Published:Updated:

ஒரு `முடி'வோடதான் இருக்காங்க!

ஒரு `முடி'வோடதான் இருக்காங்க!
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு `முடி'வோடதான் இருக்காங்க!

ஒரு `முடி'வோடதான் இருக்காங்க!

கொஞ்சம் வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடன் வலம் வரும் சில யூத்துகளுடன் ஒரு சந்திப்பு...

ஒரு `முடி'வோடதான் இருக்காங்க!

நிதீஷ் திருஞானம்: ``எனக்கு வயசு இருபத்து நாலு. அஞ்சு வருஷமா இந்த முடி வளர்த்துக்கிட்டு இருக்கேன். சொந்த ஊரு திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம். சென்னைல விஸ்காம் முடிச்சுட்டு டி.வி-ல டான்ஸ் புரோகிராம்ல கலந்துகிட்டேன்.

இந்த ஹேர்ஸ்டைலுக்கு ட்ரெட் லாக்னு பெயர். என் தலைக்குள்ள 32 லாக் போட்டு வெச்சிருக்கேன். நான் இதை ஸ்டைலுக்காகவோ பந்தாவுக்காகவோ வளர்க்கல. எல்லாமே ஒரு கோபம் தான். நம்மளோட மரபைத் தொலைச்சுட்டோம்னு ஒரு உள்ளுணர்வு, சித்தர்கள் எல்லாம்  முடி வளார்ப்பதனால நமக்குள்ள இருக்குற சக்தி வெளியில போவது இல்லைன்னு சொல்றாங்க. அதை நான் தீவிரமா நம்புறேன். இப்படி முடி வளர்க்கிறதால கிட்டத்தட்ட ஒரு தியானம் பண்ணின ஃபீல்.
தற்சார்பு வாழ்க்கைமுறையத் தொலைச்சுட்டோம். அதை நோக்கிய தேடல் என் வாழ்க்கை. தலைமுடிக்குனு பணமெல்லாம் செலவு பண்றது இல்ல. நிறைய சீயக்காய் போடுவேன். முடி பிடிப்பா இருக்கணும்னு விபூதி போடுவேன். மாசத்துக்கு ஒரு தடவை தலைக்கு மசாஜ் பண்ணிப்பேன். பெருசா எதுவும் மெனக்கெட்டது இல்லை. அப்பா ஆசிரியர். ஸ்டூடன்ட்ஸோட மனநிலை எப்படினு புரிஞ்சவர். அதனால வீட்டுல எதிர்ப்புனு ஒண்ணு இருந்தது இல்லை. எனக்கு இந்த ஹேர்ஸ்டைல் ரொம்பப் பிடிச்சிருக்கு.  பொது இடத்துல நிக்குறப்போ ஒரு காட்சிப்பொருளா பார்ப்பாங்க. அதைப்பத்தி எனக்கு கவலை இல்லை!''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஒரு `முடி'வோடதான் இருக்காங்க!

அபிஜித்: ``சொந்த ஊரு திருச்சி. இப்போ எம்.டெக் செகண்ட் இயர் படிக்கிறேன். சின்ன வயசுல இருந்தே முடி வளர்க்க ஆசை. பி.டி வாத்தியார்கிட்ட அடிவாங்கி சாக முடியாதுன்னு ஆசையை விட்டுட்டேன். காலேஜ்ல சேர்ந்தப்போ திரும்ப அந்த ஆசை எட்டிப்பார்த்துச்சு. நிறையப் பேரு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. தலை வலிக்கும், உடம்பு வெயிட் போடாது, சாப்பிடுற சாப்பாட்டை முடியே எடுத்துக்கிரும்னு கிளப்பி விட்டாங்க. மனசுதான் காரணம்னு வளர்க்க ஆரம்பிச்சுட்டேன்.

என்னோட முதல் ஃபேனே எங்க அம்மாதான்! சின்ன முகம் அப்படிங்கிறதால நிறைய முடி இருந்தா அதுக்குனு தனி லுக் இருக்கேனு தோணுச்சு. கோயிலுக்குப் போறப்போலாம் வித்தியாசமா பார்ப்பாங்க. பஸ்ல போனா எல்லோருக்கும் ஈஸியா ஒரு அட்ராக்‌ஷன் என் மேல வந்திரும். முடிக்குனு தனியா எதுவும் செலவு பண்ணினது கிடையாது. எல்லாமே தேங்காய் எண்ணெய்தான். நிறைய பேரு சொந்த ஊரு ஆப்பிரிக்காவானு கேட்பாங்க, சில டூரிஸ்ட் ஸ்பாட்டுக்கு போறப்போ, என்னையும் ஏதோ வெளிநாட்டுக்காரன்னு நினைச்சு, எனக்கு விசேஷ மரியாதை கிடைக்கும். சிலர் கிண்டல் பண்ணுவாங்க. அக்கறையோட விசாரிப்பாங்க. எல்லாமே ஒரு புது அனுபவம் பாஸ்! செம ஜாலி!''

ஒரு `முடி'வோடதான் இருக்காங்க!

ஹைடன்: நிஜப்பேரு மசூத் ஹுசைன். இப்படி முடி வளர்த்துக்கிட்டு, பார்க்கிறதுக்கு ஹைடன் மாதிரி இருக்கேன்னு பசங்களே இந்தப் பெயர் வெச்சுட்டாங்க. சின்ன வயசுல இருந்தே சினிமாவுல சின்னச் சின்ன கேரக்டர் எல்லாம் பண்ணிட்டு இருந்தேன். `பட்டாளம்', `வழக்கு எண்' பண்ணினேன். `சலீம்' படத்துல மினிஸ்டர் பையன் கேரக்டர் பண்ணினேன்.  அப்போ, என்னோட முடிதான் எனக்கு ப்ளஸ்னு சொன்னாங்க. அப்போதிருந்து மூணு வருஷமா வளர்த்துக்கிட்டு இருக்கேன்.

காலேஜ்ல ஹெச்.ஓ.டி திட்ட ஆரம்பிச்சுட்டாரு. அப்புறம் டீன்கிட்ட சொல்லி ஸ்பெஷல் பெர்மிஷனோட காலேஜ் முடிச்சேன்.

சொன்னா நம்ப மாட்டீங்க... இதுவரை என்னோட முடிக்காக நான் எந்த பார்லருக்கும் போனது இல்லை. எல்லாமே இயற்கையா வளர்ந்த முடிதான். தினம் குளிக்கும் முன்னால தேங்காய் எண்ணெய் நிறைய வெச்சுப்பேன்.

பொது இடங்கள்ல பார்க்கிறவங்க செல்ஃபி எடுக்கணும்னு கேட்பாங்க.  இப்போ விளம்பரப் படங்கள்லாம் பண்ணிட்டு இருக்கேன். ஒரு ஷூட்டிங் அப்போ, உஷா உதூப் மேடம், `என்னப்பா முடியை வெச்சே மிரட்டுற... பயந்தே போயிட்டேன்!'னு சொல்லிருக்காங்க. இப்படி நிறைய நடந்திருக்கு.

இப்போ ராகவேந்திரா லாரன்ஸ் சார் கூட `மொட்ட சிவா கெட்ட சிவா' பண்ணிட்டு இருக்கேன். முக்கியமான ரோல் அது. ஒரு சீன்ல என்னை ஃப்ரேம்ல பார்த்தவரு, `இந்த முடியை எப்பவும் வெட்டிடாதே!'னு சொன்னாரு. அந்த கேரக்டருக்கு உயிரே முடிதான் பாஸ்!''

- ந.புஹாரி ராஜா