Published:Updated:

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தேர்த் திருவிழா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தேர்த் திருவிழா!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தேர்த் திருவிழா!

பத்து நாட்களாக இரவு பல்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடந்தது. இன்று முக்கிய திரு விழாவாக தேர் திரு விழா நடந்தது. இதனை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு மேல் மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜ பெருமான் தேரில் எழுந்தருளினர்

சிதம்பரத்தில் உலகப் பிரசித்திபெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுக்கு இரண்டு திருவிழாக்கள் வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனித் திருமஞ்சன திருவிழாவும் நடைபெறும்.

ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனித் திருமஞ்சன திருவிழா கடந்த 12-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் பின்பு பஞ்ச மூர்த்திகளுக்கு தீபாராதனை செய்யப்பட்டு வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்களும் சிவனடியார்களும் கலந்துகொண்டு ஸ்ரீ நடராஜ பெருமானையும் சிவகாமசுந்தரியையும் வழிப்பட்டனர். தொடர்ந்து பத்து நாள்களாக இரவு பல்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடந்தது.

முக்கியத் திருவிழாவாக தேர்த்திருவிழா இன்று நடந்தது. இதை முன்னிட்டு காலை 5.30 மணிக்கு மேல் மூலவரான  ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜ பெருமான் தேரில் எழுந்தருளினார். இதைத் தொடர்ந்து தனித்தனியாக அலங்கரிக்கப்பட்ட தேர்களில் விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர் ஆகியோர் தேரோடும் வீதிகளில் வலம் வந்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். நாளை (21-ம் தேதி) அதிகாலை கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜருக்கு மகா அபிஷேகமும், மதியம் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும் நடக்கிறது. அப்பொழுது நடராஜர், சிவகாமசுந்தரி சமேதமாக நடனம் ஆடியபடியே பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இதைத் தொடர்ந்து 22-ம் தேதி இரவு  பஞ்ச மூர்த்திகள் முத்துப் பல்லக்கில் வீதியுலா நடைபெறும். திருவிழாவையொட்டி சிதம்பரம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சதர்களின் செயலாளர் நடேஸ்வர தீட்சதர் தலைமையில் தீட்சதர்கள் செய்து வருகின்றனர். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு