Published:Updated:

தன்னம்பிக்கை - வியக்க வைக்கும் வித்தியாச மருத்துவர்!

தன்னம்பிக்கை - வியக்க வைக்கும் வித்தியாச மருத்துவர்!
பிரீமியம் ஸ்டோரி
தன்னம்பிக்கை - வியக்க வைக்கும் வித்தியாச மருத்துவர்!

அகிலா கிருஷ்ணமூர்த்தி

தன்னம்பிக்கை - வியக்க வைக்கும் வித்தியாச மருத்துவர்!

அகிலா கிருஷ்ணமூர்த்தி

Published:Updated:
தன்னம்பிக்கை - வியக்க வைக்கும் வித்தியாச மருத்துவர்!
பிரீமியம் ஸ்டோரி
தன்னம்பிக்கை - வியக்க வைக்கும் வித்தியாச மருத்துவர்!

வலி(மை)

லிகளைத் துடைத்தெறிந்த பெண்கள் வலிமையானவர்கள். அப்படி ஒருவர்தான், சென்னையைச் சேர்ந்த கண் சிறப்பு மருத்துவர் டாக்டர் வசந்தா. தமிழ்நாடு கண் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர். மருத்துவருக்கு உண்டான பொது இலக்கணங்கள் அல்ல... வசந்தாவின் முகம். சமூக தளத்தில் அவரின் செயல்பாடுகளே, அவரின் சிறப்பு அடையாளங்கள்!

தன்னம்பிக்கை - வியக்க வைக்கும் வித்தியாச மருத்துவர்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘`கண் மருத்துவம் படிக்க வேண்டும் என விரும்பியதே என் வாழ்க்கையில் நடந்த துயரமானதொரு சம்பவத்தால்தான்’’ என கவனிக்க வைத்துப் பேச்சை ஆரம்பித்தார் வசந்தா. ‘`எம்.பி.பி.எஸ் தேர்வு நேரத்தில் எனக்குத் திடீர் கண் தொற்று ஏற்பட்டுப் படிக்க முடியாமல் போனது. மற்ற மாணவிகள் வாசிப்பதைக் கேட்டுக் கேட்டு தேர்வுக்குத் தயாரானேன். அன்றைக்கு முடிவு செய்தேன்... சிறந்த கண் மருத்துவர் ஆகவேண்டும் என்று! என் மேற்படிப்புக் காலத்தில் பல நோயாளிகள் கண்புரை வெடித்து கண் அழுத்தம் அதிகமாகி, பார்வையை இழக்கும் தறுவாயில் வருவார்கள். இப்போது அந்த நிலை இல்லை. ஆனால், நீரிழிவு மற்றும் கண் அழுத்த நோயினால் பார்வை இழப்பவர்கள் இப்போதும் இருப்பது வேதனை. கண்ணில் புண் ஏற்பட்டு கருவிழி பாதித்தும் பலர் பார்வை இழக்கிறார்கள். தொடர்ச்சியான பரிசோதனைகளால் இவ்வகை இழப்புகளைத் தவிர்க்கலாம்’’ என்கிற வசந்தா, கண் நோய் பற்றிய விழிப்பு உணர்வுக்காக ‘கண்ணொளி காப்போம்’ என்கிற நூலும் எழுதியுள்ளார்.

இன்றைய குழந்தைகளின் முக்கியப் பிரச்னையான ஒளிர்திரைப் பொருட்கள் பற்றி டாக்டர் பகிர்ந்தவை, பெற்றோர் கட்டாயம் குறித்துக்கொள்ளவேண்டியவை ஆகும்.

``பரபரப்பான இன்றைய டிஜிட்டல் வளர்ச்சியில் மொபைலிலும் கணினியிலும் மூழ்கிக் கிடக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் கண் பாதிப்புகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஒளிர்திரைகளை உற்று நோக்கும் போது கண்கள் திறந்தே இருப்பதால், கண்ணின் மேற்பகுதி உலர்ந்துபோய்விடும். பவர் கண்ணாடி அணிய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஏற்கெனவே கண்ணாடி அணிந்த குழந்தைகளுக்கு பவர் கூடும். அதற்கான சிகிச் சைக்கு வரும்போதுகூட குழந்தைகளிடம் இருந்து கேட்ஜெட்களைப் பெற்றோரால் பிரிக்கமுடிவதில்லை. குழந்தைகளை தாயம், பல்லாங்குழி, சதுரங்கம், மைதான விளையாட்டுகள் என்று மடை மாற்றாவிட்டால்  ஒளிர்திரைகள், எதிர்காலத்தில் இன்னும் கண் பிரச்னைகளைப் பெருக்கும்’’ என்று எச்சரித்தார் டாக்டர்.

உளிக்குத் தன்னை முழுமையாக ஒப்படைக் கும் கல், அழகான சிலையாவதைப் போலவே வலிகளைத் தாங்கி வெற்றியடைய வேண்டும். அப்படி, தான் கடந்து வந்த வலிகள் பற்றியும் பேசினார் வசந்தா... ``வெண்புள்ளிகள் பிரச்னை எனது 16 வயதில் ஏற்பட்டது. ஆரம்பத்தில் உதட்டில் மட்டும்தான் இருந்தது. திருமணத்துக்குப் பிறகு குழந்தை உண்டானபோது,  பொதுவாகப் பெண் உடலில் ஏற்படும் சைக்கலாஜிக்கல் ஸ்ட்ரெஸ்ஸால் இது அதிகமாகப் பரவியது. இதனாலேயே நான் ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொண்டேன். மன அழுத்தம் இந்நோய்க்கு ஒரு காரணம்.

பின்னர், யோகா செய்யக் கற்றுக்கொண்ட போது சில புள்ளிகள் மறையத் தொடங்கின. யுனானி மருத்துவ முறையிலும், டிஃபன்ஸ் ரிசர்ச் சென்டர் தயாரித்துள்ள மருந்துகளாலும், ஆரம்பத்திலேயே இதற்குச் சிகிச்சை செய்து கொண்டால் புள்ளிகள் நன்றாக மறைய வாய்ப்பு உள்ளது.  நோய் பற்றி நான் அதிகம் கவலைப்படாததற்குக் காரணம் என்ன தெரியுமா? என் பெற்றோர் தந்த நம்பிக்கையும், ‘நம்மை நமக்காக மற்றவர்களுக்குப் பிடிக்க வேண்டும். நம் அழகுக்காக அல்ல. அப்படி யாருக்காவது நம்மை பிடிக்கவில்லை என்றால், நஷ்டம் அவர்களுக்குதான்’ என்ற என் எண்ணமும்தான்.

பெண்ணுக்கு எதிராக இச்சமூகம் ஏற்படுத்துகிற ரணங்களுக்கு அவளின் தன்னம் பிக்கைதான் மருந்து. சுய வளர்ச்சிக்கான முயற்சியே பெண்களின் பேரழகு!” - தன் கூற்றுக்கு தானே உதாரணமாக நிற்கிறார் டாக்டர் வசந்தா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism