Published:Updated:

சினிமா விடுகதை!

சினிமா விடுகதை!
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமா விடுகதை!

சினிமா விடுகதை!

டிகை த்ரிஷா நடித்த படங்கள்தான் பாஸ் இந்த வார சினிமா விடுகதைக்கான விடைகள்.

1. ஹீரோவுக்கு ஸ்கோப் உள்ள கதைன்னாலும் மாமியா வந்து குத்தாட்டம் போட்டதை மறக்க முடியுமா... மாமிக்கேற்ற படத்தின் தலைப்பு என்று ரைமிங்கா சொன்னா கண்டுபிடித்துவிடுவீர்கள். என்ன படம் பாஸ்?

2. நடிப்பில் கில்லி காட்டிய படம். பார்வையிலே காதலையும் வில்லத்தனத்தையும் வெளிப்படுத்தி ஒல்லி கதாநாயகனுக்கு் ஃப்ளாப் தந்த படத்தின் தலைப்பு கட்டிப் பறக்கவில்லை என்றாலும் ஆக்டிங் பேசப்பட்டதே... என்ன படம்?

சினிமா விடுகதை!

3. அதிகம் பேசாத இயக்குநரின் படத்தில் அல்ட்ரா மாடர்ன் இளைஞியாய் பப்பில் ஆடிப் பாடினார். பாய்ஸ் குரூப்பில் ஒரு ஹீரோவுக்கு இணையாய் வந்தாலும் படத்தில் இவரும் ஒரு ஹீரோயின் அவ்வளவே... உயிர் எழுத்தில் ஓர் எழுத்து படத்தின் பெயர். சொல்லுங்க பாஸ் என்ன படம்னு?

4. அழகிய கண்களில் காதல் மட்டுமல்ல. ஆக்‌ஷனும் காட்ட முடியும் என்று பறந்து பறந்து சண்டை போட்டாரே... உலகநாயகனுடன் ஜோடி சேர்ந்தாலும் முத்தக்காட்சி இல்லாமல் மொத்தக் காட்சியிலும் கெத்து காட்டிய படம் என்னவோ?

5. நாயகிக்கு எவர்கிரீன் படம். தமிழ்நாடே படத்தில் இடம்பெற்ற இவரின் பெயரை மந்திரமாய் ஜெபித்தது. அத்தனைப் பேரையும் காதலிக்கவைத்த படத்தின் தலைப்பும் பெரியது. இயக்குநரின் பெயரும் பெரியதுதான். என்ன படம் பாஸ்?

6. இந்தப் படத்தின் தலைப்புதான் பின்பு எல்லாவற்றுக்கும் ட்ரெண்டானது. இளைய தளபதியின் பக்கா ஆக்‌ஷன் பேக்கில் காதலும் ஆட்டமும் சரிவிகிதத்தில் அம்மணிக்கு. வெளையாடாம சொல்லுங்க பாஸ்... என்ன படம்னு!

7. ஹீரோ லுக்குக்கு மேட்ச் ஆகாத இளமை நாயகி என்பதாலே படத்தில் ஹீரோவை ஆன்டி ஹீரோவாய் மாற்றினாரோ. இதுவும் ஒரு கேம்தான். ஆனா, சீட்டு மாறினால் டோட்டலாய் மாறும். என்ன படம்?

- கே.கணேஷ்குமார்

விடைகள்: 1. சாமி, 2. கொடி, 3. ஆயுத எழுத்து, 4. தூங்காவனம், 5. விண்ணைத்தாண்டி வருவாயா, 6. கில்லி, 7. மங்காத்தா

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz