பிரீமியம் ஸ்டோரி

கிராண்டாக ஒரு டிசைனர் வெடிங் கவுன், விலையுயர்ந்த ஆனால், சிம்பிளான நகை அலங்காரம், யுனீக்கான ஒரு ஹேர்ஸ்டைல் என மணமகளுக்குக் குறைந்தபட்ச அலங்காரமே போதுமானதாக இருக்கும் வெளிநாட்டிலேயே ‘பிரைடல் ஸ்டோர்’ எனும் கான்செப்ட் வழக்கத்தில் இருக்கிறது. ஆனால், சிகையலங்காரம் முதல் பிரைடல் பிளவுஸ், நகைகள் என மணப்பெண்ணை அலங்கரிக்க ஏராளமான விஷயங்கள் அடங்கியுள்ள இந்தியாவில் பிரைடல் ஸ்டோர்கள் இப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்துவருகின்றன. திருமண நிகழ்வில் மணமகளுக்குத் தேவையான பலவிதமான சேவைகளை ஒரே இடத்தில் பெறக்கூடிய கான்செப்டான இதுகுறித்துத் தெரிந்துகொள்ள சென்னையில் மணப்பெண்களின் தேவைகளுக்காகவே பிரத்யேகமாக இயங்கிவரும் டிபிஜி (TBG - The Bridal Guide) என்ற ஆன்லைன் வெடிங் ஸ்டோரின் உரிமையாளர் காவ்யாவிடம் பேசினோம்.

பிரைடல் ஸ்டோர்!

“பொதுவா பொண்ணுங்க ஷாப்பிங் செய்வதைப்பற்றி சொல்லவே வேணாம் அந்தளவுக்கு அவங்களுக்குத் தேவையான பொருள்களைத் தேடிப்பிடித்து, பார்த்துப் பார்த்து வாங்குவாங்க. அப்ப கல்யாணம்னா எவ்ளோ மெனக்கிடுவாங்கன்னு பாத்துக்கோங்க.. ஆனா, கல்யாண தேதி நெருங்க நெருங்க ஒரு பக்கம் ஸ்கின் கேர், ரெஸ்ட்டுன்னு எடுக்க வேண்டியிருக்கும்; இன்னொரு பக்கம் புடவைகள், நகைகள், பிளவுஸ் டிசைனிங், மேக்கப்னு எல்லாத் தேவைகளையும் விருப்பத்துக்கு ஏத்தமாதிரி மட்டும் இல்லாம, பட்ஜெட்டுக்கு சரியா வருகிற மாதிரியும் தேடிப்பிடிச்சு வாங்க வேண்டிய அவசியமும் இருக்கும். இவங்க வேலையை ஈஸியா மாத்துறதுதான் ‘பிரைடல் ஸ்டோர்’ கான்செப்ட்.  கல்யாணப்பொண்ணு ஒவ்வொரு விஷயத்துக்கும் அலைஞ்சு திரிஞ்சா அவங்களோட அழகு பாதிக்கப்படுவது மட்டுமல்ல... ஒருவிதமான பதற்றமான மனநிலையோடயே இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

அதுக்குப் பதிலா வீட்டுல ஏ.சி ரூம்ல உக்காந்து ஃபேஸ்பேக் போட்டுட்டு ஹாயா ஆன்லைனிலேயே அனைத்துத் தேவைகளையும் நிறைவேத்திக்கலாம். இதனால் நேரம் மிச்சமாகுறதோட போக்குவரத்து செலவும் மிச்சமாகும். அத்துடன் வாட்ஸ்அப், ஸ்கைப், ஃபேஸ்புக்னு எல்லா இணையத் தொடர்பு தளங்களிலும் இந்த கான்செப்ட்டை யூஸ் பண்ணிக்க முடியும் என்பது இதோட கூடுதல் ப்ளஸ்.

பிரைடல் ஸ்டோர்!

திருமண பிளவுஸ் அளவு எடுக்கறதுல ஆரம்பிச்சு, அதன் டிசைனிங் வேலை, புடவையோட கலர், அதுல என்ன மாதிரியான வேலைப்பாடுகள் இருக்க வேண்டும் என்று குறித்துக் கொடுப்பது வரையிலான தேவைகளுக்கு, இந்த ஆன்லைன் பிரைடல் ஸ்டோரில் 10 சேவைப் பிரிவுகள் உள்ளன. பியூட்டிஷியன், பிரைடல் ஜுவல்லரி, பிரைடல் மேக்கப் அண்ட் ஹேர்ஸ்டைலிஸ்ட், பிரைடல் மெஹந்தி ஆர்ட்டிஸ்ட், காஸ்மெட்டாலஜிஸ்ட், டென்டிஸ்ட்ரி, நியூட்ரிஷியனிஸ்ட்/பெர்சனல் ட்ரெய்னர், பூ ஜடை, திருமண உடைகளைப்  பிரத்யேகமாக வடிவமைக்கும் ஃபேஷன் டிசைனர்கள், பூமாலைகள், வெடிங் போட்டோகிராஃபி அண்ட் வீடியோகிராஃபி என உங்களுக்கு என்ன மாதிரியான சேவை தேவைப்படுகிறதோ அதை க்ளிக் செய்து பயன்பெற முடியும். பிரைடல் மேக்கப் தொடங்கி போட்டோகிராஃபி வரை தனித்தனியாகவோ, பேக்கேஜ் ஆகவோ எடுத்துக்கொள்ளலாம்.

மேக்கப் ஆர்டிஸ்ட்டுகள், ஸ்டைலிஸ்ட்டுகள் எனக் கிட்டத்தட்ட நூற்றுக்கும் அதிகமான நிபுணர்கள் எங்ககிட்ட இருக்காங்க. சென்னை மட்டும் இல்லாம தமிழ்நாடு முழுக்க சேவை செய்துட்டு இருக்கோம். நீங்க எந்த ஊர்ல இருக்கீங்களோ, அந்த ஊர்ல உள்ள நிபுணர்களை நீங்களே தேர்ந்தெடுத்துக்க முடியும். அதுமட்டும் இல்லை... பிரைடல் ஸ்டோரின் ப்ளஸ் பாயின்ட் என்னன்னா, உங்க பட்ஜெட்டுக்கு ஏத்தமாதிரி மட்டுமல்லாமல், உங்களோட விருப்பம் பெரிய அளவுல இருந்தாலும் நிறைவேத்திக் கொடுப்போம். அதாவது சென்னை, மும்பை மாதிரியான சிட்டிகளில் உள்ள காஸ்ட்லி நிபுணர்கள்தான் தேவை அல்லது  குறிப்பிட்ட தொலைக்காட்சி/சினிமா நட்சத்திரத்துக்கு ஸ்டைலிங் செய்தவர்கள்தான் எங்களுக்கும் வேணும்னு கேட்டாலும் ஏற்பாடு செய்து தருகிறோம். 

பிரைடல் ஸ்டோர்!

திருமண நாளுக்கு மட்டும் தேவையான விஷயங்கள் என இல்லாமல், திருமணத்துக்கு முன்னாடியே தேவைப்படுற சர்வீஸ்களையும் தேர்ந்தெடுக்கலாம். உதாரணமா, சருமப் பிரச்னை உள்ள மணப்பெண்ணுக்குத் திருமணத்துக்கு மூன்று மாதங்கள் முன்பிருந்தே ட்ரீட்மென்ட் எடுத்துக்கறதுக்கான காஸ்மெட்டாலஜி சர்வீஸ்ல ஆரம்பிச்சு நியூட்ரிஷியன் மற்றும் பெர்சனல் ட்ரெய்னர், ஸூம்பா வகுப்புகள்னு உங்களோட தேவைக்கான எல்லா விஷயங்களையும் ஒரே இடத்துல இருந்தே தேர்ந்தெடுத்துக்க முடியும். ஆன்லைனில் செக் பண்றதுல நம்பிக்கை இல்லைன்னா, நேரில் போய்ப் பார்த்தும் விருப்பங்களைத் தேர்வுசெய்துக்கலாம்.

மேக்கப்ல ஆரம்பிச்சு கல்யாணத்துக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் தேடித்தேடி பார்த்து ஃபிக்ஸ் செய்து, இறுதியில் திருமண நாளில் ஏதோ ஒரு விஷயம் சொதப்பினாலும் ஒவ்வொருவராகத் தேடிச் சென்று நம் வருத்தம், கோபத்தைத் தெரிவிக்க முடியாது. ஆனால், பெரும்பான்மையான வெடிங் ஸ்டோர்கள் நீங்கள் விரும்பிக் கேட்டு ஃபிக்ஸ் செய்த விஷயம் தவறுதலாக விருப்பத்துக்கு மாறாக இருந்தால், அந்தத் தவறுக்கான பொறுப்பேற்று, அதற்கான இழப்பீடு வழங்கக்கூட உறுதியளிக்கும்’’ என்று முடித்தார் காவ்யா.

- எஸ்.எம்.கோமதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு