Published:Updated:

நாளைய தீர்ப்பு முதல் மெர்சல் வரை... விஜய்யின் டிரெண்ட்செட் கலெக்‌ஷன்! #HBDVijay

நாளைய தீர்ப்பு முதல் மெர்சல் வரை... விஜய்யின் டிரெண்ட்செட் கலெக்‌ஷன்! #HBDVijay
நாளைய தீர்ப்பு முதல் மெர்சல் வரை... விஜய்யின் டிரெண்ட்செட் கலெக்‌ஷன்! #HBDVijay

நாளைய தீர்ப்பு முதல் மெர்சல் வரை... விஜய்யின் டிரெண்ட்செட் கலெக்‌ஷன்! #HBDVijay

நடிப்பு, நடனம், பாடல் இவற்றில் மட்டுமல்ல புதுமையான ஆடைகளை அணிந்து, அதிலும் பல டிரெண்ட் செட் செய்தவர் விஜய். கதாபாத்திரத்துக்கு ஏற்ப உடைகள், அதில் மிடுக்கான தோற்றம் பெற தனக்கே உரித்தான பாணியில் ஸ்டைலிங் என ஏகப்பட்ட `ஃபேஷன்', விஜய்யால் மக்களிடம் கொண்டுசேர்க்கப்பட்டது. `நாளைய தீர்ப்பு' முதல் `மெர்சல்' வரை விஜய் அறிமுகம் செய்த சூப்பர் டூப்பர் டிரெண்டி கலெக்‌ஷன் இதோ...

நாளைய தீர்ப்பு :

`18 வயது இளைஞன், இத்தனை ஃபேஷன் சென்ஸோடு இருக்க முடியுமா?' என வியக்கவைத்தவர் விஜய். முதல் படமான `நாளைய தீர்ப்பில்' நல்ல நடிகன் என்பதையும் தாண்டி, புதுமையான டிரெண்டையும் உருவாக்கினார். `டபுள் பெல்ட்', `ஸ்கின்னி ஜீன்ஸ்', `ஷர்ட் ஓவர் டாங்க் டாப்', `Wayfareres' கண்ணாடி போன்றவற்றை அறிமுகம்செய்தவர் விஜய்தான்.


பூவே உனக்காக :

`நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது...' என்று பாடி நம்மை அவர் பின் சுற்றவைத்தார் விஜய். அந்தக் காலத்திலேயே சிவப்பு நிற கோட் காம்போ, வெள்ளை நிறத்தில் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் நிறைந்த கோட், நெக் Bow என புதிய டிரெண்டை தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகம்செய்தார். அன்றிலிருந்து அனைத்து திருமண விழாக்களிலும் இந்த காஸ்டியூம்தானே `நம்பர் 1' சாய்ஸ்.


காதலுக்கு மரியாதை :

சாதாரண டீ-ஷர்ட், ஸ்னீக்கர்ஸ் ஷூ போன்றவற்றை உடுத்தி, நம்ம பக்கத்துக்கு வீட்டுப்பையன் லுக் கொடுத்த படம்தான் `காதலுக்கு மரியாதை'. போலோ (காலர் வைத்த) டீ-ஷர்ட்டை விதவிதமான பேட்டர்னில் உடுத்தி, புது டிரெண்டை உருவாக்கியவர்.


குஷி :

`எக்ஸ்பிரஷன் குயின்' ஜோதிகாவுடன் இணைந்து நடித்த `குஷி' படத்தில் கோட் சூட், டாங்க் டாப் ஃபேஷன், ஷர்ட் ஓவர் டீ-ஷர்ட், ஜீன்ஸ் ஜாக்கெட், முழுநீளக்கை டீ-ஷர்ட்... இப்படி அடுக்கிக்கொண்டேபோகிற அளவுக்கு ஒவ்வொரு சூழ்நிலைக்கேற்ப நேர்த்தியான உடைகளை அணிந்திருப்பார் விஜய். படம் முழுக்க சண்டைக்கோழி  கதாபாத்திரத்தை வெளிப்படுத்திய விஜய்க்கு, காஸ்டியூம்ஸ் அனைத்தும் `வேற லெவல்'.


ப்ரியமானவளே:

ஜெர்சி, ஸ்வெட்ஷர்ட்டில் US ரிட்டர்ன் மாடர்ன் லுக், திருமணம் முடிந்த பிறகு ஷர்ட், டீ-ஷர்ட்களில் `கூல்' லுக், மனைவியைப் பிரிந்த  பிறகு, பொறுப்பான கணவர், அன்பான தந்தை, பண்பான முதலாளி என்று சொல்லும் அளவுக்கு கோட் சூட்டில் `ஸ்மார்ட்' லுக் என நடிப்பில் மட்டுமல்லாது உடையிலும் வெவ்வேறு பரிமாணத்தைக்கொண்டிருக்கும் படம் `ப்ரியமானவளே'. ஒரே படத்தில் பல டிரெண்டை அறிமுகப்படுத்திவிட்டார் நம்ம `தளபதி'.


தமிழன் :

உலக அழகியுடன் இணைந்து நடித்ததால் என்னவோ பல `வெஸ்டர்ன்' காஸ்டியூம்களை அறிமுகப்படுத்தினார். பிரியங்கா சோப்ராவுடன் கைகோத்து நடித்த `தமிழன்' படத்தில் ஸ்லீவ்லெஸ் டீ-ஷர்ட், கார்கோ பேன்ட்ஸ் போன்றவற்றை உடுத்தி, இவற்றின் விற்பனையைச் சூடுபிடிக்கவைத்தார்.


சச்சின் :

`நாங்கல்லாம் ஹாட்டான சென்னை க்ளைமேட்டுக்கு மட்டுமல்ல, கூலான ஊட்டி க்ளைமேட்டுக்கும் டிரெண்டை அறிமுகப்படுத்துவோம்'னு  சொல்லி, தற்போது டிரெண்டில் இருக்கும் பேஸ்டல் நிறத்தில் ஸ்வெட்டர், Faded டெனிம், பூட்ஸ் போன்றவற்றை `சச்சின்' திரைப்படத்தில் அறிமுகம்செய்தார். நாங்கல்லாம் அப்போவே அப்படி!


போக்கிரி :

நாம் அன்றாட வாழ்க்கையில் உடுத்தக்கூடிய உடைகள் இல்லையென்றாலும், Distressed (ஆங்காங்கே கிழிந்த) ஜீன்ஸ், இரண்டு சட்டைகள் அணிவது, பரந்த களைந்த தலைமுடி என முரட்டுத்தனமான லுக் `போக்கிரி' படத்தில். ஆனால், அதில் இருந்த ஹேர் ஸ்டைல் மற்றும் தாடி ஸ்டைல்தான் பலரின் ஃபேவரிட்.


துப்பாக்கி :

இன்றும் டாப் டிரெண்டில் இருக்கும் Hooded டீ-ஷர்ட், Striped டீ-ஷர்ட், கறுப்பு பிளேஸர், Aviator கண்ணாடி போன்றவற்றை 2012-ல் வெளிவந்த `துப்பாக்கி' திரைப்படத்தில் அறிமுகம் செய்தார் விஜய். அதில் வரும் ஹேர்ஸ்டைல் இன்று வரை டாப் டிரெண்டில் இருக்கிறது. டிரெண்டு  செட் செய்வதில் உண்மையிலேயே இவர் `கில்லி'.

மேலும் `ஜில்லா', `கத்தி', `தெறி', `பைரவா' போன்ற திரைப்படங்களில் புதிய டிசைன் மற்றும் வண்ணங்களில் பல கோட், பிளேஸர்களை அறிமுகப்படுத்தினார். `மெர்சல்' படத்தில் பச்சை நிற ஷர்ட் மற்றும் வெள்ளை வேஷ்டி உடுத்தி நம் பாரம்பர்ய உடையிலும் தனி டிரெண்டைப் பதிக்காமல் இல்லை. அதிலும் வெற்றி மாறனின் தாடி மீசை டிரெண்டு இன்றும் பல இளைஞர்களின் முகத்தில் காணலாம்.

இப்படி விதவிதமான ஸ்டைல்களை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அறிமுகம்செய்து அனைவருக்கும் பிடித்த `ஸ்டைல் ஐகானாக' வளம்வரும் தளபதி விஜய்யின் வருங்கால ஸ்டைலைப் பார்க்கக் காத்துக்கொண்டிருக்கிறது தனி விசிறிகளின் கூட்டம்.

தன் விசிறிகளுக்காகவே ஒவ்வொரு படத்திலும் தனித்தனியான ஆடை வடிவமைப்பை வெளிப்படுத்தும் இந்த `சர்கார்'க்கு, இன்று  பிறந்த நாள் வாழ்த்து சொல்வதில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரைக்கு