Published:Updated:

பிரதமருக்கு எழுதிய கடிதம்:ராசாவுக்கு கோர்ட் கண்டனம்

புதுடெல்லி, மார்ச்.3,2011

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எழுதிய கடிதத்தில் இடம் பெற்றிருந்த தரக்குறைவான வாசகங்களுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. ##~~##

2 ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் மீதான விசாரணை,  நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன்பு புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், ஆ.ராசா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதம் பற்றி நீதிபதிகள் விமர்சித்தனர்.

அந்த கடிதத்தின் தொனி மற்றும் நடைமுறை குறித்தும் அதில் இடம்பெற்றிருந்த 'நியாயமற்றது', 'ஏறுக்கு மாறானது', 'விதிகளுக்கு பொருந்தாதது' போன்ற வார்த்தைகள் குறித்தும் நீதிபதிகள் ஆழ்ந்த வேதனை தெரிவித்தனர்.

இந்திய அரசியல் அமைப்பின் உயர் அதிகார பொறுப்பில் உள்ள பிரதமருக்கு எழுதிய அந்த கடிதம் மரியாதைக்குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், கடிதத்தில் இடம்பெறும் வார்த்தைகள் பண்புள்ளதாகவும், நாகரீகமாகவும் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு லைசென்சு வழங்குவதை சில நாட்கள் தள்ளி வைக்கும்படி அறிவுறுத்தி தெரிவித்து பிரதமர் மன்மோகன்சிங் ஆ.ராசாவுக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த அறிவுரையை ஏற்க மறுத்து, கடந்த 2007 டிசம்பர் 26-ந்தேதி பிரதமருக்கு பதில் கடிதம் எழுதி இருந்தார்.

"அந்த கடிதத்தின் வாசகங்கள் மிகவும் ஆட்சேபனைக்குரியது. பொதுவாக ஒருவர் தன்னை விட வயது அதிகமானவருக்கு கடிதம் எழுதும் போது மரியாதையுடன் எழுத வேண்டும். பிரதமரின் யோசனைகள் விதிகளுக்கு முரணானது, நியாயமற்றது, ஏறுக்கு மாறானது என்று ஆ.ராசா குறிப்பிடலாமா?

பிரதமர் போன்ற பதவியில் இருப்பவர்களுக்கு எழுதப்படும் கடிதங்கள் மிகவும் கண்ணியமாக இருக்க வேண்டும். அதில் இடம் பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய 'அடைமொழி'களை தவிர்த்து இருக்கலாம். ஆ.ராசா பயன்படுத்திய வார்த்தைகள் வேதனை அளிப்பதாக உள்ளது''  என்று நீதிபதிகள் கூறினார்கள்.

அடுத்த கட்டுரைக்கு