Published:Updated:

ஐன்ஸ்டீன் முதல் ஸ்டார்ட்அப் வரை... எலான் மஸ்க் வாழ்க்கையை மாற்றிய 8 புத்தகங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஐன்ஸ்டீன் முதல் ஸ்டார்ட்அப் வரை... எலான் மஸ்க் வாழ்க்கையை மாற்றிய 8 புத்தகங்கள்!
ஐன்ஸ்டீன் முதல் ஸ்டார்ட்அப் வரை... எலான் மஸ்க் வாழ்க்கையை மாற்றிய 8 புத்தகங்கள்!

ஐன்ஸ்டீன் முதல் ஸ்டார்ட்அப் வரை... எலான் மஸ்க் வாழ்க்கையை மாற்றிய 8 புத்தகங்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!


எலான் மஸ்க் ( Elon Musk) - அமெரிக்கத் தொழிலதிபர், முதலீட்டாளர், பொறியியலாளர் என்று பன்முகங்களைக் கொண்டவர். டெஸ்லா (Tesla) மற்றும் நியுராலிங்க் (Neuralink) நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவர். வருங்கால போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் எலெக்ட்ரானிக் கார்கள், ஹைப்பர்லூப் திட்டம், SpaceX திட்டம் எனப் பல திட்டங்களில் தன்னை பிஸியாக ஈடுபடுத்திக்கொண்டு பம்பரம் போலச் சுழன்றுகொண்டிருக்கும் இந்த மனிதர், சிறந்த புத்தக வாசிப்பாளரும்கூட.

தனது சாதனைகள் ஒவ்வொன்றின் தொடக்க புள்ளியும் புத்தகங்களிலிருந்தே ஆரம்பமாகிறது என்று நம்பும் எலான் மஸ்க், தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த தனது இளமைப் பருவம் முழுவதும் புத்தக வாசிப்பிலேயே கழித்திருக்கிறார். அறிவியல் புனைகதைகளின் மீது தீராத ஆர்வம் கொண்டவர். அவற்றை வாசிப்பதில் ஒரு நாளைக்கு 10 மணி நேரத்துக்கும் மேலாகச் செலவிடும் இவர் தனது ஒன்பதாவது வயதிலேயே என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா முழுவதையும் படித்துவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சமீபத்தில் 47 வயதை நிறைவு செய்த இந்த இளைஞர், இதுவரை தனது வாழ்க்கையை வடிவமைத்ததிலும் தன்னை ஊக்குவித்ததிலும் எட்டு புத்தகங்கள் பெரிதும் உதவியிருக்கின்றன என்று கூறியிருக்கிறார்.

“The Hitchhiker’s Guide to the Galaxy” by Douglas Adams
எலான் மஸ்க், தனது இளமைப் பருவத்தில் நீட்சே (Nietzsche)  மற்றும் ஸ்கோபென்ஹௌர் (Schopenhauer) போன்ற தத்துவவாதிகளின் படைப்புகளில் பெரிதும் ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். அதன் பின்பு ‘டக்லஸ் ஆடம்ஸின்’ கருத்துகள் இவரைப் பெரிதும் கவர்ந்திருக்கின்றன. இதுபற்றி, அலிசன் வான் டிக்கேலன் (Alison Van Diggelen) நடத்தும் ‘ப்ரெஷ் டயலாக்’ நேர்முகத்தில் ( Fresh Dialogue Interview) எலான் மஸ்க் கூறும்போது, “வாழ்க்கையின் உண்மையான அர்த்தம்தான் என்ன என்பதைக் கண்டறியும் பொருட்டு அதை நான் பல புத்தகங்களில் தேடிக்கொண்டிருந்தேன்... அப்போதுதான் இந்த (The Hitchhiker’s Guide to the Galaxy) புத்தகத்தை வாசித்தேன். அதில், “பல்வேறு சமயங்களில் பதிலைவிட கேள்வியே கடினமானதாக இருக்கும். முதலில் சரியான கேள்வியை நாம் உருவாக்கிவிட்டோம் என்றால் பின்பு அதற்கான பதிலையும் எளிதாகப் பெற்றுவிட முடியும்” என்ற முக்கியமான கருத்தை இப்புத்தகம் எனக்கு உணர்த்தியது” என்றார்.

“Einstein: His Life and Universe” by Walter Isaacson
எப்போதுமே ஒரு வெற்றியாளருக்கு, அவருக்கு முன்பிருந்த வெற்றியாளர் ஒருவர்தான் உத்வேகமாகவும் ஆதர்சமாகவும் இருந்திருப்பார் அல்லவா? அதுபோலத்தான் மஸ்கின் ஆதர்சமாக ஐன்ஸ்டீன் இருந்திருக்கிறார். இப்புத்தகம் பற்றி  ஃபவுண்டேஷன் (Foundation) நடத்திய நேர்முகத்தில் பேசிய எலான் மஸ்க், “இந்த மனிதரைப் பற்றிய கதைகள், என்னுடைய அறிவாற்றலையும் குறிக்கோளையும் மாற்றியதில் முக்கியப் பங்கு வகித்தன” என்று கூறினார். 

“Structures: Or why Things Don’t Fall Down” by J.E.Gordon
SpaceX போன்ற ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்க வேண்டுமென்றால் ராக்கெட் சயின்ஸில் ஆர்வமில்லாமல் முடியாது. அப்படி இந்தத் துறையில் இவருக்கு ஆர்வம் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்த புத்தகம்தான் ஜோர்டன் எழுதிய Structures: Or why Things Don’t Fall Down. “கட்டுமான அமைப்பைப் பற்றிய அறிமுகத்துக்கு இப்புத்தகம் மிகச் சிறந்த ஒன்று” என்று ‘கே.சி.ஆர்.டபிள்யூ ரேடியோ (KCRW Radio)  நடத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.

“Ignition!: An Informal History of Liquid Rocket Propellants” by John D.Clark
ராக்கெட் பற்றி பேசும்போது, எலான் மஸ்கினை பாதித்த மற்றுமொரு புத்தகம் இது. இதுபற்றி ‘மீடியாபிஸ்ட்ரோ’ (MediaBistro) நடத்திய பேட்டி ஒன்றில் கூறுகையில், “ராக்கெட் சம்பந்தப்பட்ட விஷயங்களை அறிவதற்கு எனக்கு மிகவும் உதவிய புத்தகம் இது. உண்மையில் படிப்பதற்கு வேடிக்கையான புத்தகமும்கூட” என்றார்.

“Super-intelligence: Paths, Dangers, Strategies” by Nick Bostrom
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மனித இனத்துக்கே ஆபத்து என்று சென்ற வருடம் ரோட் தீவில் நடைபெற்ற அமெரிக்காவின் ‘The Bipartisan National Governors Association’-ல் கவர்னர்களைச் சந்தித்து உரையாடியதில் எலான் மஸ்கி தெரிவித்திருந்தார். அவ்வாறு அவர் தெரிவித்ததற்கு காரணமாக இருந்தது ‘நிக் போஸ்ட்ரோம்’ எழுதிய இப்புத்தகம்.

“Zero to one: Notes on Startups, or How to Build the Future” by Peter Thiel
‘பே-பால்’ (PayPal) நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான பீட்டர் தீல் என்பவர் எழுதிய இப்புத்தகம் அவரது ஸ்டார்ட்அப் நிறுவனங்களைப் பற்றிய அனுபவங்களைக் கூறுகிறது. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க விரும்புபவர்களுக்கு இப்புத்தகம் மிகச்சிறந்த துணையாக இருக்கும் என்பது மஸ்கின் கருத்து.

 The “Foundation” trilogy by Isaac Asimov, and “The Lord of the Rings” by J.R.R. Tolkien
அறிவியல் புனைகதைகளில் தீராத ஆர்வம் கொண்ட இவர், அவற்றில் தனக்கு மிகவும் பிடித்த புத்தகத்தைப் பற்றி ‘தி நியூயார்கர்’ (The New Yorker) பத்திரிகையில் கூறும்போது, ``ஐசக் அசிமோவ் எழுதிய ‘ஃபவுண்டேஷன் சீரீஸ்’ தான் என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட்”, என்றார். அதேபோல, “உலகைக் காப்பாற்றும் கதாநாயகர்கள் நிறைந்த கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் ‘The Lord of the Rings’ நாவலின் தீவிர ரசிகன் நான்” என்றும் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு