Published:Updated:

இன்னும் உயர்வார்கள் இருளர்கள்!

இன்னும் உயர்வார்கள் இருளர்கள்!

இன்னும் உயர்வார்கள் இருளர்கள்!

இன்னும் உயர்வார்கள் இருளர்கள்!

Published:Updated:
##~##

ருளில்கிடந்த இருளர்கள் வாழ்க்கை வெளியுலக வெளிச்சத்துக்கு வந்ததே ஒரு துயரக் கதையின் மூலமாகத்தான். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள அந்தியூரைச் சேர்ந்த விஜயா என்ற இருளர் பெண், போலீஸால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானபோதுதான் இருளர்கள் என்ற இனம் வாழ்ந்துவருவதே தமிழக மக்களுக்குத் தெரியவந்தது. அதில் இருந்து தொடர்ச்சியாக இருளர் உரிமைகளுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் உழைத்துவரும் அமைப்பு 'பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம்’.

இன்னும் உயர்வார்கள் இருளர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதன் நிறுவனர் பேராசிரியர் பிரபா.கல்விமணியிடம் பேசினோம்...  ''அந்தியூர் விஜயா பாதிக்கப்பட்ட விஷயம் பத்திரிகையில் வந்த பிறகுதான் அப்படியரு சமூகம் இருப்பதே எனக்குத் தெரியும். அதன் பிறகு, ஏழு பேர்கொண்ட ஒரு உண்மை அறியும் குழுவை அமைத்து, அந்தியூர் விஜயாவுக்காகப் பல போராட்டங்கள் நடத்தினோம். அப்போதுதான் இவர்களுக்காக சங்கம் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலருமான எஸ்.வி.ராஜதுரை, 'மனித உரிமைகள்’ என்ற பெயரில் ஏகப்பட்ட அமைப்புகள் இப்போது முளைத்துவிட்டன. பொதுவாக, மனித உரிமைகள் என்று பேசுவதைவிட, நீங்கள் இருளர்களுக்காக ஒரு அமைப்பைத் தொடங்குங்கள். பலதரப்பட்ட சமூகத்துக்காகப் போராடுவதைவிட, குறிப்பிட்ட ஒரு மக்களுக்காக மட்டும் இதைத் தொடங்குங்கள்’ என்றார். இருளர்களிடமே பணம் வசூலித்து ஆர்பாட்டம், போராட்டம் ஆகியவற்றை நடத்துறோம்.

எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைக் கடுமையாக அமல்படுத்த வேண்டும். இருளர்களுக்குச் சாதிச் சான்று விரைவாக வழங்க வேண்டும், மனைப்பட்டா, தொகுப்பு வீடு கட்டி கொடுக்க வேண்டும், உண்டு உறைவிடப் பள்ளி வேண்டும், இருளர்களுக்காக தனியாக ஒரு துறை அமைக்கப்பட வேண்டும் - அரசுக்கு இந்த ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தோம்.  

இன்னும் உயர்வார்கள் இருளர்கள்!

1999-ல் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அப்போதைய ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் ஆகியோரை அழைத்து ஒரு மாநாடு நடத்தினோம். அதன் பிறகு 2000-ல் நாங்கள் கேட்ட பள்ளி வந்தது. தனி இயக்குநரகமும் அமைக்கப்பட்டது. இன்று இருளர்களுக்கு உதவித்தொகை கிடைக்கிறது. பாதி நபர்களுக்கு சாதிச் சான்றும், 15 சதவிகிதக் குடும்பத்தினருக்குத் தொகுப்பு வீடு, 50 சதவிகிதத்தினருக்கு மனைப் பட்டாவும் வாங்கிக் கொடுத்திருக்கிறோம். இப்போது முழுக்க முழுக்க இருளர்களுக்காகவே 'இருளர் செய்தி’ என்று ஒரு பத்திரிகையும் கொண்டுவருகிறோம். இப்போதுதான் கல்வி கற்கத் துவங்கியிருக்கும் இருளர்களுக்கு எளிதில் புரியவேண்டும் என்பதற்காகப் பெரிய எழுத்துக்களும் புகைப்படங்களும் பயன்படுத்துகிறோம்'' என்று போராட்ட வரலாற்றைப் பகிர்ந்துகொண்டார் பிரபா.கல்விமணி.

இருளர்களுக்காக நடத்தப்படும் 'உண்டு உறைவிடப் பள்ளி’யில் மொத்தம் மூன்று அறைகள், இரண்டு கழிப்பிடங்கள், ஒரு குளியலறை ஆகியவை இருந்தன. இரண்டு அறைகளைப் பாடம் நடத்து வதற்கும், ஒரு அறையைச் சமையல் அறையாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இன்னும் உயர்வார்கள் இருளர்கள்!

ஒரு தலைமை ஆசிரியரும், உதவி ஆசிரியர் ஒருவரும், சமையல்காரர் ஒருவரும் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். ''பாடம் நடத்தும்  அறைகளை ஒட்டியே சமையலறையும் இருப்பதால் சமையல் புகை அங்கெல்லாம் பரவி குழந்தைகளின் நலனைக் கெடுக்கிறது. இதனால் தனியாக ஒரு சமையல் அறையும், பொருட்களைவைக்க ஒரு இருப்பு அறையும் கண்டிப்பாக வேண்டும். ஒரே ஒரு சமை யல்காரர்தான் இங்கு கஷ்டப்பட்டு சமைக்கிறார். அவருக்கு உதவியாளர் ஒருவர் தேவை. விளையாடுவதற்கு மைதானம் இருந்தாலும் விளையாட்டுக் கருவிகள் எதுவும் இல்லை. இந்தப் பள்ளியைச் சுற்றிலும் மதில் சுவர் அவசியம். கழிப்பிடம் மற்றும் குளியலறை வசதிகளையும் அதிகரிக்க வேண்டும்!'' போன்ற கோரிக்கைகளோடு முடித்தார் கல்விமணி.

இன்னும் உயர்வார்கள் இருளர்கள்!

'இருட்டு வடியும், இருளர் வாழ்க்கை விடியும்’ என்னும் நம்பிக்கையை இருளர் பாதுகாப்பு சங்கத்தின் போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன!

- அற்புதராஜ், படங்கள்: எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism