1980

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து முதல்முறையாக, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரோஹிணி ஆர்.எஸ்-1 செயற்கைக்கோள், இந்தியாவின் SLV 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

1876

இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகம், கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர், டாக்டர் மஹேந்திரலால் சர்க்கார். இந்தியாவின் முதல் நவீன ஆய்வு நிறுவனமான இந்த மையத்தில்தான்
சர்.சி.வி.ராமன், தமது இயற்பியல் ஆய்வினை மேற்கொண்டார். இதுதான் அவருக்கு நோபல் பரிசு பெற்றுத்தந்தது.

1914

‘இந்திய அறிவியல் மாநாட்டுக் கழகம்,’ இந்தியாவில் அறிவியல் மேம்பாட்டுக்கும் அறிவியல் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் தொடங்கப்பட்டது. உலக விஞ்ஞானிகள், நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் மாணவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த மாநாட்டில் சந்திப்பார்கள்.

1928

பிப்ரவரி 28 - இந்திய இயற்பியலாளர் சர்.சி.வி.ராமன் அவர்கள் ‘ராமன் விளைவு’ எனும் இயற்பியல் சூத்திரத்தைக் கண்டுபிடித்த நாள். இதற்காக, 1930-ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார். இந்த நாள் நம் நாட்டின் தேசிய அறிவியல் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

1963

அதிக உணவு உற்பத்தி செய்து, தானியப் பற்றாக்குறையைத் தீர்க்கும் பசுமைப் புரட்சி தொடங்கப்பட்டது.

1974

பொக்ரான்-I என்று அழைக்கப்பட்டு, பூமிக்கடியில் நடைபெற்ற முதல் அணு ஆயுதச் சோதனையை, இந்தியா வெற்றிகரமாக கையாண்டது. இதற்கு, ‘புத்தர் புன்னகைக்கிறார்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

1975

‘ஆர்யபட்டா’ எனும் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள், ரஷ்யாவில் இருந்து ‘இன்டர்காஸ்மோஸ்’ விண்வெளிக் கலன் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

1977

பெரியம்மை நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டது.

1981

ஃபிரென்ச் கினியாவின், கோரவ் ஏவுதளத்தில் இருந்து, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் [ESA] மூலமாக, இந்தியாவின் முதல் தகவல்தொடர்பு செயற்கைக்கோள் ‘ஆப்பிள்’ (Ariane Passenger Payload Experiment - APPLE) விண்ணில் ஏவப்பட்ட ஆண்டு. இந்தச் செயற்கைக்கோளை மாட்டு வண்டியில் பெங்களூரு விமானத் தளத்துக்கு எடுத்துச்சென்று அனுப்பிவைத்தனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

1988

முதன்முதலாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஐ.ஆர்.எஸ்-1A, தொலைதூர உணர்வு இயக்க செயற்கைக்கோள் ரஷ்யாவின் வோஸ்டோக் வானூர்தி மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

1991

இந்தியாவில், உயர்நிலை கணினி பயன்பாடு மேம்பாட்டு மையம் [C-DAC] தயாரித்த இந்தியாவின் முதல் சூப்பர் கம்ப்யூட்டர் PARAM 8000 உருவான ஆண்டு.

1999

அறிவியல் மற்றும் தொழில் ஆய்வு மையம் மற்றும் தேசிய வானூர்தி வடிவமைப்பு பரிசோதனைக்கூடம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் வடிவமைக்கப்பட்ட, ‘ஹன்சா’ என்ற இரண்டு இருக்கைகள் கொண்ட இலகு ரக பயிற்சி விமானம் உருவான ஆண்டு. இது 10,000 அடி உயரத்தில், நான்கு மணி நேரம் பறக்கும் திறன்கொண்டது.

2002

இந்தியாவின் முதல் மற்றும் தனித்த வானிலை ஆராய்ச்சி செயற்கைக்கோள் ‘கல்பனா’, சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து PSLV-C4 வானூர்தி மூலம் விண்வெளியில் செலுத்தப்பட்ட ஆண்டு. வர்தா புயல் உட்பட பல இயற்கைச் சீற்றங்களை முன்கூட்டியே கண்காணித்துள்ளது.

2008

சந்திர மண்டல ஆய்வுக்கான சந்திரயான் 1, சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து PSLV-C11 விண்கலன் மூலம் விண்ணில் ஏவப்பட்டு, சந்திரனின் சுற்றுத் தடத்தில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. சந்திர மண்டலத்தில் நீர் பாசையைக் கண்டுபிடித்து உலகை வியப்பில் ஆழ்த்தியது.

2013

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை காணல் கொள்கையைக் கொல்கத்தாவில் நடந்த நூறாவது இந்திய அறிவியல் மாநாட்டில் பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார்.

2014

சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பன்மை திறன்கொண்ட PSLV-C25 விண்கலன் மூலம் மங்கல்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. முதல் முயற்சியிலேயே, செவ்வாய்கிரக சுற்றுத் தடத்தில் வெற்றிகரமாக விண்கலனை நிலைநிறுத்திய முதல் நாடு இந்தியா.

2016

சுயசார்புடன் பூகோள ஒத்தியங்குத் தடத்தில் இயங்கும் ஏழு செயற்கைக்கோள்கள் அடங்கிய பிராந்திய செயற்கைக்கோள் வழி செலுத்தும் அமைப்புமுறை (NAVgation with Indian Constellation - NAVIC] ஒன்றை, இஸ்ரோ உருவாக்கி விண்ணில் செலுத்திவருகிறது. அமெரிக்க ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தை நம்பி இருக்காமல், நமது தேசிய செயற்கைக்கோள் உதவியுடன் இந்திய அமைப்புகள் இதன் வழி இயங்கும்.

2016

தொழுநோய் தடுப்பு ஊசி முதன்முறையாக, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு. இந்தத் தடுப்பு ஊசி, புது டெல்லியில் அமைந்துள்ள தேசிய நோய் எதிர்ப்பியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்தத் தடுப்பு ஊசிக்கு, இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறைத் தலைவர் அலுவலகம் மற்றும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக இணையம் அங்கீகாரம் அளித்துள்ளன.