Published:Updated:

வெண்ணெய் உருளியும் அரை அடி சைக்கிளும்!

வெண்ணெய் உருளியும் அரை அடி சைக்கிளும்!

##~##

புதுவையில் பழங்கால வெண்கலப் பொருட்கள், பித்தளைப் பொருட்கள் விலைக்கு வந்தால் அதை வாங்கும் முதல் ஆள் கோவிந்த ராஜலுதான்! புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் வசிக்கும் இவர், தனது வீட்டின் ஒரு அறை முழுக்கப் பழங் காலப் பொருட்களை அடுக்கியிருக் கிறார்!

''புதுச்சேரியை அடுத்த பி.எஸ் பாளையம்தான் பிறந்த ஊர்.  தாத்தா-பாட்டி காலத்துல இருந்து விவசாயம்தான்.  50 வருடங்களுக்கு முன்பு வரை எங்கள் ஊரில் திருமண மண்ட பங்களே கிடையாது. எந்த ஒரு சுபகாரியமா இருந்தாலும், புதுசா பாத்திரங்கள் வாங்கு வது வழக்கம். 10 வருடங்களுக்கு முன் ஒருநாள் வீட்டில் இருந்த பழங்கால வெண்கலம், பித்தளைப் பொருட்களை எடைக்குப் போட நினைச் சாங்க. அப்பதான் முதன்முறையா நான் அந்தப் பொருட்களைச் சேகரிக்க ஆரம்பிச்சேன். இப்படி வருஷா வருஷம் வீட்ல வேஸ்ட்னு மத்தவங்க நினைக்கிற  பொருட்கள் என் கலெக்ஷனில் சேர்ந்துடும். கிராமத்தில் இருந்து நகரத் துக்கு குடிபெயர்ந்த போது சேகரிச்ச பொருட்களைப் பாதுகாக்க ஒரு பெரிய அறை தேவைப் பட்டது. அதனால புதுசா கட்டின வீட்டுல பாத்திரங்களுக்காகவே இரண்டு பெரிய அறைகள் ஒதுக்கினேன். அந்தக் காலத்துல வீட்டு உபயோகம் மற்றும் சுபகாரியங்களுக்கான பாத்திரங் களைத் திருப்பதி, காளஹஸ்தியில் உள்ள தொழிற்சாலைகளில் போய்வாங்குவது வழக்கம். அதுபோக சென்னை, காரைக் குடி, திருச்சி, ஸ்ரீரங்கம், மதுரைனு பல ஊர்களில் வாங்கிய பாத்திரங்களும் இங்கே இருக்கு!'' என்கிறார் கோவிந்தராஜலு.

வெண்ணெய் உருளியும் அரை அடி சைக்கிளும்!

பர்மா தேக்கில் செய்த கலைப் பொருட்கள், தட்டுகள், செக்கோஸ்லோ வேகியா பீங்கான் பொருட்கள், பெல்ஜியம் கண்ணாடிப் பொருட் கள், வெண்கலத்தால் செய்யப்பட்ட பால் கிண்ணி, பல்வேறு வடிவங் களில்  உள்ள தவலைகள், கார் வடிவிலும் மயில் வடிவிலும் உள்ள வெற்றிலைப் பெட்டி, ஒட்டியாணம்வைக்கும் பெட்டி, நகைப் பெட்டி, பித்தளை கஜானாப் பெட்டி, பழங்கால காபி ஃபில்டர், தாம்பாளத் தட்டு, வெண்ணெய் உருளி, 15 வகையான எண்ணெய்த் தூக்குகள், பிரியாணி தேக்சா, பழைய கிராமபோன், அரை அடி சைக்கிள், பழைய அரிக்கேன் விளக்கு, பழங்கால ரத்தினக் கம்பளம் என்று இவர் சேகரித்த பொருட்களைப் பார்க்கும்போதே வியப்பால் கண்கள் விரிகின்றன.

எப்பவுமே பழைய பொருட்களுக்குனு ஒரு தனி மரியாதை இருக்கு. நம் முன்னோர்கள் வாழ்ந்த அடையாளமா இருக்குற அவற்றுக்கு பாலீஷ் போட்டு பழமையைக் கெடுக் கக் கூடாது. எனக்கு அப்புறம் இந்தப் பொருட்களை என் பொண்ணும் மாப்பிள்ளையும் பாத்துக்குவாங்க!'' என்று அவர்களைப் பார்த்துச் சிரிக்கிறார் கோவிந்தராஜலு.

வெண்ணெய் உருளியும் அரை அடி சைக்கிளும்!

-நா.இள.அறவாழி படங்கள்: எஸ்.தேவராஜன்

அடுத்த கட்டுரைக்கு