Published:Updated:

என் ஊர்!

அந்தக் கால மெரினா... ஐஸ் வாட்டர் அரையணா!

என் ஊர்!

அந்தக் கால மெரினா... ஐஸ் வாட்டர் அரையணா!

Published:Updated:
##~##

''போக்குவரத்து நெரிசல்கள் இல்லாமல் இருந்த இடம் இது. ஆனால், இன்று காலங்கள் மாற மாற எல்லாமே மாறிவிட்டது!''- தான் வளர்ந்த மயிலாப்பூரைப் பற்றி பேசுகிறார் ஏவி.எம்.சரவணன்!

 'கதவு எண் 13, துவாரகா காலனி - இதுதான் மயிலாப்பூரில் நாங்கள் முதன்முதலில் வசித்த வீட்டு முகவரி. அப்போது அந்த ஏரியாவில் உள்ள வீடுகள் ஈ.வி.கல்யாணி என்பவரின் குடும்பத்துக்குச் சொந்தமாக இருந்தன. தூத்துக்குடி முருகதாஸ், தயாரிப்பாளர் பி.எஸ்.ரெங்கா, சினிமா இயக்குநர் பி.என்.ராவ், போட்டோகிராஃபர் சாரி என பலர் அந்தத் தெருவில் வசித்தனர். அப்போது நிதித்துறை அமைச்சராக இருந்த தேஷ்முக்கின் மனைவி துர்காபாய் தேஷ்முக், எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீடு. அந்த வீட்டில் அன்று உருவான 'ஆந்திர மகிளா சபை’தான் இன்று மிகப்பெரிய அமைப் பாக வளர்ந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என் ஊர்!

எங்கள் தெருவில் பெங்காலி குடும்பம் ஒன்று இருந்தது. அங்கு கிடைக்கும் தேன் தடவிய சப்பாத்திக்காகவே அடிக்கடிச் செல்வோம். அப்போது ஏரியாவையே சைக்கிளில் வலம் வருவோம். சைக்கிள் கற்றுக்கொள்ளும்போது பல முறை கீழே விழுந்து அடிபட்டு இருக்கி றேன். ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தயிர் வியா பாரி தன் வருகையைத் தெரிவிக்க 'உய்... உய்...’ என சத்தம் கொடுத்துக்கொண்டே வருவார். அதேபோல சூடான நிலக்கடலையுடன் வரும்

என் ஊர்!

தள்ளுவண்டிக்காரருக்காகவே காத்திருந்து அடித்துப் பிடித்து வேர்க்கடலை வாங்கிச் சாப்பிடுவோம். ஆனால், இன்று கடற்கரைப் போன்ற ஓரிரு இடங்களைத் தவிர தள்ளு வண்டிகளைப் பார்க்க முடியவில்லை.

ஐந்தாம் வகுப்பு வரை சில்ரன்ஸ் கார்டன் பள்ளியில் படித்தேன். இது சென்னையில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட மாண்டிசோரி பள்ளி. பிறகு பி.எஸ்.ஹைஸ்கூல். அப்போது காலை 7.15 மணிக்கெல்லாம் ஸ்கூல்ஆரம் பித்துவிடும். ஆனால், நாங்கள் 6 மணிக்கே ஸ்கூலுக்குப் போய்விடுவோம். வகுப்பு தொடங்கும்வரை அரட்டை, விளையாட்டு என பொழுது கழியும். இப்ப உள்ள ஹோம்ஒர்க் சிஸ்டம் எதுவும் அப்போது கிடையாது.  

மாலை நேரங்களில் பீச்சுக்கு சென்றுவிடு வோம். நடைபாதையின் இரு புறமும் வளர்ந்து இருக்கும் சவுக்கு மரங்கள் பார்ப்பதற்கு ரம்யமாக இருக்கும். வார இறுதி நாட்களில் போலீஸ் பேண்டு வாத்தியக் குழு கடற்கரையில் சினிமா பாடல்களை இசைப்பார்கள். சாயங்கால வேளைகளில் 'மாடர்ன் கஃபே வேன்’ பீச்சுக்கு வரும். அதில் கிடைக்கும் காபி, இட்லி, தோசையை வாங்கி பீச்சிலேயே சாப்பிடுவோம். அந்த வேனில் கிடைக்கும் அரையணா ஐஸ் வாட்டர் எல்லாருக்கும் பிடிக்கும்.  அதே போல் கடற்கரையில் திருவல்லிக்கேணி சிறுவர்கள் விற்கும் மிளகாய், தேங்காய் மசாலா சுண்டலின் ருசி இன்னும் நாவில் நிற்கிறது.

தண்ணீர்த் துறை மார்க்கெட்தான் மயிலாப்பூரில் ஃபேமஸான ஏரியா. சின்ன வயதில் எங்க வீட்டு கணக்குப் பிள்ளையோடு காலை நேரங்களில் அந்த மார்க்கெட் போயிருக்கிறேன். தனியாருக்குச் சொந்தமான இடம் எனச் சொல்லி இரண்டு மாதத் துக்கு முன்புதான் அதை இடித்தார்கள். அந்த வியாபாரிகள் இப்போது ரோட்டோரத்தில் கடை வைத்திருக்கின்றனர். காலம் மனிதர்களை எப்படி எல்லாம் புரட்டிப்போடுகிறது என்பதற்கு இவர்களே உதாரணம்!''

- சி.காவேரி மாணிக்கம்,
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

என் ஊர்!
என் ஊர்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism