Published:Updated:

``ஆரோக்கியமான சத்துமாவுக்கு அவ்ளோ டிமாண்டு!''- லட்சங்களில் வருமானம் ஈட்டும் தீபா

``ஆரோக்கியமான சத்துமாவுக்கு அவ்ளோ டிமாண்டு!''- லட்சங்களில் வருமானம் ஈட்டும் தீபா

``ஆரோக்கியமான சத்துமாவுக்கு அவ்ளோ டிமாண்டு!''- லட்சங்களில் வருமானம் ஈட்டும் தீபா

``ஆரோக்கியமான சத்துமாவுக்கு அவ்ளோ டிமாண்டு!''- லட்சங்களில் வருமானம் ஈட்டும் தீபா

``ஆரோக்கியமான சத்துமாவுக்கு அவ்ளோ டிமாண்டு!''- லட்சங்களில் வருமானம் ஈட்டும் தீபா

Published:Updated:
``ஆரோக்கியமான சத்துமாவுக்கு அவ்ளோ டிமாண்டு!''- லட்சங்களில் வருமானம் ஈட்டும் தீபா

``வாழ்க்கையில பொண்ணாப் பொறந்த ஒரே காரணத்துக்காகச் சில விஷயங்களை இழக்கவேண்டியிருக்கும். அந்த மாதிரி சூழல்ல அதை விதின்னு ஏத்துக்காம போராட ஆரம்பிச்சா நம்ம நினைக்கிற இலக்கை நாம ஈஸியா அடைஞ்சுடலாம்'' என்று மெல்லிய குரலில் தன்னம்பிக்கையாகப் பேசும் திருப்பூரைச் சேர்ந்த தீபாவின் மாதம் வருமானம் 3 லட்சம்.

எங்க வீட்டுல ரொம்ப ஸ்ட்ரிக்ட். அப்பாவுக்கு திருப்பூர்ல வேலை. எங்க வீட்ல நானும் என் அக்காவும் ஸ்ட்ரிக்டாவே வளர்க்கப்பட்டோம். மேல்படிப்பு படிக்கக்கூட வெளியூர் அனுப்ப மாட்டாங்க. சொந்த ஊரை விட்டு உங்க ரெண்டு பேரையும் வேற எங்கேயும் வெளிய அனுப்ப மாட்டேனு அம்மா சொன்னாங்க. ஆனா சின்ன வயசுலேயே நான் என்னோட இலக்கை அடையுறதுல ரொம்பக் கவனமா இருப்பேன். அதனால அப்பாகிட்ட கெஞ்சிக் கூத்தாடி சென்னையில நியூட்ரிஷியன் படிச்சேன். படிக்கிறப்பவே எனக்குக் கொடுக்கப்படுற பாக்கெட் மணியை அம்மாகிட்ட கொடுத்து வீட்டிலேயே சாம்பார், ரசம்னு பல பொடி வகைகளை செய்யச் சொல்லி அதை என் தோழிகளுக்கு பேக்கிங் செய்யக்கொடுத்துச் சம்பாதிக்க ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துல என் புரொபசர்ஸும் என் பொடிகளை வாங்க ஆரம்பிச்சாங்க. என் ஃப்ரெண்ட்ஸ்கூட படிக்கிறப்ப படிப்பை, வாழ்க்கையை என்ஜாய் பண்ணாம எதுக்குடி இப்படி பிசினஸ் மைண்டோட இருக்க... இதெல்லாம் வேண்டாத வேலைன்னு கிண்டல் பண்ணுவாங்க. அதையெல்லாம் மைண்டுல ஏத்திக்காம `வருங்கால பிசினஸ் விமன் ஆகுறதுக்கான பயிற்சி இதுன்னு சொல்லி அவங்க வாயை அடைச்சிடுவேன். படிப்பு முடிஞ்சதும் திருமணம், குழந்தைன்னு வாழ்க்கை ஓடுச்சு.

குழந்தை பிறந்ததும் பெண்களோட கவனம் எல்லாம் குழந்தையோட உணவுல ஆரம்பிச்சு தோல் வரைக்கும் ஒவ்வொண்ணையும் எப்படிப் பாதுகாக்கணுங்கிறதுல கவனமா இருப்பாங்க. நானும் என் குழந்தைக்கு ஆறுமாசம் வரைக்கும் கண்கொத்திப் பாம்பு மாதிரி அவனோட எல்லா நடவடிக்கைகளையும் கவனிச்சுட்டு இருந்தேன். ஆறுமாசத்துக்கு அப்புறம் எல்லாத் தாய்மார்களும் கொடுக்கிற மாதிரி எங்க வீட்ல சத்துமாவு கஞ்சி ரெடி பண்ணினாங்க. என் ஃப்ரெண்டு அவ குழந்தைக்கும் என்கிட்ட சத்துமாவு கஞ்சி ரெடி பண்ணி தரச் சொன்னா. அதைப்பார்த்துப் பலரும் கேட்கவும், நாம ஏன் இதையே ஏன் பிசினஸா பண்ணக் கூடாதுன்னு யோசிச்சேன்'' என்பவரின் பயணம் அன்றிலிருந்துதான் தொடங்கியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``கேட்டதும் வீட்ல பர்மிஷன் கிடைக்கலை. அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க. பலகட்ட கவுன்சலிங்குக்குப் பிறகு பர்மிஷன் வாங்கினேன். நான் செய்ற சத்துமாவு கஞ்சிக்கான பொருள்கள்ல துளியும் கலப்படம் இல்லாம இயற்கையான பொருள்களை பயன்படுத்தி சத்துமாவு கஞ்சி வகைகளை தயார் செய்திட்டிருந்தேன். 

ஆனா அதை எப்படி பிசினஸா மார்கெட்டிங் எல்லாம் செய்து கொண்டு போறதுன்னு தெரியலை. நிறைய தடுமாற்றங்கள். நிறைய செமினார் அட்டெண்டு பண்ணினேன். பிசினஸ் எப்படித் தொடங்கணும்ங்கிறதை அலசி ஆராய்ஞ்சேன். அப்படி ஆரம்பிச்சதுதான் ஃபர்ஸ்ட் ஸ்பூன்'. கம்பெனி பேர் எல்லாத்தையும் ரெஜிஸ்டர் பண்ணிட்டேன். 

திருப்பூரில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் நல மருத்துவமனைகளுக்கு நேர்ல போனேன். அங்க இருந்த டாக்டர்ஸ்கிட்ட என் சத்துமாவு கஞ்சியைக் கொடுத்து டெஸ்ட் பண்ணி, திருப்தி இருந்தா ஆர்டர் கொடுங்கனு கேட்டுகிட்டேன். அதுக்கு அப்புறம் அவங்ககிட்டேயிருந்து நிறைய ஆர்டர் வர ஆரம்பிச்சது. என் ஐடியா சக்சஸ் ஆச்சு. உடனே சிறுதானிய நூடுல்ஸ், சிறுதானிய சேவை ,சிறுதானிய புட்டு மிக்ஸ்னு பல புதுமையான உணவுகளுக்கான ரெடி மிக்ஸ்களை அறிமுகப்படுத்தினேன். நான் தயாரிக்கிற எந்த ரெடி மிக்ஸ்லேயும் சர்க்கரை, உப்பு மாதிரியான கூடுதல் பொருள்களோ, பதப்படுத்தப் பயன்படுத்துகிற பொருளோ சேர்க்கிறதே கிடையாது. அதனால நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்குது.  ஆரம்பத்துல பிசினஸ்ல கொஞ்சம் தடுமாறினேன். அதுக்கு அப்புறம் விவசாயிகளிடமிருந்து நேரிடையாப் பொருள்களைக் கொள்முதல் செய்ய ஆரம்பிச்சதும் நல்ல லாபம் வர ஆரம்பிச்சது. இப்ப மாசம் 3 லட்சம் வருமானம் பார்க்கிறேன். அடுத்தகட்டமா எல்லா வயசுக்காரங்களுக்குமான கஞ்சி ரெடி செய்ற பிளான் இருக்குது'' என்று புன்னகைக்கிறார் தீபா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism