Published:Updated:

இன்ஸ்டன்ட் வீடு!

இன்ஸ்டன்ட் வீடு!

இன்ஸ்டன்ட் வீடு!

இன்ஸ்டன்ட் வீடு!

Published:Updated:
##~##

''நான் அடிப்படையில் மார்க்கெட்டிங் ஆள். பிஸினஸ் விஷயமா பல்வேறு இடங்களுக்குப் போக வேண்டியிருக்கும். காலை 10 மணிக்கு ஒரு வேலை முடிஞ்சா, அடுத்த அப்பாயின்ட்மென்ட் 12 மணிக்கு இருக்கும். இடையில உள்ள இரண்டு மணி நேரத்தில் ரிலாக்ஸ் பண்ண நல்ல இடம் கிடைக்காது. வீட்ல இருந்து எடுத்துட்டு வந்த சாப்பாட்டை வெயில்ல உட்கார்ந்து சாப்பிட வேண்டியிருக்கும். முகம் கழுவ சரியான இடம் இருக்காது. இப்படி நிறைய கஷ்டங்கள். நம்மை மாதிரி மத்தவங்களும் கஷ்டப்படக் கூடாதுனு  யோசிச்சப்ப கிடைச்ச ஐடியாதான் '30 மினிட்ஸ்’. 2009 நவம்பரில் தொடங்கினோம். சக்சஸ்ஃபுல்லா போயிட்டு இருக்கு!'' - அறிமுகம் தந்தபடி தன் நிறுவனத்தைச் சுற்றிக் காட்டுகிறார் வினுதா.

இன்ஸ்டன்ட் வீடு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தி.நகர் அபிபுல்லா சாலையில் நடிகர் சங்கத்துக்கு எதிரே இருக்கும் '30 மினிட்ஸ்’ நகரத்துக்குத் தேவையான ஐடியா. சென்னையில் காலை 10 மணிக்கு ஒரு நிகழ்ச்சி. ஆனால், அதிகாலை 4 மணிக்கே வந்து இறங்கிவிட்டோம். நண்பர்கள், உறவினர்கள் வீடு எதுவும் இல்லை என்பவர்கள் 30 மினிட்ஸ் போகலாம். இதைத் தவிர குட்டித் தூக்கம் போடலாம், பிஸினஸ் மீட்டிங் நடத்தலாம், காபி, டீ, ஜூஸ் குடித்தபடி இணையத்தில் மேயலாம், டி.வி. பார்க்கலாம், பாட்டு கேட்கலாம், பார்லரில் தங்க ளை  அழகுபடுத்திக்கொள்ளலாம் என ஐடியாவே அசத்துகிறது.

''30 நிமிஷத்துல ஒரு ஸ்டார் ஹோட்டல்ல கிடைக்கிற அத்தனை வசதிகளும் குறைஞ்ச கட்டணத் துல நல்ல தரத்துல தரணும்ங்கிறதுதான் எங்க நோக்கம். குறிப்பா மார்க்கெட்டிங் துறையில உள்ளவங்க தங்களை ரெஃப்ரெஷ் பண்ணிக்கிற இடமா இது இருக்கணும்னு நினைச்சேன். ஆனா, இன்னைக்கு எங்க கஸ்டமர்களா இருக்குற ஆயிரத்து சொச்சம் பேருல 30 அல்லது 40 பேருதான் மார்க்கெட்டிங் ஆட்கள். மத்தபடி பிஸினஸ்மேன்கள்தான் அதிகம்.

இந்த மாதிரியான பிஸினஸ்ல இந்தியாவி லேயே நாங்கதான் முன்னோடினு நினைக் கிறேன்.

இன்ஸ்டன்ட் வீடு!

வேலையில இருந்தப்ப என் சம்பளத்துல சேமிச்சு வெச்ச காசை வெச்சுதான் இதை ஆரம்பிச்சேன். உடனே லாபம் வந்துடும்னு எதிர் பார்க்க முடியாது. அதிகபட்சம் மூணு வருஷத்துல நீங்க போட்ட முதலுக்கு மேலேயே எடுத்துடலாம். நாள் முழுவதும் வெளியில் சுத்துற ஒருத்தர் முகம் கழுவிட்டு, மெயில் செக் பண் ணிட்டு, ஒரு டீ குடிக்க  15,000 ரூபாய் சம்பளம் வாங்குறவர் பெரிய

இன்ஸ்டன்ட் வீடு!

ஹோட்டல்களுக்குப் போக முடியுமா? அப்படியே போனலும் குறைஞ்சது  200 ரூபாயாவது ஆகும். அதே சேவையை நாங்க  10 ரூபாய்க்குத் தருகிறோம். இந்த கான்செப்ட்டை புரியவைக்கிறதுதான் இந்த பிஸினஸ்ல எங்களுக்கு இருந்த ஒரே சவால்!

எங்களுக்கு ஒரு கஸ்டமர் இருக்கார். அவர் மாசத்துல 15 தடவைக்கும் மேல வேலை விஷயமா ஃப்ளைட்ல பறந்துகிட்டே இருப்பார். அதனால் டாக்குமென்ட்ஸ், பில்கள், லெட்டர்ஸ், அப்பாயின்ட்மென்ட்ஸ்னு எதையும் சரியா மெயின்ட்டெய்ன் பண்ண முடியலைனு சொன் னார். உடனே ஒரு நாள் டைம் எடுத்து அதை எல்லாத்தையும் சீர்படுத்திக்கொடுத்தோம். இந்த மாதிரி செகரெட்டரியல் சர்வீஸும் பண்றோம். இப்படி ஒவ்வொரு கஸ்டமர்கிட்ட இருந்தும் அவங்க தேவைகளை வைத்தே நாங்க எங்களை அப்டேட் பண்ணிக்கிறோம். அதுதான் எங்க சக்ஸஸ் சீக்ரெட்!

இப்பவரை நாங்க 'நான்-பிராண்டிங்’கா இருக்கோம். எங்களோட பிராண்ட் மக்கள் மனசுல நிக்கணும். இதுமாதிரி நிறைய இடங்கள்ல எங்களோட கிளைகளை ஏற்படுத்தனும். இப்போதைக்கு எங்க லட்சியம் அதுதான்!'' நம்பிக்கையோடு பேசுகிறார் வினுதா.

- ந.வினோத்குமார்
படங்கள்: வி.செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism