Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா! - விஜய் சேதுபதி என்ன சொன்னாரு?

அனுஷா... ஆதிரா... இனியா! - விஜய் சேதுபதி என்ன சொன்னாரு?

டிஜிட்டல் கச்சேரி

அனுஷா... ஆதிரா... இனியா! - விஜய் சேதுபதி என்ன சொன்னாரு?

டிஜிட்டல் கச்சேரி

Published:Updated:
அனுஷா... ஆதிரா... இனியா! - விஜய் சேதுபதி என்ன சொன்னாரு?

``என் ஆளைப் பார்க்கப் போறேன்... பார்த்து, சேதி பேசப் போறேன்... அவன் கண்ணுக்குள்ள என்னை வெக்கப் போறேன்... அவன் நெஞ்சுக்குள்ள என்னைத் தைக்கப் போறேன்...’’

அனுஷா... ஆதிரா... இனியா! - விஜய் சேதுபதி என்ன சொன்னாரு?

``இனியா, பாட்டு பலமா இருக்கே... ரொமான்டிக் மூட்ல இருக்க போல!’’

``ஹலோ... அதெப்படி நான் பாட ஆரம்பிச்சதும், உங்க ரெண்டு பேருக்கும் மூக்கு வேர்க்குது?’’

``அதெல்லாம் அப்டி அப்டிதான்!’’

‘’உங்க ஆளை எப்பப் பார்க்கப் போறீங்க மேடம்?’’

``சொல்லமாட்டேனே..!’’

``பார்றா!’’

``சரி.. என்னைக் கலாய்க்கறதை விட்டுட்டு சம்மர் ஹாலிடேஸுக்குப் பிளான் பண்ணுங்க கேர்ள்ஸ்!’’

``எங்கே வேணும்னாலும் போகலாம். இந்த உலகம் ரொம்பப் பெருசு செல்லம்!’’

``அதானே... அன்லிமிடெட்டா என்ஜாய் பண்ணலாமே!’’

``இந்த உலகத்துல நாம ரசிக்க நிறைய இருக்கு... அதையெல்லாம் தேடிக் கண்டுபிடிப்போமா?’’

”டோண்ட் வொர்ரி... அதுக்குத் தானே மொபைல்லயே நிறைய ஆப்ஸ் இருக்கே!’’

``ஆமாம்... இது ஆப்ஸ் உலகம்ல!’’

``ஆமாமாம்...’’

``அனு... உங்க அத்தை வீடு கோயம்புத்தூர் பக்கம்தானே...’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அனுஷா... ஆதிரா... இனியா! - விஜய் சேதுபதி என்ன சொன்னாரு?

``ஆமா...’’

``ஃபேஸ்புக்ல பார்த்தேன். உங்க அத்தை வீட்ல இருந்தப்ப நீ எடுத்த செல்ஃபிங்க எல்லாம் அவ்ளோ சூப்பரா இருந்துச்சு. அதுலயும் அந்த தூக்கணாங்குருவி கூடு பேக்கிரவுண்ட் செம சூப்பர்!’’

‘’தூங்கணாங்குருவி போல வாழ்க்கை நடத்த அவ்ளோ ஆசை எனக்கு!’’

``தன் இணையான பெண் பறவைக்கு அது கூடுகட்டும் அழகைப் பார்க்குறப்ப அவ்ளோ க்யூட்டா இருக்கும். பறவைகளோட காதல் செம அழகுல்ல..!’’

``ஆமாம் அனு. எனக்குப் பறவையாகப் பறக்க ஆசை!’’

``ஆதிரா... என்ன ரொம்ப சைலன்ட்டா இருக்கீங்க போல!’’

‘’அது ஒண்ணும் இல்ல... ‘உன் கன்னம் பன்னு மாதிரி இருக்கு’னு சொல்லும்போது, கேட்க ஜாலியா இருந்துச்சு... இப்ப `உன் கன்னம் ஏன் வீங்கி இருக்கு’னு கலாய்க்கிறாங்கப்பா!’’

``ஹாஹாஹா...’’

``கன்னம் பப்ளியா இருந்தா, எவ்ளோ அழகோ... அதேபோல அது அளவுக்கு அதிகமா இருந்தாலும் பார்க்க அழகா இருக்காதுதான். ஓர் உண்மையைச் சொல்லணும்னா, நாம சிரிக்கும் ஸ்டைல்கூட கன்னம் அழகாவதற்கான பயிற்சின்னு சொல்றாங்க.’’

``ஆஹான்!’’

``ஆதிரா... அதான் நீ ஃபேஸ்புக் பக்கம் வராம இருக்கக் காரணமா?’’

``அதெல்லாம் இல்ல... நம்ம விஜய் சேதுபதியே சொன்ன பிறகு, நான் சொல்ல என்ன இருக்கு?’’

``விஜய் சேதுபதி என்ன சொன்னாரு?’’

``ஃபேஸ்புக்ல இருக்குறது, அவருக்கு சரிவரலைன்னு சொல்லி இருக்கிறார். பாவம்... அந்த மனுஷன் ட்விட்டர்லகூட இல்லையாம்.’’

``ஆத்தி... அவருதான் ஃபேஸ்புக்ல அட்மின் வெச்சு மெயின்டெய்ன் பண்றாரே...’’

``ஆனா, ஃபேஸ்புக், ட்விட்டர் கருத்துகள் அவருக்கு செட் ஆகலைனு சொல்றாரு. அடுத்தடுத்து அஞ்சு படங்கள் கைவசம் வெச்சிருக்கார். ஒருவகையில டெக்னாலஜியில மூழ்கிப் போகாம இருக்குறதுகூட நல்லதுதான் போல...’’

``லிமிடெட் டெக்னாலஜியை யூஸ் பண்ணா, அன்லிமி்டெட் சந்தோஷம் கிடைக்கும். ரைட்டா?’’

``ரைட்... ரைட் மேடம்!’’

- கச்சேரி களைகட்டும்...

அனுஷா... ஆதிரா... இனியா! - விஜய் சேதுபதி என்ன சொன்னாரு?

அசத்தலான செய்திகளையும் வீடியோகளையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணையதள முகவரியைத் தொடருங்கள். அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

அனுஷா... ஆதிரா... இனியா! - விஜய் சேதுபதி என்ன சொன்னாரு?

லீவு விடப்போறாங்க... பயணத்துக்கு உதவும் சில ஆப்ஸும் டிப்ஸும்!
http://bit.ly/2nlsdSj

அனுஷா... ஆதிரா... இனியா! - விஜய் சேதுபதி என்ன சொன்னாரு?

தூக்கணாங்குருவிக் கூட்டைப் பற்றி நம் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவோமா?
http://bit.ly/2mRvkp7

அனுஷா... ஆதிரா... இனியா! - விஜய் சேதுபதி என்ன சொன்னாரு?

கன்னத்தில் கொழுப்பு... கரைக்க உதவும் 5 எளிய பயிற்சிகள்!
http://bit.ly/2nO8xtu

அனுஷா... ஆதிரா... இனியா! - விஜய் சேதுபதி என்ன சொன்னாரு?

ஃபேஸ்புக் எனக்கு செட் ஆகலை பிரதர்!” - என்னாச்சு விஜய் சேதுபதிக்கு?
http://bit.ly/2mRfpalbit.ly/2mRfpal#innerlink