Published:Updated:

குடும்பத் தலைவிகளின் வீட்டு பட்ஜெட்... என்ன ப்ளஸ், என்ன மைனஸ்?

குடும்பத் தலைவிகளின் வீட்டு பட்ஜெட்... என்ன ப்ளஸ், என்ன மைனஸ்?
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத் தலைவிகளின் வீட்டு பட்ஜெட்... என்ன ப்ளஸ், என்ன மைனஸ்?

குடும்பத் தலைவிகளின் வீட்டு பட்ஜெட்... என்ன ப்ளஸ், என்ன மைனஸ்?

குடும்பத் தலைவிகளின் வீட்டு பட்ஜெட்... என்ன ப்ளஸ், என்ன மைனஸ்?

குடும்பத் தலைவிகளின் வீட்டு பட்ஜெட்... என்ன ப்ளஸ், என்ன மைனஸ்?

Published:Updated:
குடும்பத் தலைவிகளின் வீட்டு பட்ஜெட்... என்ன ப்ளஸ், என்ன மைனஸ்?
பிரீமியம் ஸ்டோரி
குடும்பத் தலைவிகளின் வீட்டு பட்ஜெட்... என்ன ப்ளஸ், என்ன மைனஸ்?

ட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துவது செலவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இன்றைக்கும் பல பெண்கள், மாதத்தின் தொடக்கத்திலேயே வீட்டுக்கான பட்ஜெட்டைப் போட்டுவிடுகிறார்கள். அப்படி, ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் போட்டு வாழ்க்கையை நடத்தும் சில இல்லத்தரசிகளைச் சந்தித்து, அவர்களின் குடும்ப பட்ஜெட்டை தரச் சொன்னோம். அந்த பட்ஜெட் எப்படி இருக்கிறது, அதில் என்ன ப்ளஸ், என்ன மைனஸ், அதில் ஏதேனும் மாற்றங்களைச் செய்யவேண்டுமா என நிதி நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பனிடம் கேட்டோம். இதோ குடும்பத் தலைவிகள் போட்ட பட்ஜெட்டும், அதற்கு நிதி நிபுணர் தந்த ஆலோசனைகளும்...

குடும்பத் தலைவிகளின் வீட்டு பட்ஜெட்... என்ன ப்ளஸ், என்ன மைனஸ்?

வீட்டு நிர்வாகத்தை சிக்கனமா நடத்துறேன்!

‘‘என் கணவருக்கு மார்க்கெட்டிங் வேலை. மாதம் 35,000 சம்பளம். வாடகை வீடுதான். மூன்று வயசுல பாப்பா இருக்கா. நான் எம்.பி.ஏ படிச்சிருக்கேன். குழந்தையை வச்சுகிட்டு வேலைக்கும் போக முடியாது; அதுக்காக வீட்டுல சும்மாவும் இருக்க முடியாதே. அதனால வீட்டு நிர்வாகத்தை சிக்கனப்படுத்துற இல்லத்தரசி வேலையில பக்காவா இறங்கியிருக்கேன். மளிகைப் பொருள்களை மொத்தமாக வாங்குறது, ஒரே சமயத்தில் துணிகளை அயர்ன் செய்றது உட்பட மின்சாரத்தைச் சிக்கனமா பயன்படுத்துறதுனு மிச்சப்படுத்தி, என் கணவரோட வருமானத்துக்குள்ள பட்ஜெட் போட்டு செலவு செய்வேன். அதுபோக, டிஷ்யூ பேப்பர் டீலர்ஷிப் எடுத்து நடத்திட்டு வர்றேன். இப்போ, என்கிட்ட நாலுபேர் வேலை செய்றாங்க. எனக்கும் வருமானம் வருது. அதை அப்படியே சேமிப்பாக மாத்திடுறேன். அவரின் சம்பளத்துல குடும்பச் செலவுகளைக் கவனிச்சுக்கிட்டு ஆர்.டி கட்டுறது, நகை வாங்குறதுனு வாழ்க்கை போய்கிட்டு இருக்கு’’ என்றார் திருச்சியைச் சேர்ந்த ஜனனி. அவரது மாத பட்ஜெட் இதோ...

மாத வருமானம்  : ரூ.35,000
வீட்டு வாடகை : ரூ.4,000

குடும்பத் தலைவிகளின் வீட்டு பட்ஜெட்... என்ன ப்ளஸ், என்ன மைனஸ்?


மளிகைப் பொருள்கள் : ரூ.2,000
பால் : ரூ.1,000
கேஸ் : ரூ.700
செல்போன், இதர செலவு : ரூ.500
ஆர்.டி. கட்டுவது : ரூ.2,000
சிட் ஃபண்ட் : ரூ.1,000
தங்க நகை சேமிப்பு : ரூ.1,000
சினிமா, ஷாப்பிங் : ரூ.1,300
பண்டிகை, திருமணச் செலவு : ரூ.1,500
போக்குவரத்து செலவு : ரூ.500
கரன்ட் பில் : ரூ.250
பிசினஸில் முதலீடு : ரூ.15,000
மொத்தம் : ரூ.30,750
மீதம் : ரூ.4,250

நிதி நிபுணரின் ஆலோசனை: ‘‘டிஷ்யூ பேப்பர் பிசினஸ் மூலம் கிடைக்கும் லாபத்தை மாதம்தோறும் எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது. மீதமிருக்கும் ரூ.4,250-ல் ஒரு பகுதியை அவசரகாலத் தேவைகளுக்கும், மற்றொரு பகுதியை நீண்டகாலத் தேவைகளுக்குமாகப் பிரித்து அல்ட்ரா ஷார்ட் டேர்ம் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்துகொள்வது நன்று. கணவர் ஒருவரே வீட்டில் சம்பாதிப்பவர் என்பதால், அவருக்கு ரூ.50 லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது அவசியம். மேலும், உங்கள் குடும்பத்துக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்வதும் அவசியம்.’’

குடும்பத் தலைவிகளின் வீட்டு பட்ஜெட்... என்ன ப்ளஸ், என்ன மைனஸ்?

மாதத் தொடக்கத்திலேயே பட்ஜெட்...!

உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த மாலினி, அரசுப் பள்ளியில் பகுதி நேர ஆசிரியை. கணவர், சண்முகம் சுயமாக தொழில் செய்பவர். தீபிகா, திவ்யா என்ற இரண்டு பெண் குழந்தைகள். தீபிகா, பொறியியல் பட்டதாரி; திவ்யா பொறியியல் இறுதியாண்டு மாணவி. சொந்த வீடு இருப்பதால், மாத வாடகைப் பிரச்னை இல்லை.

குடும்பத்தின் மாத வருமானம் : ரூ.25,000
கரன்ட் பில் : ரூ.500
மளிகை, பால், கேஸ்: ரூ.3,200
பெற்றோருக்கான மருத்துவச் செலவு  : ரூ.800
இன்ஷுரன்ஸ் பிரிமீயம் (3 மாதத்துக்கு ஒரு முறை) : ரூ.500
பெட்ரோல் செலவு : ரூ.2,000
திருமணச் செலவுக்கான மாதச் சீட்டு : ரூ.5,000
பொழுதுபோக்கு : ரூ.3,000
மீதம் (வங்கிச் சேமிப்பு) : ரூ.10,000       

‘‘மாதத்தின் துவக்கத்திலேயே சேமிப்புக்கான தொகையை எடுத்து வைத்துவிட்டு, மீதம் இருப்பதை வைத்துதான் பட்ஜெட் போடுவோம். அதன்படியே செலவும் செய்வோம். இப்படி சேமித்தே உள்ளூரில் மகள்களுக்காக நிலம் வாங்கி வைத்திருக்கிறோம். என்றைக்கு இருந்தாலும் நிலம் கைகொடுக்குமே’’ என்று குதூகலித்தபடி சொன்னார் மாலினி.

நிதி நிபுணரின் ஆலோசனை : ‘‘ரூ.10,000 சேமிப்பில் ஒரு பகுதியை வங்கியிலும், மற்றொரு பகுதியை பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்யலாம். குழந்தைகளுக்காக நிலம் வாங்கி வைப்பதைவிட மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு லாபகரமானதாக அமையும். மாதத்தின் துவக்கத்திலேயே சேமிப்புக்காக ஒதுக்கி வைப்பது பாராட்டுக்கு உரியது. மருத்துவக் காப்பீடு இல்லாதபட்சத்தில் எடுத்துக்கொள்வது அவசியம்.’’

குடும்பத் தலைவிகளின் வீட்டு பட்ஜெட்... என்ன ப்ளஸ், என்ன மைனஸ்?

கனவு வீட்டை நோக்கி...!

‘‘எங்க வீட்டுல ஆறு பேர். நாளுக்கு நாள் அதிகரிச்சுக் கிட்டே இருக்கிற விலைவாசில பட்ஜெட் போட்டு வாழலைன்னா, நம்ம வாழ்க்கை அவ்வளவுதான். நான் பார்லர் வைச்சிருக்கேன். என் கணவர் டிராவல்ஸ் பிசினஸ் பண்றார். ரெண்டு பேரோட ஒட்டுமொத்த மாத வருமானம் 40 ஆயிரம் ரூபாய்” என்கிற சுருக்கமான முன்னுரையுடன் தன் மாத பட்ஜெட்டை விளக்கினார் நித்யா.

மாத வருமானம்  : ரூ.40,000
பால், காய்கறி செலவு : ரூ.3,500
கேஸ் மற்றும் மருத்துவச் செலவு ரூ.1,800
மளிகை சாமான்கள் : ரூ.3,000
வீட்டு வாடகை  : ரூ.6,500
கரன்ட் பில் : ரூ.3,000
ஸ்நாக்ஸ், பழங்கள் : ரூ.3,000
பெட்ரோல் செலவு : ரூ.3,000
பள்ளிக் கட்டணத்துக்காக மாதம் எடுத்துவைக்கும் தொகை : ரூ.1,000
மீதம் இருப்பது, சேமிப்பு  :ரூ. 15,200

‘‘எங்களோட எதிர்கால கனவான வீடு வாங்குறதை நோக்கி ஓடிட்டு இருக்கோம். பசங்க ஸ்கூல் பீஸைச் சமாளிக்க தனியா சீட்டுப் போடுறேன்’’ என்றார் கண் நிறைய கனவுடன்.

நிதி நிபுணரின் ஆலோசனை: “மீதமுள்ள ரூ.15,200-ல், ரூ.8,000-த்தை ரெக்கரிங் டெபாசிட் அல்லது அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில், வீடு வாங்குவதற்காக முதலீடு செய்துவரலாம்.

மீதமுள்ள ரூ.7,200-ஐ குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் தங்களின் ஓய்வு காலத்துக்காகவும் டைவர்சிஃபைடு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் முதலீடு செய்துவருவது சிறப்பாக அமையும்.

உங்கள் கணவர் டிராவல்ஸ் பிசினஸ் நடத்துவதால், டேர்ம் இன்ஷூரன்ஸ் அல்லது பர்சனல் ஆக்ஸிடென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக்கொள்வது அவசியம்.”

குடும்பத் தலைவிகளின் வீட்டு பட்ஜெட்... என்ன ப்ளஸ், என்ன மைனஸ்?

தேவை இல்லாததை வாங்குறதில்லை!

மதுரை, சோலை அழகுபுரத்தில் வசிக்கும் சாமினாதேவியிடம் குடும்ப பட்ஜெட் பற்றிக் கேட்டோம். ‘‘நான் தனியார் பள்ளியில் ஆசிரியையாக இருக்கேன். என் கணவர் தனியார் நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக இருக்கார். என் பொண்ணு கிருத்திகா, பிசியோதெரபி படிக்கிறாள். பையன் சுஜித் தீபக், பத்தாவது படிக்கிறான். சொந்த வீடுங்கிறதுனால வாடகை செலவு கிடையாது’’ என்றபடி தன் பட்ஜெட்டைக் கொடுத்தார் சாமினாதேவி.

மாத வருமானம்  : ரூ.50,000
வீட்டுக் கடன் தவணை  :ரூ.10,000
ஹெல்த், லைஃப் இன்ஷூரன்ஸ் :ரூ.10,000
பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணம்  :ரூ.10,000
அரிசி   :ரூ.1,000
மளிகை மற்றும் வீட்டுப் பொருள்கள் :ரூ.7,000
பால்  :ரூ.800
கேபிள்  :ரூ.150
கரன்ட் பில்  :ரூ.500
கேஸ்  :ரூ.700
செல்போன் செலவு :ரூ.700
வீட்டு வரி, குடிநீர் வரி :ரூ.500
பெட்ரோல் செலவு :ரூ.1,000
சினிமா, ஹோட்டல் :ரூ.2,000
மொய் மற்றும் எதிர்பாராத செலவு : ரூ.2,000
மாதாந்திரச் சேமிப்பு : ரூ.3,500

‘‘வீட்டுக் கடன் வாங்கியிருக்கோம். பசங்களோட படிப்புச் செலவு, இன்ஷூரன்ஸ், சேமிப்பு என வருமானத்தைப் பிரித்து ஒதுக்குறோம். தேவை இல்லாததை வாங்குறது இல்லை. அதனாலேதான் நிறைய சேமிக்க முடியுது’’ என்றார் பூரிப்புடன்.

நிதி நிபுணரின் ஆலோசனை: ‘‘கனகச்சிதமாகக் குடும்பத்தை நிர்வகித்து வருகிறார். வருமானம் கூடும்போது தங்களின் ஓய்வு காலத்துக்காக முதலீட்டை மேற்கொள்வது அவசியம்.’’

குடும்பத் தலைவிகளின் வீட்டு பட்ஜெட்... என்ன ப்ளஸ், என்ன மைனஸ்?

சம்பள உயர்வு வந்தால் நகை!

நெல்லையின் அடையாளங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயிலுக்குச் சொந்தமான காந்திமதி மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக இருக்கிறார் சிவகாமசுந்தரி. தன் கணவர் நாறும்பூநாதன் பிரபல எழுத்தாளர் என பெருமையாகச் சொல்கிறார் இவர். சிவகாமசுந்தரியின் பட்ஜெட் ப்ளான் இதோ...

மாத வருமானம் : ரூ.60,000
வீட்டுக் கடன்   : ரூ.11,500  
வாகனக் கடன்  : ரூ.6,500
எதிர்காலத்துக்கான சேமிப்பு  : ரூ.10,000 (ரெக்கரிங் மற்றும் எண்டோவ்மென்ட் இன்ஷூரன்ஸ் பாலிசி)
அரிசி, மளிகைப் பொருள்கள் : ரூ.10,000
வருமான வரி கட்டுவதற்காக  : ரூ.8,000
மருத்துவம் & அவசரச் செலவுக்காக : ரூ.2,500
நாளிதழ்கள், பத்திரிகைகள் : ரூ.2,000
ஏழைகளின் கல்வி உதவிக்கு : ரூ.2,000
ஆண்டுச் சுற்றுலா செல்வதற்கான சேமிப்பு : ரூ.3,000
மின் கட்டணம் (சராசரியாக)  : ரூ.750
தொலைபேசி, செல்போன் : ரூ.1,500
சுப நிகழ்ச்சிகள் மற்றும் உறவினர் இல்லங்களுக்கு செல்லுதல்  : ரூ.1,250
பணியிடம் சார்ந்த செலவு  : ரூ.1,000

‘‘எனக்கு சம்பள உயர்வு மற்றும் அது தொடர்பான நிலுவைத் தொகைகள் வரும்போது, அந்தப் பணத்தில் நகை மற்றும் புடவைகள் வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்’’ என்கிறார் சிவகாமசுந்தரி.
நிதி நிபுணரின் ஆலோசனை : ‘‘எதிர்காலத்துக்காக ரெக்கரிங் டெபாசிட் மற்றும் எண்டோவ்மென்ட் பாலிசிகளில் சேமிப்பதாகக் கூறியுள்ளார். நீண்ட காலத் தேவைகளுக்காக சேமிக்கும் போதும், முதலீடு செய்யும்போதும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்ல வருமானத்தைத் தருவதுடன் வரி இல்லாத வருமானமுமாக அது இருக்கும்.

வருமான வரி கட்ட, மாதம் ரூ.8,000  இவரது வருமானத்துக்குத் தேவைப்படாது. மேலும், வரியைக் குறைப்பதற்கு 80சி பிரிவின் கீழ் இஎல்எஸ்எஸ் ஃபண்டுகள் போன்றவற்றில் முதலீட்டை மேற்கொள்ளலாம்.’’

குடும்பத் தலைவிகள் என்னதான் பட்ஜெட் போட்டு குடும்பத்தை நடத்தினாலும், வாழ்க்கைப் பாதுகாப்புக்குத் தேவையான இன்ஷூரன்ஸ், எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றுகிற மாதிரியான முதலீடுகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டியது அவசியம்!

- பி.ஆண்டனிராஜ், செ.சல்மான், சி.ய.ஆனந்தகுமார், எம்.புண்ணியமூர்த்தி,   தி.ஜெயப்பிரகாஷ்.

படங்கள்: எல்.ராஜேந்திரன், எம்.விஜயகுமார், வீ.சதீஷ்குமார், தே.தீட்ஷித்.