Published:Updated:

மக்கள் குறைகேட்புக் கூட்டத்துக்கு அரசுப் பேருந்தில் பயணித்த கடலூர் ஆட்சியர்!

மக்கள் குறைகேட்புக் கூட்டத்துக்கு அரசுப் பேருந்தில் பயணித்த கடலூர் ஆட்சியர்!
மக்கள் குறைகேட்புக் கூட்டத்துக்கு அரசுப் பேருந்தில் பயணித்த கடலூர் ஆட்சியர்!

கடலூர் மாவட்ட கலெக்டர் தண்டபாணி, விருத்தாசலம் அருகே உள்ள ராஜேந்திரபட்டினம் கிராமத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமிற்கு அனைத்து அதிகாரிகளுடன் அரசுப் பேருந்தில் சென்றார்.

அவருடன் மாவட்ட வருவாய்த்துறை  அலுவலர்கள்,  தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள், சுகாதாரத்துறை, வேளாண்மை ஊரக வளர்ச்சி மற்றம்  உள்ளாட்சித் துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை என அனைத்துத் துறை அதிகாரிகளும் சென்றனர். மனுநீதி நாள் முகாமில் பொது மக்கள் அளிக்கும் மனுக்கள்மீது மாவட்ட கலெக்டர் உடன் நடவடிக்கை எடுத்து தீர்வு காண்பது வழக்கம்.   அதனால், இந்த முகாமிற்கு  மாவட்ட அளவில் அரசின் அனைத்துத் துறை உயர் அதிகாரிகளும் செல்வார்கள். இந்த அதிகாரிகள் தனித்தனியாக தங்கள் வாகனங்களில் செல்வதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதுடன், அரசின் செலவும் அதிகரிக்கும். இதனால் அனைத்து அதிகாரிகளும் ஒரே அரசு பஸ்ஸில் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி, கடலூர் மாவட்ட கலெக்டர் தண்டபாணி இன்று அரசு பஸ்ஸில் அதிகாரிகளுடன் மனுநீதி நாள் முகாமிற்குச் சென்றார். இதற்கு முன்பு கடலூர் மாவட்ட கலெக்டராக  பிரசாத் மு.வடநேரே இருந்தபோது இதை முதன் முதலாகத் தொடங்கிவைத்தார். கலெக்டராக அவர் இருந்தவரை அனைத்து மனுநீதி நாள் முகாமிற்கும் அரசு பஸ்ஸில் செல்வதை வழக்கமாகக்கொண்டிருந்தார். அதைத் தற்போதைய கலெக்டரும் பின்பற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.