Published:Updated:

43 வயது... 40 டிகிரிகள்!

43 வயது... 40 டிகிரிகள்!

##~##

கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் பாதியை நிறைத் திருக்கின்றன புத்தகங்கள். கிட்டத்தட்ட தினசரி 12 மணி நேரம் வாசிக்கிறார் இவர். நிர்வாகவியல், மனநலம், சட்டம், கணிதம், ஆங்கிலம், சுற்றுச்சூழல், போக்குவரத்து உட்பட இவர் வாங்கிய பட்டங்கள் 40. ஆனாலும், மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டே இருக்கிறார்!

 ''கற்றது கையளவு. அறிவை வளர்த்துக்கொள்வதில் எப்போதும் திருப்தி அடைந்துவிடக் கூடாது. தேடிக்கொண்டே இருக்க வேண்டும். பெற்றோர்கள் 'டாக்டராக வேண்டும். இன்ஜினீயராக வேண்டும்’ என்று தங்களின் கனவுகளைக் குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். உண்மையில் அவர்கள் பெற்றுக்கொள்வது குழந்தையை அல்ல. டாக்டரையோ இன்ஜினீயரையோதான்!'' என்று சொல்லும் கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மனநல ஆலோசனை மற்றும் மனிதவள மேம்பாட்டுக்கான பணிகளைச் செய்து வருகிறார்.

43 வயது... 40 டிகிரிகள்!

''இதுவரை சுமார் 200 தம்பதியினரை விவாகரத்து பெறுவதில் இருந்து தடுத்திருக் கிறேன். மன

43 வயது... 40 டிகிரிகள்!

அழுத்தத்தாலும் கல்வித் திட்டத்தின் அழுத்தம் காரணமாகவும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர் களுக்கு கவுன்சலிங் கொடுத்துள்ளேன். தற்கொலை செய்வதில் பிடிவாதமாக இருந்த பலர் இன்று புது வாழ்க்கை பெற்று வாழ்கிறார்கள். அதிகாரத்தாலும் பண பலத்தாலும் ஏழைகள் பாதிக்கப்படும்போது அவர்களுக்காக இலவசமாக நீதிமன்றங்களில் வாதாடுகிறேன்.

பட்டங்களை முடித்துவிட்டு ஏ.சி. அறையில் உட்கார்ந்து நான் பிஸியாக இருக்கிறேன் என்று சொல்வதால் சமூகத் துக்கு எந்தப் பயனும் இல்லை. நான் படிக்கும்போது எனக்காக பஸ் ஓட்டிய டிரைவர், பாடம் எடுத்த ஆசிரியர், உடைகளைத் தைத்த டெய்லர், நான் உணவு உண்ணக் காரணமாக இருந்த விவசாயி என எனக்கு இந்தச் சமூகம் கொடுத்த கடன்தான் இந்தப் பட்டங்கள்.  அதை நான் திருப்பிச் செலுத்துவது என்  கடமை. இன்னும்சமூகத்துக் காக நிறையப் படிக்க, கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

நகரங்களைவிடக் கிராமங்களில்தான் அதிகம் பயணிக் கிறேன். கிராமப் பள்ளிகளுக்குச் சென்று கருத்தரங்குகள் மூலம் கல்வியின் அவசியம், உலக நடப்புகள் போன்ற வற்றைச் சொல்லிக் கொடுக்கிறேன். என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் பலர், பல்வேறு மாவட் டங்களிலும் இலவச மனநல ஆலோசனை மையங் களை நிறுவி மக்களுக்காகப் பணியாற்றுகிறார்கள். மனித வளங்களை வளர்ப்பதும், மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதும், மக்களுக்கு கல்வியின் தேவையை புரியவைப்பதும்தான் என் தலையாய கடமை!'' என்கிறார் அழுத்தமாக.

43 வயது... 40 டிகிரிகள்!

கு.சக்திவேல், படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்

அடுத்த கட்டுரைக்கு