Published:Updated:

அரசு மருத்துவமனைகளில் போதை மறுவாழ்வு மையம்..! தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதை மறுவாழ்வு மையங்களை அமைக்கவும் அதற்கான மருத்துவர்களையும் நியமிக்கவும் 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசின் சுகாதாரத் துறைக்கு

அரசு மருத்துவமனைகளில் போதை மறுவாழ்வு மையம்..! தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
அரசு மருத்துவமனைகளில் போதை மறுவாழ்வு மையம்..! தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதை மறுவாழ்வு மையங்களை அமைக்கவும் அதற்கான மருத்துவர்களை நியமிக்கவும் 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசின் சுகாதாரத்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.  

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், ' '2016-ம் ஆண்டு அ.தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கைக் கொண்டு வருவோம் என தெரிவித்திருந்தது. மேலும், தமிழகத்தில் நாளுக்கு நாள் மது குடிப்பதால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே போதை மறுவாழ்வு மையங்கள் இயங்கி வருகின்றன. அனைத்து அரசு தாலுகா மருத்துவமனைகளிலும் போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம் - ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் கொண்ட அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதை மறுவாழ்வு மையங்கள் அமைப்பது குறித்தும், அதற்கான மருத்துவர்களையும் நியமிப்பது குறித்தும் 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசின் சுகாதாரத்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.