Published:Updated:

என்ன அழகு... எத்தனை அழகு!

ஹோமப் புகை... மேக்கப்புக்கு பகை! 'அழகுக் கலை நிபுணர்’ வீணா குமாரவேல் படங்கள்: கே.ராஜசேகரன்

என்ன அழகு... எத்தனை அழகு!

ஹோமப் புகை... மேக்கப்புக்கு பகை! 'அழகுக் கலை நிபுணர்’ வீணா குமாரவேல் படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

விடிகாலை முகூர்த்தம் என்றால், வீட்டில் இருக்கும் பாட்டிகளும், அத்தைகளும், ''4.30 - 6.00 அதிகாலை முகூர்த்தத்துக்கு எதுக்கு மேக்கப்..? நெருக்கமான சொந்தக்காரங்க மட்டும் தானே வரப்போறாங்க?'' என்பார்கள்.

இன்றைய திருமணங்களில் ஆயிரங் களில் இருந்து லட்சங்கள் வரை செலவு செய்து போட்டோ, வீடியோ எடுக் கிறார்கள். ஆயுளுக்கும் வைத்துப் பார்க்கப் போகும் அந்த அழகிய தருணத்தின் நிழல்படங்களில், மணப்பெண் பொலிவிழந்து இருந்தால்... நன்றாகவா இருக்கும்? எனவே, 'முகூர்த்தத்துக்கு மேக்கப் வேண்டாம்' என்கிற முடிவை எடுக்க வேண்டாமே!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முகூர்த்தத்துக்கு முதல் நாள், எந்த மணப்பெண்ணாலும் கண்ணயர்ந்து தூங்க முடியாது. தூங்காத கண்கள் சோர்வாகக் காட்சியளிக்கும். விடிகாலை யில் சடங்குகள் ஆரம்பித் தால்... ஐந்து, ஆறு மணிநேரம் டச்-அப் செய்யக்கூட நேரமில்லாமல் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கும். அடுத்ததாக, ஹோமப் புகையைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்கும் மேக்கப் இருந்தாக வேண்டும். இதற்கு எல்லாம் ஈடு கொடுக்கும் விதமாக, முகூர்த்த மேக் கப்பில் பல சூட்சமங்கள் இருக்கின்றன. ஆஷியை மாடலாக வைத்து, அவற்றுக் கான செயல்முறை விளக்கம் கொடுக் கிறேன்.

என்ன அழகு... எத்தனை அழகு!

தலைகுளித்துவிட்டு வந்து அமர்ந்த ஆஷிக்கு, வழக்கமாகப் போட வேண்டிய க்ளீனிங், டோனிங், மாய்ச்சரைசிங்... மூன்றையும் முடித்து, முகத்தில் இருந்த சின்ன சின்னக் குறைகளை கன்சீலர் கொண்டு மறைத்து, அவரது முகத்தின் நிறத்தோடு இயைந்து போகக்கூடிய நிறத்திலான ஃபவுண்டேஷனைத் தேர்ந்தெடுத்து அப்ளை செய்துவிட்டு, ஐ ஷேடோ கொடுக்க ஆயத்தமானேன். 'முகூர்த்தம் என்றால் மெரூன்', 'மெரூன் என்றால் முகூர்த்தம்' என்று சொல்லும் அளவுக்கு நம் ஊரில் இப்போது எல்லோருமே மெரூன் நிற பட்டுப் புடவையைத்தான் உடுத்துகிறார்கள். ஆஷியும் அதே நிறத்தில்தான் தேர்ந்தெடுத்திருந்தார் என்பதால்... ஐ ஷேடோவில் இந்த மெரூன் நிறம் மேலோங்கி இருக்கும்படி பார்த்துக் கொண்டேன்.

புடவையில் ஆங்காங்கே தங்க ஜரிகைகள் இழையோடுவதால்... அந்த நிறத்தையும் ஐ ஷோடோவில் சேர்த்துக் கொண்டேன். புருவத்துக்குக் கீழே, அதாவது பிரோபோனில் கொடுக்கப்பட்டிருக்கும் ஹைலைட், ஐ ஷேடோவுக்கு அழகு சேர்ப்பதையும் கவனியுங்கள். சாஸ்திர சம்பிரதாயபடி நடக்கும் எந்த முகூர்த்தத்திலும், மணப்பெண்ணுக்கு பாரம்பரிய முறைப்படிதான் மேக்கப் போடவேண்டும். கண்கள் மீன் போன்று இருக்க வேண்டும் என்பதால்... ஐ லைனரை கண்களைத் தாண்டி மேலே இருக்கும் புருவங்களை நோக்கி நீட்டியிருக்கிறேன். செயற்கை இமைக்கு மஸ்காரா கொடுத்திருக்கிறேன்.

என்ன அழகு... எத்தனை அழகு!

நான் திரும்பத் திரும்பச் சொல்லும் இலக்      கணம்... கண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், உதடுகளை அடக்கி வாசிக்க வேண்டும். ஆனால், ஆஷி விஷயத்தில், 'பிரேக் தி ரூல்ஸ்’ என்று இந்த விதியை உடைக்க வேண்டிய கட்டாயம். காரணம், அட்டிகை, நெற்றிச்சுட்டி, மாங்காமாலை, சந்திரபிறை, சூரிய பிறை என்று அத்தனையும் டெம்பிள் ஜுவல்லரியில் 'பளிச்'சென்று இருப்பதாலும், கண்களைப் பறிக்கும் அளவுக்கு புடவை, பிளவுஸ் என்று எல்லாமே 'பளிச் பளிச்' என்று இருப்பதாலும் லிப்ஸ்டிக்கும் எடுப்பாகத்தான் இருக்க வேண்டும். மாறாக லிப்ஸ்டிக்கை அடக்கிவாசித்தால், 'லிப்ஸ்டிக் போட மறந்துவிட்டார்கள்' என்று பார்க்கிறவர்கள் நினைத்துக்கொள்ளும் அளவுக்கு காட்சியளிக்கும். அதனால், ஆஷிக்கு எடுப்பான நிறத்திலேயே லிப்ஸ்டிக் போட்டிருக்கிறேன் (லிப்ஸ்டிக் அநியாயத்துக்கு கண்ணைப் பறிக்கிறது என்று ஆஷி நினைத்ததால், அதன் மீது கோல்ட் கலர் லிப்ஸ்டிக்கை லேசாக தீட்டி அதை மட்டுப்படுத்தியிருக்கிறேன்).

எல்லாமே 'பளிச் பளிச்' என்று இருக்கும்போது... டல்லான கலரில் பொட்டு வைத்தால் அது எடுபடாது. அதனால் பாரம்பரிய முறைப்படி மெரூன் கலரிலேயே, சற்றே பெரிய பொட்டாக ஆஷிக்கு வைத்திருக்கிறேன். அதிலும் கொஞ்சம் 'மாடர்ன் டச்'சாக... அட்டிகையில் இருப்பதைப் போல ஒரு ஸ்டோனையும் பதிய வைத்திருக்கிறேன்.

என்ன அழகு... எத்தனை அழகு!

ஹோமப் புகையில் தொடர்ச்சியாக உட்கார்ந் திருக்க வேண்டிய சூழல் இருப்பதால், முகூர்த்த மேக்கப்புக்கு பயன்படுத்தும் எல்லாப் பொருட்களுமே ஸ்மட்ஜ்ப்ரூஃப் (ஷினீuபீரீமீஜீக்ஷீஷீஷீயீ) மற்றும் கலர்ஸ்டே (சிஷீறீஷீuக்ஷீstணீஹ்) தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான், மேக்கப் ஐந்து, ஆறு மணி நேரத்துக்குத் தாக்குப் பிடிக்கும். ஸ்மட்ஜ்ப்ரூஃப் இல்லாவிட்டால்... புகையினால் வரும் கண்ணீர், மேக்கப்பை கரைத்து... முகத்தையே அலங்கோலமாக ஆக்கிவிடும். ஆர்வக்கோளாறு காரணமாக பக்கத்தில் இருப்பவர்கள் கண்களை கர்ச்சிப் வைத்து துடைத்தால்... கதை அவ்வளவுதான்!

முகூர்த்தப் புடவைக்கு என்று போடுகின்ற பட்ஜெட்டில் மிகவும் காஸ்ட்லியாக ஒரே புடவையாக எடுக்காமல், இரண்டு, மூன்று புடவைகளாக எடுத்துக் கொண்டால்... முகூர்த்தத்தை ஒட்டி நடக்கும் சடங்குகளுக்கும் அணிந்து கொள்ளலாம். வீட்டில் இருக்கும் பெரியவர்களைத் திருப்திபடுத்த மெரூன் நிறப் பட்டுப்புடவை எடுத்தாலும், தன்னுடைய விருப்பத்துக்கு சில்க் த்ரெட் வைத்த டஸ்ஸர் புடவை ஒன்றையும் வாங்கி ஆஷி உடுத்தியிருப்பது போல, நம் டேஸ்ட்டுக்கு அணிந்து கொள்ளலாம். டஸ்ஸர் புடவைக்குத் தோதாக டெம்பிள் ஜுவல்லரி யிலேயே மாடர்னான நகைகளை நான் அணிவித்திருந்தாலும், இதற்கு குந்தன் டைப் நகைகள் மேலும் பொருத்தமாக இருக்கும்!

- மிளிரும்...

நன்றி: பராக் ஜுவல்லரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism