Published:Updated:

காட்டன் குர்தா, மணிப்பூரி சில்க் புடவை... ’செம்பருத்தி’ ஜனனியின் ஃபேஷன் பக்கங்கள்!

சு.சூர்யா கோமதி

எனக்கு எந்த டிரஸ் செட் ஆகும் செட் ஆகாது என்பதில் ஒரு தெளிவு இருக்கும்.

காட்டன் குர்தா, மணிப்பூரி சில்க் புடவை... ’செம்பருத்தி’ ஜனனியின் ஃபேஷன் பக்கங்கள்!
காட்டன் குர்தா, மணிப்பூரி சில்க் புடவை... ’செம்பருத்தி’ ஜனனியின் ஃபேஷன் பக்கங்கள்!

ப்போர்ட்டிங் கேரக்டர்களில் நடித்தாலும் தன்னுடைய ஆடைத்தேர்வின் மூலம்,அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவர் ஜனனி, மாப்பிள்ளை நாடகத்தில் டிரண்டிலியான ஆடைத்தேர்வு, மெளனராகத்தில் சிம்பிள் அண்ட் நீட் லுக் சல்வார்கள்,செம்பருத்தி சீரியலில் ப்யூசன், டிரடிஷனல் என... தன் கேரக்டருக்கேற்ற ஆடைத்தேர்வில் அசத்தும் ஜனனி தன் வார்ட்ரோப் பற்றி நம்மிடம் பகிர்கிறார்.

ஆடைத்தேர்வு:

"எனக்கு இந்த உலகத்திலே ரொம்பப் பிடித்தமான ஒரு விஷயம்னா அது டிரஸ்சிங்தான். காலேஜில் படிக்கும்போதே விதவிதமான ஆடைகள் அணிந்து நியூ லுக்கில் கலக்குவேன். நான் அணியும் ஆடைகள் அனைத்தும் யுனிக்கா இருக்கனும் என்பதில் ரொம்பவே கவனமாக இருப்பேன். என் அம்மா காஸ்டியூம் டிசைனர். அதனால், எனக்குப் பார்த்துப்பார்த்து டிரஸ் டிசைன் பண்ணுவாங்க. கிளாஸ்ல எல்லோரும் உன் டிரஸ் சூப்பர்னு சொல்லும்போது றெக்கைட்டி பறக்கிற மாதிரி இருக்கும். இப்போ சீரியலிலும் நான் அணிகிற டிரஸஸ் பேசப்படுவது செம ஹேப்பி. கேரக்டருக்குத் தகுந்த மாதிரியான ஆடைகளைத் தேர்வு செய்யவேண்டும் என்பதில் முழுக் கவனத்துடன் இருப்பேன். செம்பருத்தி சீரியலில் ஆரம்பத்தில் வெஸ்டர்ன், கௌவுன்ஸ் எனக் கலக்கிய நான், இப்போ மணிப்புரி சில்க், சில்க் காட்டன், ஜார்ஜெட் போன்ற மெட்டிரியலில் புடவைகளையும், அதற்கு தகுந்தாற்போல் பேக் ஓப்பன், கோல்டு ஷோல்டர், போட் நெக்  என பல்வேறு பேட்டன்களில் தேர்வுசெய்து அணிகிறேன்.

அக்சஸரீஸ்:

அக்சஸரீஸ்களைப் பொருத்தவரை கிராண்டாகத்தான் இருக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. நாம் அணியும் ஆடைகளுக்குப் பொருந்திபோகிற மாதிரி இருந்தாலே பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வெஸ்டர்ன் ஆடைகள் அணியும்போது சிம்பிளான ஃபேஷன்  ஜூவல்லரிகளைப் பயன்படுத்துவேன். டிரடிஷனல் லுக் என்றால் ஜிமிக்கி, பாலி கம்மல்கள், ஆக்ஸிடைஸ்டு ஜூவல்லரி, டெரகோட்டாவில் செய்யப்பட்ட லாங் நெக் பீஸ் எனத் தேர்வுசெய்து அணிகிறேன். சீரியலைப் பொருத்தவரை ஆடைகளுடன் என் கேரக்டருக்கு ஏற்றார்போல தேர்வு செய்வேன்.

ஷாப்பிங்: 

டிரடிஷனல் ஆடைகள் அனைத்தையும் அம்மாவே டிசைன் செய்துவிடுவதால் அவற்றை வெளியே ஷாப்பிங் செய்வது வேண்டியிருக்காது. வெஸ்டர்ன் டைப் ஆடைகளை இந்த பிராண்ட்தான் என்றில்லாமல் எனக்கு செட் ஆகக்கூடிய, அதே நேரத்தில் மனசுக்குப் பிடித்த ஆடைகளை வாங்கி வந்துவிடுவேன். எனக்குச் சொந்த ஊர் கோயம்புத்தூர் என்பதால் என்னுடைய ஷாப்பிங் எல்லாம் கோயம்புத்தூரில்தான்.

ஃபேவரைட் டிரஸ்:

சிம்பிள் அண்ட் நீட் லுக் தான் என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட். அதனால், காட்டன் ஆடைகளை அதிகம் பயன்படுத்துவேன். எனக்குத் தேவையான மாடல்களை நானே வரைந்து கொடுத்தும் விடுவேன். அம்மாவும் எனக்காக நிறைய மிக்ஸ் மேட்ச் மாடல்களைத் தயார்செய்து கொடுப்பாங்க. எனக்கு எந்த டிரஸ் செட் ஆகும் செட் ஆகாது என்பதில் ஒரு தெளிவு இருக்கும். அந்த வகையில் என் மனதைக்கொள்ளை கொள்ளும் டிரஸ் எப்போதும் சல்வார்ஸ்தான். என் அம்மா, நான் காலேஜ் படிக்கும்போது எனக்காக டிசைன் செய்துகொடுத்த பிளாக் அண்ட் மெரூன் காம்போ கொண்ட குர்தா எப்பவும் எனக்கு மோஸ்ட் மெமரபுள் டிரஸ். என் வார்ட்ரோப்பில் தனி இடமும் பெற்றுள்ளது,

நிறத்தேர்வு:

கறுப்பு நிறம்தான் என்னுடைய ஃபேவரைட். என்னுடைய வார்ட்ரோப் முழுவதும் கறுப்பு நிறத்தால் நிறைந்து இருக்கும். ஆனால், சீரியலைப் பொருத்தவரை கலர்புல்லான லுக் வேண்டும் என்பதால் பேஸ்டல் நிறங்கள், வெளிர் நிறங்கள் போன்றவற்றைத் தேர்வு செய்து அணிகிறேன்.

செலிப்ரட்டி டிரண்ட் :

எனக்கு த்ரிசாவின் ஆடைத்தேர்வுகள் ரொம்பப் பிடிக்கும். என்னுடைய உடல்வாகு அவருடைய உடல்வாகுடன் ஒத்துப்போவதால் சமயங்களில் அவர் அணிந்தது போன்ற ஆடைகளையும் தேர்வு செய்து அணிவேன்.

மேக் அப்:

கண்களுக்கான மேக்- அப்பிற்கு அதிக முக்கியத்துவம் தருவேன். அதுதான் நம் அழகைக் கூடுதல் அழகில் காட்ட உதவும். என்னுடைய ஹேண்ட் பேக்கில் எப்போதும், காஜல், ஐ லைனர், மஸ்காரா, ஐ ஷேடோ, ஐ-ப்ரோ பென்சில், லென்ஸ் போன்றவை இருக்கும்." என்கிறார் இந்த ஃபேஷன் குயின்!