்த்தலாம். கீழே உள்ள இணைப்பில் இந்த டெக்னாலஜியின் விளக்க வீடியோ இருக்கிறது. என்ஜாய்!

http://mashable.com/2017/01/17/intelligent-chair-parks-itself/

- டெக்கி கய்