Published:Updated:

காவிரியைக் காக்க ஒரு காவிப் படை!

காவிரியைக் காக்க ஒரு காவிப் படை!

காவிரியைக் காக்க ஒரு காவிப் படை!

காவிரியைக் காக்க ஒரு காவிப் படை!

Published:Updated:
##~##

ங்கை அசுத்தப்படுவதைத் தடுக்கக் கோரி 119 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார் இளம் துறவி நிகமானந்தா. 'தென்னிந்தியாவின் கங்கையாக விளங்கும் காவிரியும் கங்கையைப் போல மாசுபட்டு வருகிறது. காவிரியைக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை’ என்ற கோஷத்தோடு களம் இறங்கி உள்ளது, 'அகில பாரதிய துறவியர் சங்கம்’ அமைப்பு!

 'அன்னை காவிரி தீர்த்த யாத்திரை’ என்ற பெயரில் கடந்த அக்டோபர் 23-ம் தேதி கர்நாடகாவின் தலைக் காவிரியில் தொடங்கிய இந்த அமைப்பின் யாத்திரை, காவிரியின் பாதையிலேயே பயணித்து, சமீபத்தில் தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லை வந்து அடைந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காவிரியைக் காக்க ஒரு காவிப் படை!

யாத்திரை ஒருங்கிணைப்பாளரும் அகில பாரதிய துறவியர் சங்கச் செயலாளருமான ராமானந்தாவிடம் பேசினோம். ''காவிரி அன்னையின் தூய்மையைக் காக்க வலியுறுத்தி நடக்கும் முதல் யாத்திரை இது. பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், காசி, கர்நாடகா, தமிழகம் எனப் பல மாநிலங்களைச் சேர்ந்த 30 துறவிகள் யாத்திரையின் நிரந்தர உறுப்பினர்களாகப் பயணம் செல்கிறோம். நாங்கள் செல்லும் ஊர்களில் உள்ள ஆர்வம் உள்ள மக்களும் இதில் கலந்துகொள்கிறார்கள். காவிரி அன்னையின் சிலை ஒன்றை எடுத்து வந்துள்ளோம். ஒகேனக்கல், மேட்டூர், பவானி, கொடுமுடி, ஸ்ரீரங்கம், கும்பகோணம் என காவிரிக் கரையில் அமைந்து உள்ள முக்கிய இடங்களுக்குச் சென்று, அங்கே காவிரி அன்னைக்கு நீராட்டு நடத்தி, ஆராதனைப் பூஜைகளைச் செய்கிறோம். அந்தந்தப் பகுதிகளில் சந்திக்கும் மக்களிடம் யாத்திரையின் நோக்கத்தைச் சொற்பொழிவாகவும், துண்டுப் பிரசுரங்களாகவும் கொண்டுசேர்க்கிறோம்.

காவிரியைக் காக்க ஒரு காவிப் படை!

இறுதியாக பூம்புகாரில் 'லோபமுத்ரா ஹோமம்’ நடத்தி பூஜைகள் செய்து, யாத்திரையை நிறைவு செய்கிறோம். அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இந்த யாத்திரையை மேற்கொள்ளத் திட்டம் இருக்கிறது. இயற்கை தந்த கொடையான ஆறுகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம் என்றால், அதன் விளைவைப் பிற்காலச் சந்ததியினரால் எதிர்கொள்ளவே முடியாது.

அப்படி ஒரு விபரீத நிலைமையில் உலகை ஆழ்த்திவிடக் கூடாது என்றுதான் துறவிகளாக இருந்தாலும், நாங்களே களம் இறங்கிவிட்டோம். அரசுதான் இதை எல்லாம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. காவிரியின் தூய்மை மட்டும் இல்லாமல் பிளாஸ்டிக், பாலி தீன் குப்பைகள், ஆலை மற்றும் சாயக் கழிவுகள் ஆகியவற்றின் ஆபத்தை உணர்த்தவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம்!'' என்கிறார் திடமாக.

- எஸ்.ராஜாசெல்லம், படங்கள்: எம்.தமிழ்ச்செல்வன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism