Published:Updated:

“நாங்க நாலு பேரு!''

“நாங்க நாலு பேரு!''
பிரீமியம் ஸ்டோரி
News
“நாங்க நாலு பேரு!''

“நாங்க நாலு பேரு!''

தும்மினாலும் நமக்கு சிரிப்பை வரவைக்கும் நாலு பேரை நான்கு நாட்கள் விரட்டி எடுத்த பேட்டி இது..!

ஆனந்த்

``சொந்த ஊரு சேலம் ஆத்தூரு. அப்போ இருந்தே சினிமா ஆசை. அதே நேரத்துல படிக்கவும் செய்யணும். டிப்ளோமா முடிச்சா சீக்கிரம் படிச்சு சென்னைக்கு வந்துரலாம்னு சென்னை வந்தேன். இங்கே இன்ஜினீயரிங் சம்மந்தமா வேலை பார்த்தாலும் மனசு ஏத்துக்கல. ரெண்டு வருஷம் தனியார் சேனல்ல சின்னச் சின்ன வேலை, ஆர்கெஸ்ட்ரா குரூப்ல ஸ்டேஜ் ஷோனு நிறைய பண்ணினப்போ தான், `கலக்கப்போது யாரு' ஸ்டேஜ் கிடைச்சது. மிமிக்ரினு வந்துட்டோம் புதுசா பண்ணணும்னு நெனச்சுதான் விஜய் சேதுபதி அண்ணா, சிவகார்த்திகேயன் அண்ணா வாய்ஸ் எடுத்து பண்ணினேன். அது நல்ல ரீச் ஆச்சு. அதுல இருந்தே `சிவகார்த்திகேயன்' ஆனந்த்னு அடைமொழியே வந்துருச்சு.

“நாங்க நாலு பேரு!''

ஸ்டேஜ் புரோகிராம் பண்ணின காலகட்டமெல்லாம் இன்னமும் மறக்க முடியாது. ஆறு மணிக்கு ஷோ அப்படின்னா நாலு மணில இருந்து காத்துக்கெடப்பேன். தல-தளபதி பத்தி வாய்ஸ் எடுத்துப் பேசுவேன். திடீர்னு கூட்டத்துல இருந்து சவுண்டு வரும். `தலயப் பத்தி பேசுறியா? எப்படி வெளில போறேன்னு பார்த்துக்குறேன்?'னு சவுண்டு வரும். எக்ஸ்பீரியன்ஸுக்காவே ஆரம்பத்துல எந்த ஸ்டேஜ் கிடைச்சாலும் போயிடுவேன். ஆனா, பேமன்ட் ரொம்பக் கம்மியா வரும். சில நேரங்கள்ல அந்த பேமன்ட்டை எதிர்பார்த்துப் போவோம். ஆனா, `நாளைக்கு வாப்பா!'ன்னு சொல்லிடுவாங்க. கொஞ்ச ரீச் ஆனதுக்குப் பிறகு அதே ஸ்டேஜ் போயிருப்பேன். ஆனா, அப்போ வரவேற்பு வேற மாதிரி இருந்துச்சு. அவங்களோட மெயின் நோக்கமே பேமன்ட்டை எப்படிக் குறைக்கலாம்னு யோசிக்கிறதுதான்! ஒரு ஸ்டேஜ்ல எனக்கே தெரிஞ்சது ஆடியன்ஸ் என்ஜாய் பண்ணினது. நான் இன்னிக்கு வெயிட் பேமண்ட் வரும்னு நெனைச்சா, `என்னப்பா ஆச்சு? பெர்ஃபார்மன்ஸ் டல்லா இருந்துச்சே..! உடம்பு ஏதும் சரியில்லையா?'னு கேட்டாரு அந்த ஆள். தூக்கிவாரிப் போட்ருச்சு. `சார்! பத்து அம்பது கம்மி பண்ணிக்கூட கொடுங்க... சரியில்லைன்னு சொல்லாதீங்க!'ன்னு சொல்லிருக்கேன். இதாச்சும் பரவாயில்லை. விஜயகாந்த் சார் வாய்ஸ் எடுக்குறப்போ, `தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்க'னு ஒரு வசனம் ஸ்டேஜ்ல இருக்கிற ஆளைப் பார்த்துச் சொல்லிட்டேன்.  பேமண்ட் வாங்குறப்போ, `ஆனந்த், என்ன இருந்தாலும் நீ கிளையன்ட்டப் பார்த்து தூக்கி அடிச்சுருவேன் பார்த்துக்கனு சொல்லக்கூடாதுல!'ன்னு சொல்ல... நான், `இல்ல சார்...அந்தக் கேரக்டர் அப்டித்தானே!'ன்னு சொன்னா, `ஒரு தடவைன்னா பராவாயில்லை ரெண்டு மூணு தடவை சொல்லவும் கிளையன்ட்டு என்னையவே வெறிச்சுப் பார்த்தாருப்பா!'னு சொல்ல, `என்னத்த சொல்ல..?'ன்னு பேமன்ட்ல நானே அவர் கையில கொஞ்சத்தைக் கொடுத்துட்டு வந்துட்டேன். இப்படி ஏகப்பட்ட காமெடி நடந்திருக்கு!

 ஒரு தடவை, மதுரைல ஷோ, என்னோட பேக்கைத் தொலைச்சிட்டேன். என்ன பண்றதுன்னு தெரியாம இங்கிட்டு அங்கிட்டுமா மாட்டுத்தாவணில சுத்திக்கிட்டு இருந்தா, படக்னு ஒரு பங்காளி புடிச்சு, `நீங்கதானே கலக்கபோவது யாரு ஆனந்து... ஒரு செல்ஃபி எடுக்கலாமா?'ன்னாரு, `அண்ணே, நானே வேற அவசரத்துல இருக்கேன்'னு சொல்லவும் முடியல. ஆனா, அந்த அன்புதான் எங்கள மாதிரி ஆட்களுக்கு ஆறுதல்.

 என்னோட பொறந்தநாள் அன்னிக்கு சிவகார்த்திகேயன் அண்ணாகிட்டதான் முதல் ஆசீர்வாதம் வாங்கணும்னு பிளான்.என் ஃப்ரெண்டுகிட்ட சொன்னா அவன், `எனக்குத் தெரியும்.

ஈ.சி.ஆர்-லதான் அவர் வீடு இருக்கு. வா போகலாம்'னு கூட்டிட்டுப் போயிட்டான். காலையில நாலு மணிக்கு வாக்கிங் போவாருன்னு சொன்னதைக் கேட்டுட்டு வீட்டு வாசல்ல மூணு மணில இருந்து பழியாக் கெடந்தோம். விடிஞ்ச பிறகும் யாரும் வெளில போற மாதிரி தெரில. அப்போதான் அங்கே இருந்த ரெண்டு பேருகிட்ட விஷயத்தைச் சொல்லிக் கேட்டா, அவரு ஈ.சி.ஆர் காலி பண்ணி ரொம்ப நாளாச்சு. வளசரவாக்கம் போயிட்டாருன்னு சொல்லிட்டாங்க. `என்னடா இது வம்பாப் போச்சு'ன்னு அங்கே இருந்து கெளம்பி நேரா வளசரவாக்கம் வீட்டுக்கு வந்தோம்னா, அண்ணிதான் வந்தாங்க. `ஷூட்டிங் போயிட்டு இப்போதான் வந்து படுத்திருக்காங்க'ன்னு சொன்னாங்க. விஷயத்தைக் கேள்விப்பட்டு உடனே வெளில வந்து வாழ்த்துகள் சொல்லி கையில கிஃப்ட் ஒண்ணு கொடுத்தாங்க. `இனிமே உனக்கு நல்ல நேரம்தாண்டா தம்பி'னு சொன்னார். வெளில வந்து பிரிச்சுப் பார்த்தா வாட்ச். என்னால மறக்கவே முடியாது கிஃப்ட் அது! `உழைப்புக்கு நிச்சயம் பரிசு இருக்கு. விடாம ஓடு'ன்னு சொல்லிருக்காரு. சீக்கிரமே சினிமாலயும் என்னை நீங்க பார்க்கலாம் ப்ரோ!''

அறந்தாங்கி நிஷா

``சொந்த ஊரு இப்போ பேராவே ஆகிடுச்சு.  எம்.பி.ஏ முடிச்சுட்டு வேலைக்கே போகக்கூடாதுங்குற குறிக்கோள்லதான் இருந்தேன், அப்போ இருந்தே பட்டிமன்றங்கள்ல நிறையப் பேசுவேன். அதுதான் எனக்கான அடிப்படை. இஸ்லாமியப் பெண்ணா இருந்து வெளில வர்றதுக்கு ரொம்பவே கஷ்டப்பட்டேன். விஜய் டி.வி எனக்கான ஒரு அடையாளத்தைக் கொடுத்துச்சு. 

 பொதுவாவே பொண்ணுங்ககிட்ட சின்ன விஷயத்தைச் சொன்னாலே சிரிச்சிருவாங்க.  பொண்ணுங்க  காமெடிய ரொம்ப விரும்புவாங்க, அதுல நான் இன்னும் கொஞ்சம் அதிகமாவே விரும்புவேன். அது அப்படியே உடல் மொழியா வெளிய வரும்னு நெனைக்கிறேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“நாங்க நாலு பேரு!''

ஒரு தடவ ஸ்டேஜ் ஷோ பண்ணிட்டு இருக்கும்போது, `நான் அழகா இருக்கேன்'னு டயலாக் சொல்லணும். ரெண்டு தடவைச் சொன்னேன். மூணாவது தடவை சொன்னப்போ ஏழு வயசுப்பய எந்திருச்சு, `கடுப்பேத்துறாங்க மை லார்டு'ன்னு போயிட்டான். செம்ம பல்பாகிடுச்சு. ஆனாலும் சமளிச்சேன், இப்படி நிறைய சம்பவங்கள் இருக்கு, `கலக்கப்போவது யாரு' செட்ல வழக்கமா மகேஷ் அண்ணா நாங்க நல்லா பெர்ஃபார்ம் பண்ணிட்டா `அட்ரா அட்ரா'னு சொல்லுவாரு. அதுவே ட்ரெண்டும் ஆகிருச்சு. சில சமயங்கள்ல ஆடியன்ஸ்கிட்ட இருந்து, `அட்ரா அட்ரா' கமென்ட் வரும். நிஜமாவே எங்களைத்தான் சொல்றாங்களா... இல்ல, மகேஷ் அண்ணனைச் சொல்றாங்களானு குழப்பமாகிரும். வீட்டுக்காரர் இதுவரைக்கும் நெகடிவ் கமென்ட் சொன்னதில்லை. அப்படி சொன்னா அவரை போட்டோவா நெகட்டிவா எடுத்து மாட்டிருவேன்னு அவருக்கு தெரியும்ல.

 அதுபோக நிறைய பெண்கள் எல்லாம் நான் கட்டுற சேலைக்காகவே ஷோ பார்க்குறதா சொல்லுவாங்க. நான் சேலைக்குன்னு தனியா கவனம் எடுத்துக்கிட்டது கிடையாது. நான் எனக்கு ஏத்த மாதிரி பளிச்சுன்னு சேலைகள் எடுப்பேன். அதுதான் ஸ்பெஷல்!

“நாங்க நாலு பேரு!''

என்னையப் பார்க்குற எல்லோருமே `ஜில்லுனு ஒரு காதல்'ல வடிவேலுக்கு ஜோடியா நடிச்சவங்க மாதிரி இருக்கீங்கன்னு சொல்லிருக்காங்க. ஒரு பக்கம் சந்தோஷமா இருக்கும். இன்னொரு பக்கம் அவங்க உயிரோட இல்லையேன்னு வருத்தமா இருக்கும். என் கனவு எல்லாம் வடிவேலு சார் கூட ஒரு சீனாவது நடிக்க மாட்டோமாங்குறதுதான். குருவே அவரு தான்னு சொல்லலாம்.

 கூடிய சீக்கிரமே சினிமாவுலயும் பார்க்கலாம். சமுத்திரகனி சார்  படம்  `ஆண் தேவதை',  விஷால் நடிக்கிற `சேட்டைக்காரன்'னு  பெரிய திரையும் ஸ்டார்ட் ஆகி இருக்கு!''

தினா


``2014-ல விஜய் டி.வில சான்ஸ் கேட்டுப் போய் நின்னேன். ஸ்கிரிப்ட் எழுதிக் காமிச்சேன். `நல்லா இருக்குப்பா... ஆனா, இன்னும் பெட்டரா எதிர்பார்க்குறோம்'னு சொன்னாங்க. அதுக்குப்பிறகு கலக்கப்போவது யாரோட' ஆடிஷன். பத்து லெவல் ஆடிஷன்ல  செலக்ட் ஆனேன். அப்போ ஷரத் ஆடிஷன்ல இருந்தே நல்ல குளோஸ். அப்படியே ரெண்டு பேருமே சேர்ந்து பண்ணினோம். அது நல்ல ரீச் ஆச்சு.

பெர்ஃபார்மரா மட்டும் இல்லாம அசிஸ்டன்ட்டாவும் இருந்தேன்.இப்போ `ஆளுக்குப் பாதி'ன்னு ஒரு படம், அப்புறம் தனுஷ் சார் கூட `பவர் பாண்டி'ல மெயின் காமெடியனா பண்றேன்.

“நாங்க நாலு பேரு!''

ஸ்டேஜ்ஷோ பண்றதுக்கு ஒருஊருக்குப் போயிருந்தோம். அப்போ பழனி அண்ணனை உள்ள விடல. ரொம்ப சோகமா வந்து, `என்னடா தம்பி! உள்ள விடமாட்றாங்க!'ன்னு ஃபீல் பண்ணாரு. `அட இருணே'ன்னு நம்ம பாஞ்சாலங்குறிச்சி வடிவேலு கணக்கா நான் போனேன். `டேய், இப்போதான் ஒரு ஆளுகிட்ட சொல்லி அனுப்புனேன் காதுல விழலையா?'ன்னு அர்ச்சனை விழுந்துச்சு. பல்பு வாங்கி வந்தேன்.
 
ஒரு தடவை ஒரு காலேஜ் ஃபங்ஷனுக்குப் போனா பொண்ணுங்க எல்லாம் `தினா தினா'ன்னு கத்துறாங்க. பசங்களுக்கு செம்ம காண்டு. என்னாட பேரைச் சொல்றாங்களேன்னு, அப்போ நானும் முக்கி முக்கி பெர்ஃபார்மன்ஸ் பண்றேன். பசங்க மூஞ்சில சிரிப்பே வரல. சிரிக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணி உட்கார்ந்துக்கிட்டு இருந்தானுங்க. `சரி, இது வேலைக்கு ஆகாது'ன்னு டக்குனு பொண்ணுங்க பக்கம் கவுன்ட்டர் அட்டாக்கை ஆரம்பிச்சேன். எல்லாரும் சகஜமாயிட்டாங்க. இப்போ அந்த லேடீஸ்க்கெல்லாம் ஒரு குட்டி ஸாரி.

ஒரு பெர்ஃபார்மரா மாத்துனதுக்கு முக்கிய காரணம்னா தாம்ஸன் சாரும், தொகுப்பாளர்கள் ரக்‌ஷனும் ஜாக்குலினும்தான்!''

பழனி

``வேதாரண்யம் பக்கத்துல ஒரு மீனவ குடும்பத்துல பொறந்தவன் நான். பதினெட்டு வருஷமா பேராசிரியரா இருக்கேன். ஆரம்பத்துல இருந்தே நிறைய பட்டிமன்றங்கள்ல பேசிருக்கேன். சாலமன் பாப்பையா, லியோனி, ஞானசம்பந்தன் இவர்களோட மேடைல பேசி இருக்கேன். அப்படிப்பட்ட பயணத்துல நிறைய புது மனிதர்களைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் அது எல்லாமே அனுபவம் தான். ஆரம்பத்துல நான் சீரியஸ் டைப்பாதான் பேசிட்டு இருந்தேன். அதை, காமெடி ஏரியாவுக்கு ஏத்த மாதிரி மாத்திக்கிட்டேன். ஏன்னா, காமெடிலதான் யாரையும் தன்வசப்படுத்திக்கலாம். ஈஸியா ஒரு விஷயத்தைக் கொண்டு போயி சேர்க்க முடியுது. என்.எஸ்.கிருஷ்ணன் சாரா இருக்கட்டும், வாரியார் அவர்களா இருக்கட்டும்... ஒரு கருத்து, அதுல ஒரு நகைச்சுவைனு ரெண்டும் சரிவிகிதத்துல இருக்கும். அதை ஃபாலோ பண்றதுதான் என்னோட பாலிசியும்.

“நாங்க நாலு பேரு!''

இப்போ `ஹரஹர மாஹாதேவகா'னு ஒரு படம், சமுத்திரகனி சார் ஹீரோவா நடிக்கிற படத்துல நடிச்சுட்டு இருக்கேன். இந்த வருஷம் இன்னும் நிறைய நடக்கும்னு நம்புறேன்''

- ந.புஹாரி ராஜா