தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

அனுஷா... ஆதிரா... இனியா! - தேவதையா? அடிமையா?

அனுஷா... ஆதிரா... இனியா! - தேவதையா? அடிமையா?
பிரீமியம் ஸ்டோரி
News
அனுஷா... ஆதிரா... இனியா! - தேவதையா? அடிமையா?

டிஜிட்டல் கச்சேரி

``ஓய் அனு’’

``சொல்லுடி இனியா’’

``சைக்கிளிங் போலாம் வர்றயா’’

``ஸாரி... ஐயம் இன் பீரியட்ஸ்’’

``இதெல்லாம் ஒரு சாக்குப்போக்கா லூஸு?’’

``ராஸ்கல். அதான் பீரியட்ஸ்னு சொல்றேன்ல''

``மனசு இருந்தா மார்கபந்து’’

``நீ கொஞ்சம் வாயைப் பொத்து’’

``இல்ல அனு, சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காதே. அது ஏன் ஒரு விஷயத்தைப் புதுசா

அனுஷா... ஆதிரா... இனியா! - தேவதையா? அடிமையா?

ஆரம்பிக்கும்போதே, அதுக்குப் பீரியட்ஸை தடையா நினைக்கணும்’’

``அடியேய்... ப்ரீயட்ஸ், நாப்கின்... இதுல சைக்கிளிங் எப்படி? புரிஞ்சிக்கோ மக்கு!’’

‘`ஹேமானு ஒரு பொண்ணு. அவ ஒரு டிராவலர். சைக்கிள் எடுத்துக்கிட்டு இந்தியா வையே சுத்தியிருக்கா. அவளுக்கும் பீரியட்ஸ் ப்ராப்ளம் இருக்கு. நாப்கினோட எரிச்சல் நேரங்கள்லயும், துணியை மட்டுமே யூஸ் பண்ணிக்கிட்டு சைக்கிள் மிதிச்சுக்கிட்டே டிராவல் பண்ணியிருக்கா. இந்த உலகத்துல முடியாததுனு எதுவும் இல்ல. அதனால் உன் சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டிட்டு கிளம்பி வாடி’’

அனுஷா... ஆதிரா... இனியா! - தேவதையா? அடிமையா?

``ஆமா... கிளம்பி வாடி என் செல்லக் கிளியே’’

‘`என்ன ஆதிரா `காற்று வெளியிடை' ரொமான்டிக் ஃபீலா?’’

``ம்க்கும். நீதான் மெச்சிக்கணும்’’

``படத்துல விஷுவல் தவிர வேற எதுவும் என்னை இம்ப்ரெஸ் பண்ணலை’’

‘`ஆமா ஆதிரா. அது ஏன் பொண்ணுங்களை எப்பவும் லூஸாவே காட்டுறாங்க. இந்தப் பசங்க நினைச்சா, பொண்ணுங்களை தேவதையா தூக்கி வெச்சுக் கொண்டாடுவானுங்க... இல்லாட்டி, கால்ல போட்டு மிதிப்பானுங்க ராஸ்கல். எனக்குக் கார்த்தி கேரக்டர் பிடிக்கவே இல்லப்பா’’

‘`அதிதி கேரக்டர்ல மட்டும் என்ன வாழுதாம்?  `எனக்குத் தன்மானம் முக்கியம்’னு வாயில மட்டும் சொல்ற பொண்ணு தன்னோட ஒவ்வொரு செயலிலும் அப்படி இல்லாம, தான் காதலிக்கிற பையன்கிட்ட அடிமையாவே  வாழ்ந்து தொலைக்கிறா’’

‘`அந்த கேரக்டர் அப்டி போல! கூல் கேர்ள்’’

‘`எதுக்கு இவ்ளோ டென்ஷன் யூடியூப்ல வீடியோ பார்க்கலாம் வாங்க’’

‘`ஐயோ! ஸ்லோ நெட்வொர்க். ஷேர் இட்ல அனுப்புமா. பாத்துக்குறேன்’’

‘`இப்ப தான்  `Youtube Go’-னு புதுசா ஒரு ஆப் வந்திருக்குல்ல. அதை மொபைல்ல உடனே இன்ஸ்டால் பண்ணு. ரொம்ப குறைவான டேட்டாவுலயே வீடியோக்களைப் பார்க்க முடியும்’’

‘`இஸ் இட்?’’

‘`யெஸ்’’

‘`ஆக மொத்தம் இன்டர்நெட் உலகத்துல வாழ்ந்தே பாக்கெட் மணியை காலி பண்றோம். ரைட்டா?’’

‘`அனு, ஒருபக்கம் செலவு செஞ்சா,  இன்னொரு பக்கம் சம்பாதிக்கவும் கத்துக்கணும்?’’

‘`படிக்குற வயசுல சம்பாதிக்குறதா? அது எப்படி?’’

‘`ஷேர் மார்கெட்ல இன்வெஸ்ட் பண்ணு’’

‘`ஓ... இது வேறயா?’’

‘`ஆமா.. இதுல பயப்பட என்ன இருக்கு? எல்லாத்தையும் தெரிஞ்சு வெச்சுருக்கிறது நல்லதுதானே?’’

``வாரே வாவ்... நான் மல்டி மில்லியனராகப் போறேனே’’

‘`ஆசை, தோசை! எதையுமே ப்ளான் பண்ணிப் பண்ணணும் கண்ணு!’’

- கச்சேரி களைகட்டும்

அனுஷா... ஆதிரா... இனியா! - தேவதையா? அடிமையா?

சத்தலான செய்திகளையும் வீடியோக்களையும் படித்துப் பார்த்து மகிழ www.vikatan.com என்னும் விகடன் இணையதள முகவரியைத் தொடருங்கள். அல்லது இந்த க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்யுங்கள்.

“உலகம் சுற்ற சைக்கிள் போதும்!”

- சென்னைப் பெண்ணின் பயணக் காதல்

அனுஷா... ஆதிரா... இனியா! - தேவதையா? அடிமையா?
அனுஷா... ஆதிரா... இனியா! - தேவதையா? அடிமையா?

‘’பெண்ணின் பேய் மழை பிரியத்துக்கு என்ன மதிப்பு!?’’ ‘காற்று வெளியிடை’ என்ன சொல்கிறது?

அனுஷா... ஆதிரா... இனியா! - தேவதையா? அடிமையா?
அனுஷா... ஆதிரா... இனியா! - தேவதையா? அடிமையா?

டேட்டா காலியாகாமல் வீடியோ பார்க்கலாம்... யூடியூபின் அதிரடி! #YoutubeGo

அனுஷா... ஆதிரா... இனியா! - தேவதையா? அடிமையா?
அனுஷா... ஆதிரா... இனியா! - தேவதையா? அடிமையா?
அனுஷா... ஆதிரா... இனியா! - தேவதையா? அடிமையா?
அனுஷா... ஆதிரா... இனியா! - தேவதையா? அடிமையா?

வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி?