Published:Updated:

``I am not a robot" - நம்மை இப்படித் தினம் தினம் நிரூபிக்க வைத்த ஆலன் டூரிங்கைத் தெரியுமா?

``I am not a robot" ?

கணினிகளே முழுமையாக உருவாக்கப்படாத காலத்தில், நவீன கணினிகளைக் கனவு கண்டு கட்டமைத்தவன், இரண்டாம் உலகப் போரை சில ஆண்டுகள் முன்பாக முடித்து வைத்தவன். யார் இந்த ஆலன் டூரிங்? ஏன் நவீன கணினியியலின் காலத்தில் அவன் முக்கியமானவன்?

``I am not a robot" - நம்மை இப்படித் தினம் தினம் நிரூபிக்க வைத்த ஆலன் டூரிங்கைத் தெரியுமா?

கணினிகளே முழுமையாக உருவாக்கப்படாத காலத்தில், நவீன கணினிகளைக் கனவு கண்டு கட்டமைத்தவன், இரண்டாம் உலகப் போரை சில ஆண்டுகள் முன்பாக முடித்து வைத்தவன். யார் இந்த ஆலன் டூரிங்? ஏன் நவீன கணினியியலின் காலத்தில் அவன் முக்கியமானவன்?

Published:Updated:
``I am not a robot" ?

ஜெர்மானியர்கள் போர் தொடர்பாகப் பயன்படுத்திய ரகசிய/குறியீட்டுத் தகவல் பரிமாற்றங்களை பிரிட்டிஷார் கண்டறிந்ததால் மட்டுமே இரண்டாம் உலகப்போர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்தது எனச் சில போர் வரலாற்றாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஜெர்மானியர்களின் தாக்குதல் திட்டங்கள், இடங்கள், தாக்குதலுக்கான நேரம் போன்றவற்றை அவர்கள் குறியீடாக்கம் செய்யப்பட்ட தகவல்களாகப் பரிமாறிக்கொள்ள `எனிக்மா’ எனும் கருவியைப் பயன்படுத்தினார்கள். எனிக்மாவில் ஓர் எழுத்தை அழுத்தும் போது அது மேலே வேறு ஓர் எழுத்தாக ஒளிரும். நாம் பரிமாற விரும்பும் தகவலை எனிக்மாவில் உள்ளிடும் போது அந்தத் தகவல் வேறு ஒரு வாக்கியமாக வெளியாகும். தகவலை அனுப்புபவர் இப்படிக் குறியீடாக்கம் செய்த செய்தியை அனுப்பிவிடுவார், இந்தச் செய்தியை வழக்கம்போல எதிரிகளால் இடைமறித்துத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், ஒளிந்திருக்கும் அந்தத் தகவலை உடைக்கவே முடியாது. இந்த இயந்திரம் எப்படி இருக்கும், எப்படிச் செயல்படும் என்பதை கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்.

``BGFCED DS MEJD” என்று அனுப்பப்பட்ட தகவலை, தகவல் பெறுபவரால் மட்டுமே, மிகச்சரியாக ``ATTACK AT DAWN” எனப் புரிந்துகொள்ள முடியும். தகவலை ஒட்டுக்கேட்டவர்களால் கண்டறிய முடியாததற்குக் காரணம், தகவல் அனுப்புபவரும் பெறுபவரும் எனிக்மா இயந்திரத்தில் ஒரே விதமான Algorithm அமைத்திருப்பார்கள், இடைமறித்துக் கேட்பவர்களுக்கு அந்த அல்காரிதம் சரியாகத் தெரிந்திருக்கும் வாய்ப்பு மிகக்குறைவு. (ஏன் என்பதற்கான விடை அடுத்த பத்தியில்). ஒவ்வொரு நாளும் எனிக்மாவில் என்ன அல்காரிதம் என்பது அதிரகசியமான தகவலாக அவர்களுக்குள் முன்பே பரிமாறப்பட்டிருக்கும். அன்றைய தினத்தில் மட்டுமே அன்றைய அமைப்பு தெரியவதும். (டிராஃபிக் போலீஸாரின் குருவி ஜோக் தெரியுமா? அந்த மாதிரி)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜெர்மானியர்களின் இந்த `எனிக்மா’ உடைக்கவே முடியாத பெர்லின் சுவர் போல கருதப்பட்டது. (பெர்லின் சுவர் காலத்தால் எனிக்மாவுக்குப் பிந்தையது, வாக்கிய அழகுக்காக மட்டுமே இது.) எனிக்மா முதல் பெர்லின் சுவர் வரை ஜெர்மானியர்களின் வலுவானவை உடைக்கப்பட்டதுதானே வரலாறு. இதனை உடைப்பதற்காகவே தனியாக ஒரு துறை, பல துறைசார் வல்லுநர்கள் என ஆங்கிலேயர்கள் பதறியடித்துக்கொண்டிருந்தார்கள்.

எனிக்மாவை மிகச்சுலபமாக உடைக்கும் வழிமுறைகளை செயல்படுத்தியவர்களில் ``ஆலன் டூரிங்” முக்கியமான கணிதவியலாளர். ஆலன் டூரிங்கின் பிறந்த தினம் இன்று. கணிதவியலில் பெரும் புகழ்பெற்றவராக விளங்கிய டூரிங் கணினியியலின் பிதாமகனாக மாறிப்போனார். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான `த இமிடேஷன் கேம்’ (The Imitation Game) திரைப்படத்தில் ஆலன் டூரிங் வாழ்க்கையும் எனிக்மா இயந்திரம் பற்றிய இந்த அத்தியாயமும் இடம்பெற்றிருக்கும்.

ஆலன் டூரிங்

PC:Public domain, via Wikimedia Commons

அறுபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு `Computing Machinery and Intelligence' என ஓர் ஆய்வுத்தாளை சமர்ப்பிக்கிறார் ``ஆலன் டூரிங்'' (Alan Turing). அந்த ஆய்வுத் தாளில் அவர் ஒரு கேள்வியை முதல் பத்தியில் வைக்கிறார். அந்தக் கேள்விக்கான பதிலை கண் முன்னே பார்க்கும் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாம். அந்தக் கேள்விக்குச் செல்வதற்கு முன்பாக டூரிங் பற்றியும், அவருடைய முக்கியப் பங்களிப்பு பற்றியும் மேலும் சில தகவல்களையும் சுருக்கமாகப் பார்த்துவிடலாம். அந்தளவுக்குப் பொறுமை இல்லை, கேள்வி என்னன்னு சொல்லுன்னு கேட்பவர்களுக்கான ஒரு சின்ன க்ளூ… சமீபத்தில் ஒரு வீடியோவில் உச்சரிக்கப்பட்ட ``mmm… hmm…” என்ற வார்த்தைகள். 

மனிதனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்துவது உற்பத்தியைத் தரும் உழைப்புதான் என எங்கெல்ஸ் ``மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்” (நம்புங்கள் புத்தகத்தின் பெயர் இது. பெயர்தான் நீளம், மிகச்சிறிய புத்தகம் தான்) புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார். அப்படி மனிதனின் உழைப்பினால் உருவான உற்பத்தியை விட அதிக உற்பத்திப்பொருள்களைப் பெற இயந்திரங்கள் உதவிக்கு வந்தன, தொழிற்புரட்சி மலர்ந்தது. 

மனித இனத்தின் முந்தைய ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் வளர்ச்சி விகிதத்தைத் தூக்கிச் சாப்பிட்ட வளர்ச்சி அடுத்த 150 ஆண்டுகளில் ஏற்பட்டது. கூடவே, சமூகத்தின் வர்க்க வேறுபாடுகளும் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தது. இந்தக் காலகட்டத்தில் மனிதனின் சக்திக்கு மீறிய உழைப்புக்கு அவன் சக்திக்கு மீறிய இயந்திரங்களை இயக்கத்தேவையான ஆற்றலைப் பெறுவதற்கான கருவிகளை உருவாக்கிய முதல் தலைமுறை அறிவியலாளர்கள் ஜேம்ஸ் ஹார்க்ரீவ், தாமஸ் நியூகொமென், ஜேம்ஸ் வாட், ஜார்ஜ் ஸ்டீஃபன்ஸன் (இந்தப் பட்டியல் மிக நீண்டது) போன்ற பெயர்கள் நினைவிருக்கிறதா? ஏழாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் இந்தப் பெயர்களைப் படித்த நினைவிருக்கலாம்.

முதலாம் தொழிற்புரட்சிக்குப் பிறகு மிகப்பெரிய அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு வித்திட்ட நவீன கணினியியல் துறையின் வளர்ச்சிக்கு வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர் ஆலன் டூரிங். நவீன கணினியியலின் உன்னதங்கள் புலப்படத் தொடங்கும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நவீன கணினிகளின் ஆரம்பகட்டத்திலேயே, அதாவது கணினிகளின் தொடக்க காலத்திலேயே நாம் இப்போது கண்டுகொண்டிருக்கும் அதி உன்னதங்களைக் கனவு கண்டவர். முந்தைய பத்தியில் குறிப்பிட்ட கண்டுபிடிப்பாளர்களின் பெயர்கள் நினைவிலிருந்து பலருக்கு அகன்றிருந்தாலும், அவர்கள் கண்டுபிடிப்புகளின் தாக்கம் இன்றளவும் உண்டு, அவர்கள் கண்டுபிடிப்புகளின் ஆயிரம் மடங்கு மேம்படுத்தப்பட்ட கருவிகளையும் நாம் பயன்படுத்தி வருகிறோம். அவர்களிலிருந்து ஆலன் டூரிங் வேறுபடுவது, அவர் கண்ட கனவும், கேட்ட கேள்வியும்தான். இப்போதுதான் அது வடிவம் பெற தொடங்கியிருக்கிறது, அவருடைய முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றான ``டூரிங் சோதனை” (Turing Test) முன்பை விட இப்போது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நீங்கள் ஒரு கணினியின் முன் அமர்ந்திருக்கிறீர்கள். உங்களுடன் இரண்டு பேர் உரையாடுகிறார்கள். அதில் ஒருவர் மட்டுமே மனிதர், இன்னொருவர்(?) கணினி. இதுதான் டூரிங் சோதனையின் அடிப்படை. 

டூரிங் சோதனை

PC:Juan Alberto Sánchez Margallo, via Wikimedia Commons

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டூரிங் டெஸ்ட் என்பதனைச் சுருக்கமாக இப்படி விளக்கலாம். ஒரு எந்திரன் (A Bot / Robot) ஒரு மனிதருடன் உரையாடி, ``நாம் மனிதருடன் தான் பேசிக்கொண்டிருக்கிறோம்” என அவரை நம்பவைக்க வேண்டும். அப்படி அந்த நபர் நாம் மனிதனுடன்தான் உரையாடிக்கொண்டிருக்கிறோம் என நம்பினால், அந்த இயந்திரம் டூரிங் சோதனையை வென்றது. மாறாக, நாம் இயந்திரத்துடன் உரையாடுகிறோம் என அவர் கண்டறிந்துவிட்டால் அந்த இயந்திரம் டூரிங் சோதனையில் தோல்வியடைந்ததாகப் பொருள். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டூரிங்கின் இந்தச் சோதனைக்கு வரவேற்பு இருந்ததைப் போலவே, கடுமையான விமர்சனங்களும் அப்போது முன்வைக்கப்பட்டன. ``ஒரு பச்சைக்கிளி நாம் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொன்னால், அது மனிதனுக்கு இணையான அறிவுள்ளதாக ஆகிவிடுமா என்ன?” என்ற முக்கியமான வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனாலும், ஐசக் அசிமோவின் விதிகளை விடவும் இத்துறையில் டூரிங் சோதனை மிக முக்கியமான ஒன்று.

Siri, Natasha, Alexa, Google Assistance போன்றவற்றுடன் அவை AI Bots என்பது தெரிந்தே மனிதர்கள் உரையாடத் தொடங்கிய பின், இயந்திரங்கள் மனிதர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் என்ன? டூரிங் சோதனைகளின் தேவைதான் என்ன என்ற ஒரு கேள்வி முன்வருகிறது. இந்த 50 ஆண்டுகளில் டூரிங் பரிசோதனை எப்படி வளர்ந்திருக்கிறது, என்ன மாற்றம் பெற்றிருக்கிறது? 

இணையம் வலுவாக வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் டூரிங் சோதனையின் தலைகீழான வடிவம் அதிகமான எண்ணிக்கையில் தினந்தினம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கட்டுரையை எழுதியவர் முதல், படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் வரை, தலைகீழாக்கப்பட்ட டூரிங் சோதனையை கடந்த சில ஆண்டுகளில் சில நூறு முறையாவது மேற்கொண்டிருப்போம். 

அதேதான், மனிதனுடன் உரையாடிதான் ஓர் எந்திரன் அல்ல என்பதை நிரூபிக்க டூரிங் வடிவமைத்த சோதனை, ஒரு கணினியிடம் நான் ஓர் எந்திரன் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் மாற்றம் பெற்றிருக்கிறது. இந்தச் சோதனைகளில் பயன்படுத்தப்படும் CAPTCHA என்ற வார்த்தைச்சுருக்கத்தின் முழு விளக்கமே ``Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart” டூரிங் டெஸ்ட்டை அடியொற்றியதுதான். 

``எனக்குப் பின்னால் வரும் தலைமுறை என் கருத்துகளைத் தவறு என நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்காமல் போனால், அந்தத் தலைமுறை தவறிழைத்ததாகிவிடும்” என ஐன்ஸ்டீனின் மேற்கோள் ஒன்று இருக்கிறது. டூரிங் டெஸ்டை தலைகீழாக்கி நாம் செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். டூரிங்கை அடுத்தடுத்த தலைமுறை சரியாகத்தான் சென்றுகொண்டிருக்கிறோம். 

எனிக்மா கருவிகளை உடைத்தது, உலகப் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவந்தது, டூரிங் சோதனை எனப் பலவற்றை ஆலன் டூரிங் பிறந்த தினத்தில் மீண்டும் ஒரு முறை நினைவுகூர்ந்ததெல்லாம் சரி, டூரிங் சோதனை தாண்டி இன்று அவர் என்ன முக்கியத்துவம் கொண்டிருக்கிறார் என ஒரு சந்தேகம் வருகிறதா? 

சில பத்திகள் முன்பு, ஓர் ஆய்வுத்தாளின் முதல் பத்தியில் ஒரு கேள்வியை டூரிங் எழுப்பியிருந்தார் எனக் குறிப்பிட்டேன். (மீண்டும் ஒரு முறை அந்தப் பத்தியைப் படிக்கலாம்.)

அந்தக் கேள்வி ``இயந்திரங்களால் உண்மையிலேயே சிந்திக்க முடியுமா?”, ``இயந்திரங்களுக்கு உணர்ச்சி உள்ளதா?” இந்தக் கேள்விகளுக்கு விடைகளைத்தான் நவீன கணினியியல் நமக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் AI துறை முழு வளர்ச்சியை அடையும்போது டூரிங்கின் இந்தக் கேள்விகள் முடிவுக்கு வரும். ஆக, ஆலன் டூரிங் எப்போதை விடவும் அதிகம் பேசப்பட வேண்டிய நபராக மாறிக்கொண்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism