Published:Updated:

அஸ்லான் ஷா ஹாக்கி: இறுதிவாய்ப்பை இழந்தது இந்தியா

Vikatan Correspondent
அஸ்லான் ஷா ஹாக்கி: இறுதிவாய்ப்பை இழந்தது இந்தியா
அஸ்லான் ஷா ஹாக்கி: இறுதிவாய்ப்பை இழந்தது இந்தியா
அஸ்லான் ஷா ஹாக்கி: இறுதிவாய்ப்பை இழந்தது இந்தியா

இபோக்: மலேசியாவின் இபோக் நகரில் நடந்து வரும் அஸ்லான் ஷா ஹாக்கி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தால் இந்திய அணி இறுதி வாய்ப்பு கனவு தகர்ந்து போனது.

முதல் இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, கொரியாவிடம் தோல்வியடைந்த இந்திய அணி, 3வது ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆறுதல் அடைந்தது.

இந்த நிலையில் நடப்பு சாம்பியன் நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி நேற்று மோதியது. இரு அணிகளும் முக்கியமான ஆட்டம் என்பதால் விளையாட்டில் விறுவிறுப்பு ஏற்பட்டது.

முதல் பாதியில் கோல் ஏதும் விழாமல், இரு அணி வீரர்களும் அபாரமாக விளையாடினர். பிற்பாதியில் நியூசிலாந்தின் கை ஓங்கியது. 40வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி நியூசிலாந்தின் ஆன்டி ஹேவர்ட் முதல் கோல் அடித்தார்.

இதையடுத்து பதில் கோல் திருப்ப இந்தியாவுக்கு 53வது நிமிடத்தில் முதல் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த நல்ல வாய்ப்பை இந்தியாவின் ருபிந்தர் பால் சிங் கோலாக மாற்ற தவறினார்.

சிறிது நேரத்தில் நியூசிலாந்து மேலும் ஒரு கோல் அடித்து இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தது. ஆன்டி ஹேவர்ட் அடித்த பந்தை இந்திய கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் தடுத்து நிறுத்தினார். இவ்வாறு திரும்பி வந்த பந்தை, மற்றொரு நியூசிலாந்து வீரர் கோரி பென்னட் அதிரடியாக கோல் அடித்தார்.

##~~##
முடிவில் நியூசிலாந்து அணி 2–0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்தது. 3வது தோல்வியை தழுவியதன் மூலம் 5 முறை சாம்பியனான இந்திய அணியின் இறுதிப்போட்டி கனவு தகர்ந்து போனது. அதே சமயம் 2வது வெற்றியுடன் நியூசிலாந்து அணி இறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
உலக சாம்பியன் ஆஸ்திரேலியா–கொரியா இடையிலான மற்றொரு ஆட்டம் 3–3 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. பாகிஸ்தான்–மலேசியா இடையிலான மோதலும் டிராவில் (2–2 கோல்) முடிந்தது. இந்தியாவை தவிர, பாகிஸ்தான் (4 புள்ளி), கொரியா (4 புள்ளி) ஆகிய அணிகளும் இறுதி வாய்ப்பை பறிகொடுத்து விட்டன.
இப்போது இறுதி வாய்ப்பை பெறுவதில் ஆஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகள் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
நாளை நடைபெறும் கடைசி லீக் ஆட்டங்களில் கொரியா–பாகிஸ்தான், ஆஸ்திரேலியா–நியூசிலாந்து, மலேசியா–இந்தியா ஆகிய அணிகள் சந்திக்கின்றன. இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டும் என்றால் நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவை கட்டாயம் வீழ்த்தியாக வேண்டும். ஆனால் ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை டிரா செய்தாலே போதுமானது. மலேசிய அணியும் கடைசி லீக்கில் டிரா செய்தாலே இறுதி சுற்றை உறுதிசெய்து விடலாம்.