Published:Updated:

97 கேமராக்களை மீறி சசிகலாவுக்கு எப்படிச் சலுகை அளிக்க முடியும்? விசாரணை அதிகாரியிடம் பொங்கிய புகழேந்தி

97 கேமராக்களை மீறி சசிகலாவுக்கு எப்படிச் சலுகை அளிக்க முடியும்? விசாரணை அதிகாரியிடம் பொங்கிய புகழேந்தி
News
97 கேமராக்களை மீறி சசிகலாவுக்கு எப்படிச் சலுகை அளிக்க முடியும்? விசாரணை அதிகாரியிடம் பொங்கிய புகழேந்தி

97 கேமராக்களை மீறி சசிகலாவுக்கு எப்படிச் சலுகை அளிக்க முடியும்? விசாரணை அதிகாரியிடம் பொங்கிய புகழேந்தி

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா மற்றும் இளவரசி இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலாவுக்குச் சலுகைகள் வழங்கச் சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு ரூபாய் 2 கோடி வரை லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகக் கர்நாடக மாநில சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா கடந்த ஆண்டு ஜூன் மாதம் பரபரப்பு குற்றச்சாட்டுகளைக் கூறினார். 

ரூபாவின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணை அறிக்கையை உள்துறை அமைச்சரிடம் வழங்கியது. அறிக்கையில், `2 கோடி ரூபாய் லஞ்சமாக வழங்கப்பட்டது தொடர்பாக ஊழல் தடுப்புப் பிரிவுதான் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும்' என்று வினைய்குமார் தெரிவித்திருந்தார். 

அதன்படி, ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்த கார்நாடக அரசு உத்தரவிட்டது. விசாரணையைத் தொடங்கிய ஊழல் தடுப்புப் பிரிவு கடந்த ஜூலை 2ம் தேதி பெங்களூருவில் உள்ள லஞ்ச ஒழிப்புப் பிரிவு தலைமை அலுவலகத்தில் புகழேந்தியிடம் விசாரணை செய்துள்ளது. அப்போது, விசாரணை அதிகாரிகள் கேட்ட சரமாரி கேள்விகளும் அதற்கு புகழேந்தி அளித்த பதில்களும் வருமாறு:

சிறை விதிமுறைகளை மீறி பதிவுகள் ஏதும் இல்லாமல் சசிகலாவை நீங்கள் சந்தித்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளனவே?

``சிறை விதிமுறைகளுக்கு உட்பட்டு வழக்கு தொடர்பான மற்றும் அரசியலில் பொதுச்செயலாளர் என்ற முறையில் சில முக்கியத் தகவலுக்காக சசிகலாவைச் சந்தித்தேன். ஆனால், தற்போது உறவினர்களுக்கே 15 நாள்களுக்கு ஒரு முறைதான் சந்திக்க வாய்ப்பு என்பதால், சசிகலா சந்திக்க விரும்பினால் மட்டுமே சந்தித்து வருகிறேன்''.

ஆரம்பகாலத்தில் நீங்கள் சிறைத்துறை அதிகாரிகளிடம் அதிகளவு தொலைப்பேசியில் பேசியுள்ளீர்களே?

``ஆமாம். முக்கியமான வி.ஐ.பி-க்கள் மற்றும் வழக்கு தொடர்பான சில சட்ட உதவிகளுக்கு அதிகாரிகள் வந்துவிட்டார்களா என்பதைப் பழக்கத்தின் அடிப்படையில் விசாரித்தேன். இது ஒரு சாதாரண நடைமுறைதான்''.

சிறையில் சசிகலா சலுகைகள் பெற லஞ்சம் கொடுத்துள்ளதாகக் குற்றசாட்டுகள் உள்ளனவே? 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``சசிகலா இன்று வரை ஒரு சாதாரண கைதியாகத்தான் சிறையில் உள்ளார். வருமான வரி செலுத்தும் நபராக இருந்தாலும் அதற்கான சான்றிதழ் வழங்காததால் முதல் வகுப்பு பெற முடியவில்லை. 97 சிறை கண்காணிப்பு கேமராக்களை மீறி சசிகலாவுக்குச் சிறப்புச் சலுகைகள் எப்படி அளிக்க முடியும். 

சரி நீங்கள் ஏன் ரூபாமீது புகார் அளித்தீர்கள்? 

``சிறைத்துறை பொறுப்பேற்ற ரூபாவுக்கு இரண்டு முறை டிஜிபி சத்ய நாராயணா மெமோ கொடுத்துள்ளார். அதில் ஒன்று ஐபிஎஸ் அதிகாரிகளுக்குச் சில கட்டுப்பாடுகள் உள்ளன என்றும், சமூக வலைதளங்களில் அதிக ஆர்வம் காட்ட வேண்டாம் என்பதுதான் அது. இதை விரும்பாத ரூபா, திசை திருப்ப சசிகலா சிறையில் சலுகை பெறுவதாக ஒரு மாயக் குற்றச்சாட்டை ஏற்படுத்தி இந்தியா முழுவதும் பிரபலம் ஆகிவிட்டார். அதே சமயத்தில் டிஜிபிக்கும் நெருக்கடி கொடுத்துவிட்டார். அவரது சொந்தக் காரணத்துக்காக சசிகலாவைப் பயன்படுத்தியது தவறு அதனால்தான் புகார் கொடுத்தேன்''. 

சசிகலாவை நீங்க கடைசியாக எப்போது பார்த்தீர்கள்? 

``கடந்த 4 மாதங்களுக்கு முன்பு''.

இப்படி முடிந்த விசாரணையில் தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் நிறைவுபெற்றுள்ளது.