Published:Updated:

தாய்லாந்து சிறுவர்களை மீட்டது எப்படி..? திகில் த்ரில் அனுபவம்!

ஆபத்தான சுரங்கத்திலிருந்து 13 உயிர்களை மீட்டெடுத்துள்ளனர் ரியல் ஹீரோக்கள். மகிழ்ச்சியும் துயரமும் நிறைந்ததாக முடிவுக்குவந்துள்ளது தாய்லாந்துச் சிறுவர்களை மீட்கும் பணி. 

தாய்லாந்து சிறுவர்களை மீட்டது எப்படி..? திகில் த்ரில் அனுபவம்!
தாய்லாந்து சிறுவர்களை மீட்டது எப்படி..? திகில் த்ரில் அனுபவம்!

டந்த 2010-ம் ஆண்டு, சிலி நாட்டின் சுரங்கத்துக்குள் 33 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். ஓரிரு நாள்கள் அல்ல, 69 நாள்கள் உள்ளே இருந்த தொழிலாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். வியப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்திய மீட்புப் பணி அது. சிலி சுரங்கத் தொழிலாளர்கள் மீட்புப்பணியை மையமாகவைத்து, `தி33 ' என்ற பெயரில் ஹாலிவுட் படம் வெளிவந்தது. இப்போது, அதைவிட ஆபத்தான சுரங்கத்திலிருந்து 13 உயிர்களை மீட்டெடுத்துள்ளார்கள் ரியல் ஹீரோக்கள். மகிழ்ச்சியும் துயரமும் நிறைந்ததாக முடிவுக்குவந்துள்ளது, தாய்லாந்துச் சிறுவர்களை மீட்கும் பணி. 

சியாங் ராய் மாகாணத்தில் தாம் லுயாங் (`Great Cave of the Sleeping Lady') குகையில் சிக்கிக்கொண்ட சிறுவர்களின் உயிரைக் காக்க, ஆக்ஸிஜன் சிலிண்டர்களைச் சுமந்துசென்ற சமான் குணான் பலியானார். சிலிண்டர்கள், உணவுப் பொருள்கள், மருந்துகளை சிறுவர்களிடத்தில் சேர்த்துவிட்டுத் திரும்புகையில், துரதிர்ஷ்டவசமாக அவரின் சிலிண்டரில் ஆக்ஸிஜன் தீர்ந்துபோனது. விளைவு, குனான் இறந்துபோனார்.

குகையின் வாயிலிலிருந்து 2.5 மைல் தொலைவில் சிறுவர்கள் சிக்கியிருந்தனர். ட்ரில் போட்டெல்லாம் குகைக்குள் அவர்கள் இருக்கும் இடத்தை அடைவது இயலாத காரியம். இரண்டாவது, இந்தக் குகையின் முழு அமைப்பையும் இதுவரை யாரும் முழுமையாக அறிந்ததில்லை. குகைகுறித்த முழுமையான வரைபடமும் கிடையாது. தேங்கிநிற்கும் மழைநீருக்குள் மூழ்கிச்செல்வது ஒன்றே வழி. இந்த ஆபத்தான பணியைத் தைரியமாக மேற்கொண்ட குனான் உயிரிழந்ததுதான் தாய்லாந்து மக்களை கடும் சோகத்துக்குள்ளாக்கியது.

மீட்புப்பணிக்கு சர்வதேச நாடுகளும் கைகொடுத்தால்தான் சிறுவர்களை மீட்க முடியும் என்ற நிலையில் ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா நாடுகளைச் சேர்ந்த நிபுணத்துவம் பெற்ற டைவர்கள் தாய்லாந்துக்கு வந்தனர். ஜூன் 23-ம் தேதி காணாமல்போன சிறுவர்கள், குகைக்குள் உயர்வான இடத்தில் அமர்ந்திருப்பதையே ஜூலை 2-ம் தேதிதான் கண்டுபிடிக்கப்பட்டது. 

சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பரந்துவிரிந்துகிடக்கும் இந்தக் குகை, அபாயகரமாக வளைவுகள் மற்றும் கூர்மையான பாறைகளைக்கொண்டது. சில இடங்களில், ஒருவர் மட்டுமே புகுந்து செல்லக்கூடிய குறுகிய இடைவெளிதான் இருக்கும். வெளிச்சம் எந்தவிதத்திலும் கிடைக்காது. இத்தகைய கடினமான விஷயங்களைக் கடந்து 13 உயிர்கள் காப்பாற்றப்பட்டிருப்பது மீட்புப்பணியில் ஈடுபட்டவர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. மீட்புப்பணியில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டாலும் உயிர்களை மீட்க முக்கியக் காரணக்கர்த்தாவாக இருந்தவ,ர் அடிலெய்டைச் சேர்ந்த புகழ்பெற்ற டைவரான ரிச்சர்டு ஹாரிஸ். சிறந்த மருத்துவ நிபுணரான இவர், குகை டைவிங்கில் 30 ஆண்டுகாலம் அனுபவமிக்கவர். 

குகைக்குள் சிறுவர்கள் இருக்கும் இடத்தை, முதன்முதலில் பிரிட்டன் குழுவினர்தான் கண்டுபிடித்தனர். சிறுவர்கள் நிலையைக் கண்ட பிரிட்டன் குழு, ``ரிச்சர்டு ஹாரிஸ் முன்னிலையில் மீட்புப்பணி நடந்தால்தான் சரிவரும்'' என்று தெளிவாகக் கூறிவிட, தாய்லாந்து அரசு அவரை அணுகியது. ரிச்சர்டு ஹாரிஸ் அப்போது விடுமுறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார். தகவல் அறிந்ததும் உடனடியாக விடுமுறையை ரத்துசெய்துவிட்டு தாய்லாந்து சென்றார். முதலில் குகையில் இருந்து ஆரோக்கியமாக உள்ள சிறுவர்களைத்தான் வெளியே கொண்டுவர வேண்டும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஹாரிஸ் வந்ததும் அந்தத் திட்டத்தை மாற்றினார். 

உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பவர்களை முதலில் வெளியே கொண்டுசெல்ல ஹாரீஸ் முடிவெடுத்தார். அதோடு, குகைக்குள் சென்ற ஹாரீஸ், உடல்ரீதியாக பலவீனமான சிறுவர்களை முதலில் கண்டறிந்து அவர்களை வெளியேற்றினார். மனரீதியாகவும் அவர்களைத் தயார்படுத்தினார். முதல் நாள் (ஞாயிற்றுக்கிழமை) மீட்புப்பணியில் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். அடுத்த நாள் 4 பேரும், செவ்வாய்க்கிழமை 4 பேரும் வெளியே கொண்டுவரப்பட்டனர். குகைக்குள் இருந்து அனைவரையும் வெளியேற்றிவிட்டு கடைசியாக வெளியே வந்த ரிச்சர்டு ஹாரீஸுக்கு சோகத் தகவல் ஒன்று காத்திருந்தது.

`ரிச்சர்டு, உங்க அப்பா இறந்துட்டாங்க!’