Published:Updated:

132 கோடி இந்தியர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் எகிறி குதித்தால் என்ன ஆகும் தெரியுமா? #KnowScience

132 கோடி இந்தியர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் எகிறி குதித்தால் என்ன ஆகும் தெரியுமா? #KnowScience
News
132 கோடி இந்தியர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் எகிறி குதித்தால் என்ன ஆகும் தெரியுமா? #KnowScience

சமீபத்தில் ஜெர்மனிக்கும் மெக்சிகோவிற்கும் இடையே நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியினை மெக்சிகோ வீழ்த்தியதால், மெக்சிகோவின் ‘ஸோகாலோ’ நகரத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அதைக் கொண்டாடுவதற்காக ஒன்றாகக் குதித்தனர்.

இயற்கையான நிலஅதிர்வு (Natural earthquake) என்பது  நாம் அனைவரும் அறிந்ததே. அது என்ன செயற்கையான நிலஅதிர்வு (Artificial earthquake)? பூமியின் கீழ் உள்ள புவித்தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதுவதாலோ அல்லது விலகிச்செல்வதாலோ இயற்கையான நில அதிர்வு ஏற்படுகிறது. மாறாக மனிதர்களால் பூமியின் மேற்பரப்பில் உருவாக்கப்படும் அதிர்வுகளே இந்தச் செயற்கையான நிலஅதிர்வுகளுக்கு காரணம்.

உதாரணமாக, சமீபத்தில் ஜெர்மனிக்கும் மெக்சிகோவிற்கும் இடையே நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியினை மெக்சிகோ வீழ்த்தியதால், மெக்சிகோவின் ‘ஸோகாலோ’ நகரத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அதைக் கொண்டாடுவதற்காக ஒன்றாகக் குதித்தனர். அதனால் அங்குச் செயற்கையான நிலஅதிர்வு ஏற்பட்டதாக கூறப்பட்டது. பின்னர், கோல் விழுந்த நேரமும் நில அதிர்வு ஏற்பட்ட நேரமும் வெவ்வேறானவை எனக் கண்டறியப்பட்டது. அன்றைய நில அதிர்வுக்கு கால்பந்து காரணமல்ல என்பதும் உறுதி செய்யப்பட்டது.

ஆனால், இப்படி ஒரு சந்தேகம் ஏற்படக் காரணம் இல்லாமல் இல்லை. இப்படிபட்ட நிலநடுக்கங்கள் இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதே போன்ற நிலநடுக்கங்கள் இதற்கு முன்பும் நிகழ்ந்துள்ளன. 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ‘சியாட்டில்’ அணிக்கும் (Seattle Seahawks) ‘நியூ ஆர்லீன்ஸ்’ அணிக்கும் (New Orleans Saints) இடையே நடைபெற்ற கால்பந்தாட்டத்தின் வைல்டு கார்டு ப்ளேஆப் சுற்றின் இறுதியில் அந்த விளையாட்டு அரங்கத்தில் இருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஆக்ரோஷமாக குதித்ததில் சில நொடிகளுக்கு ‘Beast Quake’ என்று வர்ணிக்கப்படும் தீவிரமான நிலஅதிர்வானது சைஸ்மோகிராஃபில் (Seismograph) பதிவானது. அதே போல 2016ஆம் ஆண்டு பார்சிலோனோவில் ‘ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன்’ (Bruce Springsteen)  நடத்திய இசை நிகழ்ச்சியில் கூடியிருந்த 80,000 க்கும் அதிகமான ரசிகர்களின் கொண்டாட்டத்தின் போதும் செயற்கை நிலஅதிர்வு உணரப்பட்டது. 

இவையெல்லாம் ஒரு சிறிய பகுதியில் கூடியிருந்த சில ஆயிரக்கணக்கான மக்களால் உருவாக்கப்பட்ட எந்தவித பாதிப்புகளும் ஏற்படுத்தாத செயற்கையான நிலநடுக்கங்கள். அப்படியானால் உலகில் உள்ள அத்தனை கோடி மக்களும் ஒரே நேரத்தில் குதித்தால் என்ன நிகழும்? இதற்கான பதிலை, உலகில் இரண்டாவது பெரிய மக்கள் தொகை கொண்ட நமது நாட்டினைக் கொண்டு மட்டும் இப்போதைக்கு இங்கு பார்க்கலாம்.

தற்போதைய இந்தியாவின் மக்கள் தொகையானது கிட்டத்தட்ட 1.32 பில்லியன் (132 கோடி) என்று வைத்துக்கொள்வோம். சராசரியாக இந்திய மக்களின் உடல் எடையானது 50 கிலோ.  எனவே மொத்த இந்தியாவின் எடையானது கிட்டத்தட்ட 66 × 10 ^ 9 கிலோ (அதாவது 66 மில்லியன் டன்கள்). பொதுவாக இந்த அளவுக்கு எடையுள்ள ஒரு ‘பொருளானது’ அரை மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது என்று வைத்துக்கொண்டால் கட்டாயமாக அது கடுமையான நிலஅதிர்வினை ஏற்படுத்தும். மேலும், பொருள் ஒன்றின் நிறை ( Mass), உயரம் ( height) மற்றும் புவியீர்ப்பு முடுக்கம் (gravitational acceleration) ஆகியவை தெரிந்திருப்பின் அப்பொருளினால் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நிலையாற்றலினை (Potential energy)  “E = m × g × h“ என்ற ஃபார்முலாவின் மூலம் கண்டறியலாம். இதன்படி இந்திய மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அரை மீட்டர் உயரத்திற்குக் குதித்தால் வெளிப்படும் ஆற்றலினை பின்வரும் வகையில் கண்டறியலாம்.

ஆற்றல் ( E ) = 66 × 10 ^ 9 kg × 9.8 ms 2 × 0.5 m = 3.2 × 10 11 joules 
ஆக இந்த ஆற்றல் அனைத்தும் பூமியின் அதிர்வுகளாக மாற்றப்படுமாயின் அது ரிக்டர் அளவுகோலில் 4.6 என்ற அளவு கொண்ட நிலஅதிர்வாகப் பதிவாகும்.  இந்த அளவீடானது ஆற்றலுக்கும் (energy) நிலஅதிர்வின் விசையினையும் (force of an earthquake (M)) இணைக்கும் ‘பாத்’ (Bath) என்ற அறிவியலாளர் உருவாக்கிய கீழ்க்கண்ட தொடர்பின் மூலம் பெறப்படுகிறது. Log E = 5.24 + 144 × M
 
மேலும் ஒரு தீவிரமான நிலஅதிர்வினை, இந்திய மக்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ளடக்குவதன் மூலம் உருவாக்க முடியும்.  இதில் ஒவ்வொரு மக்களுக்கும் ஒரு சதுர மீட்டர் அளவுக்கு இடம் தரப்படுகிறது என்று வைத்துக்கொண்டால் நம் நாட்டு மக்கள் அனைவரையும் 1320 சதுர கிலோமீட்டரில் அடக்கிவிடலாம் (இந்தியாவின் மொத்த பரப்பளவானது 32,87,000 சதுர கிலோமீட்டர் ஆகும்). இந்தப் பகுதியில் உருவாகும் நிலஅதிர்வானது எந்த வகையில் இருக்கும் என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்திய மக்களைக் கொண்டே 4.6  ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கத்தை உண்டாக்க முடியும் எனும்போது, உலகிலுள்ள அத்தனை கோடி மக்களின் ஆற்றலும் இணைந்தால் அது இப்பூமியின் சுழற்சி வேகத்தினையே பாதிக்கவும் கூடும் என்று கருதுகின்றனர் விஞ்ஞானிகள். அடேங்கப்பா!!!