Published:Updated:

பாணிகள் மாறினாலும் பார்வைகள் மாறினாலும் பரதமே எங்கள் வாழ்க்கை!

பாணிகள் மாறினாலும் பார்வைகள் மாறினாலும் பரதமே எங்கள் வாழ்க்கை!
பிரீமியம் ஸ்டோரி
பாணிகள் மாறினாலும் பார்வைகள் மாறினாலும் பரதமே எங்கள் வாழ்க்கை!

சந்திப்பு - மூன்று மயில்கள்ஆர்.வைதேகி - படங்கள்: பா.காளிமுத்து

பாணிகள் மாறினாலும் பார்வைகள் மாறினாலும் பரதமே எங்கள் வாழ்க்கை!

சந்திப்பு - மூன்று மயில்கள்ஆர்.வைதேகி - படங்கள்: பா.காளிமுத்து

Published:Updated:
பாணிகள் மாறினாலும் பார்வைகள் மாறினாலும் பரதமே எங்கள் வாழ்க்கை!
பிரீமியம் ஸ்டோரி
பாணிகள் மாறினாலும் பார்வைகள் மாறினாலும் பரதமே எங்கள் வாழ்க்கை!
பாணிகள் மாறினாலும் பார்வைகள் மாறினாலும் பரதமே எங்கள் வாழ்க்கை!

கிருத்திகா, குயில்மொழி, கோட்டீஸ்வரி... மூன்று பேருமே பரதக் கலைஞர்கள். சம வயதுள்ளவர்கள். பொழுதுபோக்கவோ, பிரபலமாகவோ பரதத்தைத் தேர்ந்தெடுத்தவர்கள் இல்லை.

வெவ்வேறு பின்னணியில் இருந்து வந்த இவர்களுக்கு பரதத்தின் மீதான காதல் பொதுவானது. பரதத்தின் மீதான இவர்களது பார்வை மட்டும் வேறு வேறானது.

கிருத்திகாவின் நடன அடவுகளில் பக்தி பாவமும் காதல் கசிந்துருகலும் அதிகமாக இருக்கும்.

குயில்மொழியின் நடன மொழி, சமூக அவலங்களின் பிரதிபலிப்பு.

‘நெருப்புடா... நெருங்குடா பார்ப்போம்...’ என்கிற மாதிரி கோட்டீஸ்வரியின் நடனத்தில் நிஜமாகவே அனல் தெறிக்கும்.

நடனமே வாழ்க்கை என்பதில் உறுதியாக இருக்கிற இவர்களைச் சந்திக்க வைத்தோம். பணத்தையும் வளத்தையும் மையப்படுத்தியே எதையும் யோசிக்கிற இன்றைய இளைய தலைமுறையினருக்கு மத்தியில், அவற்றைத் தவிர்த்து, கலையின் மீதான இவர்களது ரசனையும் லட்சியமும் பிரமிக்க வைக்கிறது.

கிருத்திகா: ‘`நான் பி.எஸ்ஸி விஸ்காம் ரெண்டாவது வருஷம் பண்ணிட்டிருக்கேன். 14 வருஷங்களா டான்ஸ் கத்துக்கறேன். கலாக்ஷ்த்ராவைச் சேர்ந்த பிரேம்நாத் என் முதல் குரு. கடந்த ஏழு வருஷங்களா மகாலட்சுமி அஷ்வின்கிட்ட கத்துக்கறேன். போன வருஷம்தான் அரங்கேற்றம் முடிச்சேன். பத்தாவது முடிச்சதும் கலாக்ஷ்த்ராவுல லெவன்த் சேர்ந்தேன். டிஸ்டிங்ஷன் லெவல்ல வந்தேன். இன்னொரு படிப்பும் வேணும்னு விஸ்காம் எடுத்தேன். தியேட்டர் ஆர்ட்ஸ் ரொம்பப் பிடிக்கும். அது நடனத்தோடும் சம்பந்தப்பட்டதுங்கிறதால அதுலதான் என் எதிர்காலம் அமையணும்னு விரும்பறேன்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


குயில்மொழி: ‘`நான் வழக்கறிஞர் அருள்மொழியின் மகள். எத்திராஜ் காலேஜ்ல பி.எஸ்ஸி கணிதம் முடிச்சேன். அப்புறம் சட்டம் முடிச்சுட்டு, இப்போ ஏசிஎஸ் பண்ணிட்டிருக்கேன். கலைமாமணி நர்த்தகி நட்ராஜ்தான் எனக்கு பரதநாட்டியக் குரு. ஏழு வருஷங்களா அவங்ககிட்ட டான்ஸ் கத்துக்கறேன். போன வருஷம்தான் அரங்கேற்றம் முடிச்சேன். தஞ்சை நால்வர் வழியிலதான் பரதம் கத்துக்கறேன். சின்ன வயசுலேருந்தே பாட்டும் நடனமும் பிடிக்கும். நர்த்தகியம்மாவைப் பார்த்த பிறகு அவங்க நடனம் ரொம்பப் பிடிச்சுப் போய் கத்துக்க ஆரம்பிச்சேன். இப்ப அது என் வாழ்க்கையில ஓர் அங்கமா மாறிடுச்சு.’’

கோட்டீஸ்வரி கண்ணன்: ‘`நான் ரொம்ப ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். அம்மா முறுக்கு, அதிரசம் செய்து வித்துதான் குடும்பத்தை நடத்தினாங்க. பழைய படங்கள்ல பத்மினி, ராகிணி ஆடறதைப் பார்த்துட்டு எனக்கு நாட்டிய ஆர்வம் வந்தது. எனக்கு ஆரம்பத்துல வீட்டுல சப்போர்ட் இல்லை. அப்பா ஓரளவு சம்மதிச்சார். அம்மாவுக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. டான்ஸ் ஆடப் போயிட்டா வாழ்க்கை வேற மாதிரி் போயிடும்னு பயந்தாங்க. என்னோட ஆறு வயசுல சுஜாதா மேடம் அறிமுகமானாங்க. என்னோட அதீத ஆர்வத்தாலயும் மாஸ்டரோட ஊக்கத்தாலயும் ரொம்ப சீக்கிரமே கத்துக்க முடிஞ்சது. பரதநாட்டியத்துல உலக சாதனை பண்ணியிருக்கேன்.’’

அறிமுகப் படலம் முடிந்ததும், அவரவர் பாணி பரதத்தை அலசினார்கள் தோழிகள்.

பாணிகள் மாறினாலும் பார்வைகள் மாறினாலும் பரதமே எங்கள் வாழ்க்கை!

கிருத்திகா: ‘`நான் கலாக்ஷ்த்ரா பாணியைத்தான் கத்துக்கணும்னு உறுதியா இருந்தேன். `நாயகி பாவா'னு சொல்வாங்க. ஹீரோயின், ஹீரோகிட்ட என்ன சொல்ல விரும்பறானு சொல்றதுதான் அது. இப்படி, பாரம்பர்ய பாணியில வேற எந்தப் புதுமைகளையும் புகுத்த விரும்பறதில்லை. கடவுள் வழிபாட்டைப் பிரதிபலிக்கிற நடனம்தான் என்னுடைய விருப்பம்.’’

குயில்மொழி: ‘`அம்மா பெண்ணியவாதியாகவும், திராவிடக் கொள்கைகள்ல ஈடுபாடு உள்ளவங்களாகவும் இருந்தாலும் அவங்களுக்குச் சின்ன வயசுலேருந்தே நடனம் பிடிக்கும். கிருஷ்ணர், ராதைனு பள்ளி நாள்களில் அம்மா ஆடின நடனங்களை அவங்களைத் தெரிஞ்சவங்க சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். அம்மாகிட்டருந்துதான் அந்த ஆர்வம் எனக்கு வந்திருக்கணும். பக்தி இலக்கியம், மோஹமான வர்ணம், மோஹலாகிரி வர்ணம் எல்லாம் நர்த்தகியம்மா சொல்லிக் கொடுத்தாங்க. திவ்யப்பிரபந்தம், திருவருட்பானு எல்லாம் ஆடியிருக்கேன். நடனத்தின் மேல் எனக்கிருக்கிற ஆர்வத்தின் காரணமா இதையெல்லாம் நான் நல்லா ஆடினாலும், என்னோட தனிப்பட்ட விருப்பம் வேறன்னு என் குருவுக்குத் தெரியும். போர், பெண்களுக்கு எதிரா நடக்கிற வன்கொடுமைகள் மாதிரி சமகாலப் பிரச்னைகளை எடுத்துப் பண்றதுலதான் எனக்கு விருப்பம் அதிகம்.’’

பாணிகள் மாறினாலும் பார்வைகள் மாறினாலும் பரதமே எங்கள் வாழ்க்கை!

கோட்டீஸ்வரி: ‘`எத்தனையோ மேற்கத்திய நடனங்கள் வந்தாலும் அத்தனைக்கும் முன்னாடி பரதநாட்டியம்தான் ஜெயிக்கும். ஆனா, அந்த அருமை பலருக்கும் புரியறதில்லை.மக்களோட கவனத்தை பரதம் பக்கம் திருப்ப என்ன செய்யலாம்னு யோசிச்சேன். இடுப்புல வளையம் மாட்டிக்கிட்டு பரதநாட்டியம் ஆடறது, சிவதாண்டவத்தை நெருப்பு கட்டிக்கிட்டு ஆடறது, செல்ஃப் கன்ட்ரோல் பேலன்ஸ் பண்ற மாதிரி பானை மேல நின்னுக்கிட்டு ஆடறதுனு 16 வகைகளை முயற்சி செய்ய ஆரம்பிச்சேன்.’’

இந்த மூவரில், கோட்டீஸ்வரிக்கு மட்டும் கல்விகனவு கானல் நீராகி இருக்கிறது. மற்ற இருவரும் நடனத்தையும் படிப்பையும் இரு கண்களாகவே பார்க்கிறார்கள். அது அவர்களது பேச்சில் தெரிகிறது.

கிருத்திகா: ‘`விஸ்காம் எடுத்ததே டான்ஸுக்காகத்தான். எங்கம்மாவுக்கு நான் டாக்டராகணும்னு ஆசை. என் ஆர்வத்தை அவங்ககிட்ட சொன்னேன். புரிஞ்சுக்கிட்டு என்கரேஜ் பண்ணினாங்க. சமீப காலமா எனக்கு தியேட்டர் ஆர்ட்ஸ்ல ஆர்வம் அதிகமாகியிருக்கு. ஒரு டான்ஸ் டிராமா பண்றாங்கன்னா, அதுல உள்ள நடனத்தைத் தாண்டி, ஸ்டேஜ், லைட், மியூசிக், கலர், பேக்ரவுண்ட்னு எல்லாத்தையும் கத்துக்கறேன். எப்பவுமே டான்ஸ் கிளாஸை கட் பண்ணினதே இல்லை. படிக்கிற காலத்துல டான்ஸ் கிளாஸ்தான் கதின்னு கிடந்திருக்கேன்.’’

குயில்மொழி: ‘`அம்மா வேலைக்குப் போனதால சின்ன வயசுலேருந்தே நானே தனியா படிச்சுடுவேன். நல்லாவும் படிச்சுடுவேன். ப்ளஸ் டூ முடிச்சதும் மேத்ஸ் மேல ஆர்வம் அதிகமானது. அப்பதான் நடனமும் கத்துக்க ஆரம்பிச்சேன். பரதமும் கணக்கு சம்பந்தப்பட்டதுதான். ஏழா, ஒன்பதா, சங்கீர்ணமா, மிஸ்ரமா எல்லாமே கணக்குதானே? கணிதம் படிச்சது என்னோட நடனத்துக்கும் ரொம்ப உபயோகமா இருக்கு. மேடையில ஏறினதும் எந்த ஸ்டெப்பையும் மறந்துடக் கூடாதுங்கிறதுல எப்படி கவனமா இருப்போமோ, அது படிப்புலயும் உதவியா இருக்கும். நடன நிகழ்ச்சிகள்ல டிஸிப்ளின் ரொம்ப முக்கியம். ஆர்க்கெஸ்ட்ரா வர்றதுக்கு முன்னாடி நாம அங்கே இருக் கணும். அது வேலைக்குப் போகும்போது உதவியா இருக்கு. இப்போ என் குருவுக்கு நட்டுவாங்கம் பண்றேன். அது இன்னும் சிக்கலான கணக்கு. அது கொடுக்கிற நம்பிக்கையும் படிப்புக்கு உதவியா இருக்கு.’’

கலைஞர்களுக்கு ஒவ்வொரு மேடையுமே மறக்க முடியாததாகவே இருக்கும். ஆனாலும், அவர்களின் மனதுக்கு நெருக்கமான நிகழ்ச்சி என நிச்சயம் ஒன்று இருக்கும். இவர்களுக்கு அது எது?

கோட்டீஸ்வரி: ‘`வேர்ல்ட் ரெக்கார்ட் பண்ணினதை என் வாழ்க்கை முழுக்க மறக்க மாட்டேன். சின்ன வயசுலேருந்தே ஏதாவது சாதிக்கணும்னு கனவு கண்டுக்கிட்டே இருப்பேன். போன வருஷம்தான் அந்தக் கனவு நனவானது. மூணு மாசம் பயிற்சி எடுத்தேன். பானை மேல நின்னுக்கிட்டு, இடுப்புல வளையம் மாட்டிக்கிட்டு, கண்களைக் கட்டிக்கிட்டு மூணு மணி நேரம் வேர்ல்ட் ரெக்கார்ட் பண்ணினேன்.''

கிருத்திகா: ‘`நான் டான்ஸ்ல தீவிரமா இருக்கிறதைப் பார்த்த நிறைய சொந்தக்காரங்க, `டான்ஸெல்லாம் எதுக்கு'னு கேட்டாங்க. அரங்கேற்றத்துல நான் ஆடினதைப் பார்த்துட்டு, அவங்க எல்லாரும் அப்பா, அம்மாகிட்ட வந்து அப்படிப் பாராட்டினாங்க. இவளை டான்ஸ்லயே கொண்டு போங்கன்னு சொன்னாங்க. கலாக்ஷ்த்ரா மேடையில பண்ணின நிகழ்ச்சிகள் எல்லாமே எனக்குப் பெருமையைக் கொடுத்தவை தான்.’’

பாணிகள் மாறினாலும் பார்வைகள் மாறினாலும் பரதமே எங்கள் வாழ்க்கை!

குயில்மொழி: ‘`எனக்கும் என் அரங்கேற்றம்தான் மறக்க முடியாத நிகழ்ச்சி.  எங்கம்மா, நர்த்தகியம்மானு எல்லாருக்கும் பயம். `இவளுக்கு எதுக்கு டான்ஸ்... வக்கீலுக்குப் படிச்சிருக்கா... அதுல பிராக்டீஸ் பண்ண வேண்டியதுதானே'னு என்னையும் கேட்டிருக்காங்க. ‘அவளுக்குப் பிடிச்சிருக்கு, பண்ணட்டும்’னு அம்மாதான் என்னை என்கரேஜ் பண்ணினாங்க. ஆடி முடிச்சதும், இவ்வளவு நல்லா ஆடறாளே... இதையே தொடரட்டும்னு சொன்னாங்க. என் அரங்கேற்றத்துக்கு வந்திருந்த தமிழ் ஆர்வலர்கள் பாராட்டினது மறக்க முடியாதது. `இலக்கிய வீதி' இனியவன் ஐயாவும் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸும் சேர்ந்து `அன்னம்'னு ஒரு விருது கொடுத்தாங்க.

சமீபத்துல ஒரு நடன நிகழ்ச்சி பண்ணினேன். குமாரி கமலாவும் அவங்க சகோதரி ராதாவும் அந்தக் காலத்துப் படங்கள்ல ஆடியிருப்பாங்க. ராதா அம்மாவுக்கு 80 வயசு இருக்கும். அவங்க இன்னும் ஆடறாங்க. என் நடனத்தை முழுக்கப் பார்த்துட்டு, மேடையில ஏறி, `நல்லா ஆடினே... நாங்க ஆடினது ஞாபகம் வந்தது'னு சொன்னாங்க. `பார்க்கிறதுக்கு தேவி அம்பாள் மாதிரி இருக்கே'ன்னு பாராட்டினது ரொம்ப சந்தோஷமா இருந்தது!’’

நடனத்தில் சிகரம் தொடுகிற எத்தனையோ பேர், திருமணத்துக்குப் பிறகு காணாமல் போன கலைஞர்கள் பட்டியலில் இடம்பெற்றுவிடுகிறார்கள். திருமணம் என்பது பல பெண்களின் திறமைகளுக்கு முற்றுப்புள்ளியாகிவிடுகிறது. இவர்களுக்கு..?

கோட்டீஸ்வரி:
‘`என்னுடையது காதல் திருமணம்தான். கல்யாணத்துக்குப் பிறகு நான் நடனத்தை விட்டுத் தர மாட்டேன்னு சொன்னேன். சம்மதிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். ஆனா, கல்யாணத்துக்குப் பிறகு, அது அவருக்குப் புரியலை. `இது தேவையா'னு கேட்டார். அப்புறம் அவரை என் நடன நிகழ்ச்சிகளுக்குக் கூட்டிட்டுப் போக ஆரம்பிச்சேன். ஆரம்பத்துல ‘இந்த லக்கேஜை எல்லாம் தூக்கிட்டு வரணுமா... விட்ரலாமே’னு சொன்னதுண்டு. அதையும் மீறி என்னோட நிகழ்ச்சிகளுக்கு வரும்போது எனக்குக் கிடைக்கிற பாராட்டுகளையும் ஆசீர்வாதங்களையும் பார்த்து மனசு மாறினார். என் நடனத்தை முழுமையா ஏத்துக்கக் கத்துக்கிட்டார். இப்போ அவரோட சப்போர்ட் இருக்கிறதாலதான் என்னால உலக சாதனை வரை பண்ண முடிஞ்சது.

எந்த ஒரு கலைக்கும் திருமணம் தடையா இருக்காதுங்கிறது என் எண்ணம். நமக்கு வாழ்க்கையில எது முக்கியம்ங்கிற தெளிவு வேணும். இன்னிக்கு நாம இதைப் பத்தியெல்லாம் பேசறோம். நமக்கு முன்னாடி எத்தனையோ பேர் கலைகளுக்காகத் திருமண வாழ்க்கையையே தவிர்த்துட்டு வாழ்ந்திருக்காங்க. அவங்களுக்கு வாழ்க்கையே கலையாதான் இருந்திருக்கு.’’

கிருத்திகா:
‘`எனக்கு வாழ்க்கையில பெருமையையும் அடையாளத்தையும் சேர்த்த விஷயம் டான்ஸ். அதுக்கு நான் மட்டும் உழைக்கலை. என் குடும்பம், என் குருன்னு நிறைய பேர் உழைச்சிருக்காங்க. வாழ்க்கையில திடீர்னு வரும் ஒருத்தருக்காக அதையெல்லாம் விட்டுக் கொடுக்க என்னால முடியாது. வாழ்க்கையில சில விஷயங்களை விட்டுக் கொடுத்துதான் போகணும். ஆனா, வாழ்க்கையையே விட்டுக் கொடுக்க முடியாதில்லையா?’’

குயில்மொழி: 
`கல்யாணம் என் கலையார் வத்தை எந்த வகையிலயும் தடை செய்யாதுனு நம்பறேன். நாம நேசிக்கிற ஒரு விஷயத்தை ஏத்துக்க முடியாத ஒருத்தர்கூட வாழ்க்கை முழுக்க வாழ முடியுமாங்கிறதே சந்தேகம் தான். இவருக்காக நாம டான்ஸை விட்டுட்டோ மேங்கிற உறுத்தல் தொடர்ந்துக்கிட்டே இருக் கும். அந்த உறுத்தலோட வாழறது கஷ்டம். என் கலையார்வத்தை மதிச்சு ஏத்துக்கிறவங்கரோட மட்டும்தான் கல்யாணம்!’’

நடன பாணிகளில் முரண்பட்டாலும், லட்சியத்தை நோக்கிய பயணத்தில் மூவருமே உறுதிகொண்ட நெஞ்சினர்!