Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா! - மூக்குத்திப் பூ மேலே!

அனுஷா... ஆதிரா... இனியா! - மூக்குத்திப் பூ மேலே!
பிரீமியம் ஸ்டோரி
News
அனுஷா... ஆதிரா... இனியா! - மூக்குத்திப் பூ மேலே!

டிஜிட்டல் கச்சேரி

‘`எனக்கு வர்ற கோவத்துக்கு...’’

‘`வந்தா என்ன பண்ணுவ அனுஷா?’’

‘`அவ்ளோ கோவம் வருது  இனியா!’’

‘`சரி... விஷயம் என்னன்னு சொல்லிட்டுக் கோபப்படு!”

‘`புனே, ஐடி கம்பெனியில கொடூரமா கொலை செய்யப்பட்ட ரசிலாவைப் பத்திதான் பேசிட்டு இருக்கேன். தன்னோட வேலையை முடிக்கிறதுக்காக ஞாயிற்றுக்கிழமைனுகூட பார்க்காம ஆபீஸுக்கு வந்து தனியா வேலை பார்த்த பொண்ணை இப்படி அநியாயமா கொன்னுட்டாங்களே!’’

அனுஷா... ஆதிரா... இனியா! - மூக்குத்திப் பூ மேலே!

`நானும் கேள்விப்பட்டேன் அனு. ஒரு பொண்ணு தனியா வெளிய போனாத்தான் பிரச்னையா இருந்தது... இப்போ ஆபீஸுக்குப் போனாலுமா?’’

‘`அதுலயும் அந்த நிறுவனத்தோட செக்யூரிட்டியே அந்தப் பொண்ணை கொலை பண்ணினது இன்னும் ஷாக்கிங்பா...”

‘`ஆண் பெண் சமநிலைனு பேசிட்டு இருக்கோம். அந்தப் புரிதல், அடிப்படையில் வீட்ல இருந்தே உருவாகணும். இல்லாட்டி இந்த மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்துட்டுதான் இருக்கும்.’’

‘`என்னதான் நாடு மாறணும்னு பேசினாலும். நாமளும் எச்சரிக்கையோட இருக்கிறது நல்லது...”

‘`நிச்சயமா! வீட்ல பெண் குழந்தை பிறக்கும் போது அதை சந்தோஷமா வரவேற்பதில் ஆரம்பிச்சு , பெண்கள் வேலைக்குச் செல்வதை மனப்பூர்வமா ஏத்துக்கிறது, குடும்ப வேலைகளில் பங்கெடுப்பதுனு ஆண்கள் அடிப்படையில் இருந்து அக்கறை எடுத்துக்கிட்டா நல்லது!’’
‘`ஆணோ பெண்ணோ... பாலினம் எதுவா இருந்தாலும் குழந்தையா இருக்கும் போதிலிருந்தே நல்ல விஷயங்களைச் சொல்லி வளர்க்கிறது அவசியம்.’’

‘`ம்க்கும்... நான் சின்னக் குழந்தையா இருந்தப்போ எங்க பாட்டி எனக்குத் தினமும் நல்ல கதைகள் சொல்லித் தருவாங்க. ஆனா, எங்க அக்கா அவளோட பையனுக்கு ஒரு கதையும் சொன்னதாவே தெரியலை. எப்பப் பாத்தாலும் எங்க அக்கா பையன் மொபைல்லதான் விளையாடிட்டு இருக்கான்.’’
‘`டெக்னாலஜியை நம்ம தேவைக்கு மட்டும் பயன்படுத்தினா போதும். அதை ஒரு பொக்கிஷம் போல குழந்தைகள்கிட்ட திணிக்குறது ரொம்ப தப்பு. அதே நேரத்துல ஆன்லைன்ல ஒளிஞ்சிருக்குற ஆபத்துகள் பற்றி குழந்தைகளுக்கு சொல்லித் தர்றது ரொம்ப முக்கியம்.’’
‘`காதோரம் லோலாக்கு கதை சொல்லுதம்மா...’’

‘`இங்க சீரியஸா பேசிட்டு இருக்கும்போது எதுக்கு ரூட்டை மாத்துற ஆதிரா?!’’

‘`அதான்... சீரியஸ்னு சொன்னீங்களே... அதுக்குதான்.’’

‘`அனு... லோலாக்குனா என்னடி?”

‘`என்னது... உனக்கு லோலாக்கு, புல்லாக்கு இதெல்லாம் பத்தி தெரியாதா?’’

‘`பெண்கள் அணியுற ஆடை ஆபரணங்களை வெச்சு தமிழ் சினிமாவுல நிறைய பாடல்கள் வந்திருக்கே...’’

‘`முத்துமணி மாலை... உன்னத் தொட்டுத் தொட்டு தாலாட்ட...’’

‘`ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வாரியா... நான் ஒட்டிக்கொள்ள இடம் கொஞ்சம் தாரியா...’’

‘`அட... பாட்டெல்லாம் சூப்பரா இருக்கே... அடுத்தப் பாட்டு நான் பாடுறேன்!’’

‘’மூக்குத்திப் பூ மேலே... காத்து உட்கார்ந்து பேசுதடி!”

- கச்சேரி களைகட்டும்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
அனுஷா... ஆதிரா... இனியா! - மூக்குத்திப் பூ மேலே!

சத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணையதள முகவரியைத் தொடருங்கள். அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

அனுஷா... ஆதிரா... இனியா! - மூக்குத்திப் பூ மேலே!

நேற்று சிறுசேரி உமா மகேஸ்வரி...இன்று புனே ரசிலா... என்ன சொல்கிறார்கள் ஐ.டி பெண்கள்?!
http://bit.ly/2kQBLqW

அனுஷா... ஆதிரா... இனியா! - மூக்குத்திப் பூ மேலே!

பெற்றோர்களே... ஆன்லைனில் உங்கள் குழந்தை களைச் சூழும் ஆபத்துகள் என்னென்ன?
http://bit.ly/2jUHMP4

அனுஷா... ஆதிரா... இனியா! - மூக்குத்திப் பூ மேலே!

பெண்களை மதிப்பதில் நீங்கள் ஹீரோவா...வில்லனா? #மினிடெஸ்ட்!
http://bit.ly/2kUOQvo

அனுஷா... ஆதிரா... இனியா! - மூக்குத்திப் பூ மேலே!

கொலுசு டு தாவணி... புகழ் பாடும் 15 தமிழ் சினிமா பாடல்கள்!
http://bit.ly/2krfLSv