
``அனு, அங்கே என்னத்தப் பார்த்து சிரிச்சுட்டு இருக்கே..?’’
‘`அதுவா... எதிர்வீட்டுக் குட்டிப் பையன் ஆகாஷ் சேட்டை பண்ணிட்டு இருக்கான். அதை வேடிக்கை பார்த் துட்டு இருக்கேன்.’’
``அட, ஆமா... எதுக்கு இவ்ளோ சேட்டையாம்..?’’
``அவங்க அம்மா, டிவார்மிங் (deworming) டேப்லட் கொடுக்கறாங்க. அதைச் சாப்பிடமாட்டேன்னு அடம்பிடிக் கிறான்!’’
`‘அனு, நீயும் நானும்கூட சின்ன வயசுல இப்படித்தானே அடம்பிடிச்சிருப் போம்!’’
`‘நாம குட்டீஸ்களா இருந்தப்ப இருந்ததைவிட இப்ப மெடிக்கல்ல நிறைய இம்ப்ரூவ்மென்ட்ஸ் வந்திருக்கு. ஆறு மாசத்துக்கு ஒரு தடவை குடல்புழு நீக்கம் செஞ்சுக்கிட்டா, ஹெல்த் நல்லா இருக்கும்...’’
`‘நிச்சயமா..! நாகரிகம்னு நினைச்சு சில விஷயங்களை செய்யவே மறந்து போயிடுறோம். அதனால ரெண்டு வயசுல இருந்து குடல்புழு நீக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கறது நல்லது.’’
`‘ஹெல்த் பத்தி இவ்ளோ அழகா பேசுறியே அனு... உனக்கு ஏன் கண்களுக்கு கீழே பிளாக் சர்க்கிள்ஸ் வந்திருக்கு?’’
`‘மேடம் நைட்டெல்லாம் கண் முழிச்சி டி.வி பார்க்குறாங்க போல!’’
`‘அய்யோ, நான் பார்க்கல... நைட் முழுக்க மொபைல்லதான் வாழ்க்கை ஓடுது!’’
`‘அடிப்பாவி அனு... யாருடி அது?!’’
‘`அடியே, குரூப் எக்ஸாமுக்கு சில வெப்சைட்கள் மூலமா பாடம் படிச்சுட்டிருக் கேன். நம்புங்க!’’
``நம்பிட்டோம்... நம்பிட்டோம்!’’
``அனு, இப்ப பிரச்னை அது இல்ல, மொபைலை தொடர்ந்து கவனிச்சுட்டே இருந்தா, அதுலேர்ந்து வெளிப்படுற கதிர்வீச்சுகளால கண்கள் பாதிக்கப்படுமாம். அதனால எல்லா விளக்குகளையும் அணைச்சுட்டு மொபைல் ஸ்க்ரீன்ல மூழ்கினாலும் கண்களுக்குக் கேடுதான். புரிஞ்சுக்கோ!’’
`‘சரி, சரி... அட்வைஸ் அம்புகள் காதுகளைத் தாக்குதே!’’
`‘அட்வைஸ்னு யார் சொன்னா... மொபைல் ரீடிங் பழக்கத்தால புக்ஸ் படிக்கறதே குறைஞ்சு போச்சு. என்ன இருந்தாலும் தன்னம்பிக்கை கதைகளைப் படிக்கறப்ப புதுசா ஒரு தெம்பு வரும்!’’
`‘ஆமா... ஆன்லைன்ல படிக்கிறோமா, புக்ல படிக்கிறோமாங்குறது முக்கியம் இல்லை. படிச்சதை வாழ்க்கையில பயன்படுத்திக்கணும்.’’
`‘இந்தச் சமூகத்துல ஆண்கள் சந்திக்கிற சவால்களைவிட பெண்கள் சந்திக்கிற சவால்கள் ரொம்ப அதிகம்னுதானே இவ்ளோ நாளா நாம பேசிட்டு இருக்கோம். ஆனா, ஆண் பெண் - இருவரையும் தாண்டி திருநங்கைகள் - திருநம்பிகள் பற்றி நாம யோசிக்கறதே இல்லை.’’
`‘சந்தோஷ் நாராயணன் இசையில் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் ’சதையை மீறி’னு ஒரு பாடலை இயக்கி வெளியிட்டு இருக்காங்க. இந்தப் பாடல், ஆண் - பெண் இரு பாலரைப் போலவே நாம் மூன்றாம் பாலின மாகக் குறிப்பிடும் திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்டோரின் வலிகளைப் பதிவு செய்யுது. பார்க்கும்போதே மெய்சிலிர்க்குது!’’
`‘நானும் பார்த்தேன் இனியா. வெரி நைஸ்!’'
``ஹேய்... இந்த ‘காற்று வெளியிடை’ திரைப்படத்துல கார்த்தியோட கெட்டப் சேஞ்சைப் பார்த்தீங்களா?’’
`‘ஆமாம்பா... க்ளீன் ஷேவ் கார்த்தியைப் பார்க்கவே ஆசம்ல!’’
`‘அனு... உனக்குப் பிடிச்சிருக்கா? பட் ஐயாம் ஸாரி... எனக்கு `ஓகே ரகம்’தான்.’’
`‘எதுக்கு கன்ஃபியூஷன்..? ஆன்லைன்ல ஒரு சர்வே இருக்கு. யாரெல்லாம் பிடிச்சிருக்குன்னு சொல்லியிருக்காங்கன்னு பாத்துடுவோமா?!’”
`‘ஆக மொத்தம், பசங்களை க்ளீன் போல்டு ஆக்குறோம். அதானே..?’’
`‘ஹிஹிஹி... சேம் பின்ச்!’’
- கச்சேரி களைகட்டும்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அசத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணையதள முகவரியைத் தொடருங்கள். அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

க்ளீன் ஷேவ் கார்த்தியை உங்களுக்குப் பிடிச்சிருக்கா, கேர்ள்ஸ்?!
http://bit.ly/2lUwaxc

மேரி க்யூரி தன் நம்பிக்கையை மீட்டெடுக்க என்ன செய்வார் தெரியுமா?
http://bit.ly/2lp6gUD

மொபைலில் கவனம்... வரலாம் கருவளையம்! அலெர்ட் கேர்ள்ஸ்!
http://bit.ly/2kZj8jr

குடற்புழுவில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க இதைச் செய்யுங்கள்!
http://bit.ly/2kZclq2

சதையை மீறி..!
http://bit.ly/2lq4RwM