Published:Updated:

லிட்டில் ஜீனியஸ்!

லிட்டில் ஜீனியஸ்!

லிட்டில் ஜீனியஸ்!

லிட்டில் ஜீனியஸ்!

Published:Updated:
##~##

வீணாஸ்ரீ... மதுரையில் பிறந்து, தினம் ஒரு சாதனை செய்துகொண்டு இருக்கும் சாதனைச் சிறுமி! ஆறு வருடங்களுக்கு முன்பு மைக்ரோசாஃப்ட் நடத் திய ஆன்லைன் நெட் எக்ஸாமில் கலந்துகொண்டு உலகிலேயே முதல் மதிப்பெண் பெற்ற லவனாஸ்ரீக்கு அப்போது வயது ஆறு. குறைந்த வயதிலேயே அதிக மதிப்பெண் பெற்றதற்காக கின்னஸில் இடம்பிடித் தவர்.

 உலக நாடுகள் பயந்து நடுங்கும் 'விக்கிலீக்ஸ்’ நிறு வனர் ஜூலியன் அசாஞ்சேவிடம் பாராட்டுச் சான் றிதழ் வாங்கியிருப்பவர். இந்தச் சாதனைகள் சாம்பிள் மட்டுமே. லவீனாவின் தந்தை முனுசாமி, ''பிறந்ததுல இருந்தே லவீனா நல்ல சுறுசுறுப்போட, கற்பூரப் புத்தி யோட இருந்தா. அதை அப்படியே டெவலப் பண்ற மாதிரி பயிற்சிக் கொடுத்தோம். எந்த விஷயத்தையும் ஒரு தடவை பார்த்துட்டா போதும். அதை அப்படியே திரும்ப செஞ்சிருவா. அதனால நாங்க அவளுக்கு முதல்ல திருக்குறளை சொல்லிக்கொடுத்தோம். மூணு மாசத்தில் எல்லா குறளையும் மனப்பாடம் பண் ணிட்டா. 1,330 திருக்குறளையும் தப்பே இல்லாம ஒப்புவிச்சு சாதனை பண்ணினா. அப்போ அவளுக்கு வயசு வெறும் மூணு. அப்புறம் கம்ப்யூட்டர், அறிவியல் கண்டுபிடிப்புகள் பத்திச் சொல்லிக் கொடுத்தோம். அதைத் தெரிஞ்சுகிட்டு அவ கேட்குற சந்தேகங்களை எங்களால தீர்த்துவைக்க முடியலை. அந்தந்தத் துறை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லிட்டில் ஜீனியஸ்!

சம்பந்தப்பட்ட நிபுணர்கள்கிட்ட லவீனா பத்திச் சொல்லி, சந்தேகங்களைத் தீர்த்துவெச்சோம். அஞ்சு வயசில் நிறையப் புத்த கங்கள் வாங்கிக்கொடுத்தோம். அவளே படிச்சுப் புரிஞ்சுக்க ஆரம்பிச்சிட்டா. சந் தேகம் வந்தா வெவ்வேறுப் புத்தகங்கள் படிச்சு சந்தேகங்களை அவளே தீர்த்துக்கிட்டா. உலக அளவில் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் தொடர்பா நடந்த பலப் போட்டிகளில் கலந்துக்கிட்டுப் பரிசுகள் வாங்கினா. இவளோட போட்டிப் போட்ட எல்லாருமே பெரியப் பசங்க. தொடர்ந்து ஜெயிச்சுட்டே இருந்ததால 'நேஷனல் சைல்டு அவார்டு’, ரிலையன்ஸ் நிறுவனத் தோட 'லிட்டில் ஜீனியஸ்’ சர்ட்டிஃபி கேட், போகோ 'அமேசிங் கிட்ஸ்’ அவார்டுனு பல விருதுகள் தேடி வந்துச்சு. இதுபோக, லிம்கா புக் ஆஃப் ரிக்கார்டில் இடமும் கிடைச்சது. உலகப் பிரசித்திப் பெற்ற தேடல் வலைதளமான கூகுளில் 'லவீனாஸ்ரீ’னு டைப் செஞ்சாலே, அவளுடைய போட்டோ கலெக்ஷன், வீடியோ பதிவு, அவளைப் பற்றி உலகப் பத்திரிகைகளில் இடம்பெற்றக் கட்டுரைகள் வரும். இதிலேயே லவீனாஸ்ரீயின் திறமைகளைப் புரிஞ்சுக்கலாம். இன்னொரு முக்கியமானவிஷயம், இங்கிலாந்து நாட்டு ராணி எலிசபெத் லவீனாவின் திறமையைப் பாராட்டி கடிதமும் எழுதியுள்ளார்'' என்றார் மகிழ்ச்சியோடு.

லிட்டில் ஜீனியஸ்!

கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடும் வயதில் கம்ப்யூட்டர் கேம்ஸ்க்கு புரொகிராம் எழுதிக் கொண்டு இருக்கும் லவீனாஸ்ரீக்கு இப்போது வயது 12. மதுரை லட்சுமி டி.வி.எஸ். ஸ்கூலில் (ஐசிஎஸ்.சி) ஏழாவது படித்துக்கொண்டு இருக் கிறார். அவரிடம் பேசியபோது, ''சர்வதேச அளவில் நான் வாங்கியப் பரிசுகள், சான்றிதழ்கள் எதுவுமே எனக்குப் பெரிய விஷயமா தெரியலை. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், இப் போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங்னு இந்தியாவோட மிக முக்கியமான மூணு பேர்கிட்ட பாராட்டும், வாழ்த்துக்களும் வாங்கினேன். அதுதான் எனக் குச் சந்தோஷமா இருக்கு. எனக்கு ஜெயலலிதா மேடம்தான் ரோல் மாடல். அவங்களைச் சந்திச்சு அவங்களோட வாழ்த்துக்களை வாங்க ணும். அதுதான் என்னோட உடனடி ஆசை. 2010-ல் 'ரெட் ஹாட் லினக்ஸ்’ சார்பில்  இன்ஜி னீயரிங் எக்ஸாம் நடத்தினாங்க.  அதில் நான் கலந்துக்கிட்டு நல்ல மார்க் எடுத்திருக்கேன்.  பல சாஃப்ட்வேர் கம்பெனிங்க வேலைக்கு எடுக்கும்போது கேட்கிற முதல் கேள்வி... 'ரெட் ஹாட்ல எவ்வளவு மார்க்?’ அதிலேயே நல்ல மார்க் எடுத்தது சந்தோஷமா இருக்கு.

லிட்டில் ஜீனியஸ்!

சாஃப்ட் வேர் துறையில் சாதிச்சாலும் நான் ஐ.பி.எஸ்-தான் ஆவேன். என்னுடைய எல்லாத் திறமைகளும் கடைசி வரைக்கும் இந்தியாவுக்குத் தான் பயன்படணும்!''- பளிச்சென்று சிரிக்கிறார் லவீனாஸ்ரீ!

- தி.முத்துராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism