Published:Updated:

பார்லி பவுடர், ரவை, கடலை மாவு.... வீட்டிலேயே முகஅழகு பெற டிப்ஸ்... டிப்ஸ்!

பார்லி பவுடர், ரவை, கடலை மாவு.... வீட்டிலேயே முகஅழகு பெற டிப்ஸ்... டிப்ஸ்!

பார்லி பவுடர், ரவை, கடலை மாவு.... வீட்டிலேயே முகஅழகு பெற டிப்ஸ்... டிப்ஸ்!

பார்லி பவுடர், ரவை, கடலை மாவு.... வீட்டிலேயே முகஅழகு பெற டிப்ஸ்... டிப்ஸ்!

பார்லி பவுடர், ரவை, கடலை மாவு.... வீட்டிலேயே முகஅழகு பெற டிப்ஸ்... டிப்ஸ்!

Published:Updated:
பார்லி பவுடர், ரவை, கடலை மாவு.... வீட்டிலேயே முகஅழகு பெற டிப்ஸ்... டிப்ஸ்!

அழகை அதிகரிக்கிறேன் என்கிற பெயரில், பியூட்டி பார்லருக்குச் சென்று ஆயிரங்களில் செலவழிப்பது நிரந்தர அழகை அளித்துவிடாது. வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே அழகை அதிகரிக்கலாம். இயற்கையான அழகுக்குக் கலக்கலான 10 டிப்ஸ் தருகிறார், அழகுக்கலை நிபுணர் விமலா.

 1. இயற்கை முறையிலேயே ப்ளீச் செய்ய முடியும். ஒரு டீஸ்பூன் பார்லி பவுடருடன் எலுமிச்சைசாறும் பாலும் கலந்து, ப்ளீச்சாக உபயோகிக்கலாம். இது, முகத்தை பளிச் என மாற்றும். வெயிலினால் ஏற்படும் கருமையையும் நீக்கும்.

2. கிளிசரினுக்குப் பதிலாகப் பால் உபயோகித்து மசாஜ் செய்யலாம். இது சருமத்துக்கு ஊட்டத்தையும் குளிர்ச்சியையும் ஏற்படுத்தி, முகப்பொலிவை அதிகப்படுத்தும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

3. ரவையைத் தயிரில் ஊறவைத்து, ஸ்கர்ப்பாக உபயோகிக்கலாம். இது, முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, இளமையுடன்  இருக்கவும், முக அழகை அதிகரிக்கவும் செய்கிறது. ஆனால், வாரம் ஒருமுறை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

4. லிப்ஸ்டிக்குக்குப் பதிலாக, பீட்ரூட் உபயோகிக்கலாம். உதட்டில் பீட்ரூட் தடவிவிட்டு, அதற்கு மேலே ஐஸ்கட்டியைத் தேய்க்கும்போது இயற்கையாகவே சிவப்பழகும் பளபளப்பும் ஏற்படும்.

5. எந்த ஃபேஸ்பேக் உபயோகப்படுத்தினாலும், காட்டன் துணி வைத்து ரிமூவ் செய்வதுதான் முகத்துக்கு ஆரோக்கியமானது.

6. இப்போது பலருக்கும் இருக்கும் பிரச்னை, வொய்ட் மார்க்ஸ், பிளாக் மார்க்ஸ். இதற்கு, வீட்டிலேயே தினமும் சூடான தண்ணீரில் 30 நிமிடங்கள் ஆவி பிடிக்கலாம். இது, முகத்தில் தூசியினால் ஏற்படும் அழுக்கையும் கிருமியையும் அகற்றி, புதிய செல்களை உருவாக்கும். முகத்துக்குப் புத்துணர்வை அளிக்கும்.

7. முகப்பருக்களால் ஏற்படும் குழியைச் சரிசெய்ய, கடலைமாவுடன் தண்ணீர் கலந்து 15 நிமிடங்கள் ஃபேஸ்பேக்காகப் போட்டு முகம் கழுவலாம்.

8. சென்ஸிடிவ் ஸ்கின் உள்ளவர்கள், லெமன் மாய்ஸ்டரைஸிங் செய்யக்கூடாது. அதற்குப் பதிலாக, ஐஸ் வாட்டரைப் பயன்படுத்தலாம். இது, முகத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, சருமத்தைப் பட்டுபோல வைத்திருக்கும்.

9. டிரை ஸ்கின் உடையவர்கள், அதிமதுரமும் பாலும் கலந்து 15 நிமிடங்கள் ஃபேஸ்பேக் போட்டு முகம் கழுவுங்கள். சருமம் மென்மை பெறுவதுடன், பருக்கள் வராமல் காக்கும்.

10. முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க, கோரைக்கிழங்கும் மஞ்சளும் சேர்த்து, முடிக்கு எதிர்ப்பக்கமாக தேய்க்கவும். நாளடைவில் தானாகவே முடிகள் உதிர்ந்துவிடும்.

தழும்புகள் மறைய...

ஒரு கைப்பிடி அரிசி (எந்த அரிசி என்றாலும் ஓகே), ஒரு கைப்பிடி நன்றாகக் காய வைக்கப்பட்ட கறிவேப்பிலை இரண்டையும் அரைத்து, சலித்து வைத்துக்கொள்ளுங்கள். இதிலிருந்து ஒரு டீஸ்பூன் பொடி எடுத்து அதில் 10 சொட்டு லைம் ஜூஸ் அல்லது ஆரஞ்சு ஜூஸ் கலந்து பரு மற்றும் அம்மைத் தழும்புகளின் மேல் தடவி வந்தால், தழும்புகள் மறைந்து அதனால் சருமத்தில் வந்த மேடு பள்ளங்கள் வரை படிப்படியாகச் சரியாகும். 

கருவளையம் சரியாக...

தலா 5 சொட்டு தாமரை எண்ணெயையும், விளக்கெண்ணெயையும் கலந்து உங்கள் மோதிர விரலால் தொட்டு, கண்களின் அடியில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்யும்போது கிளாக் வைஸ், ஆன்டி கிளாக் வைஸ் என இரு விதமாகவும் செய்ய வேண்டும். தவிர, இதை மோதிர விரலால் செய்யும்போதுதான் கண்களுக்கு அடியில் அதிக அழுத்தம் கொடுக்க மாட்டோம்.

கருப்பு உதடு சிவப்பாக... 

10 சொட்டு தேனுடன் ஒரு சிட்டிகை லவங்கப்பட்டைப் பொடி,  10 சொட்டு எலுமிச்சைச்சாறு சேர்த்து உதடுகளில் தடவி வந்தால், உதடு சிவக்க ஆரம்பிக்கும். தவிர, உதடுகளில் இருக்கிற வெடிப்பு, இறந்த செல்கள் எல்லாம் சரியாகி டார்க் சருமம் கொண்டவர்களுக்குக்கூட உதடுகள் சிவப்பாக மாற ஆரம்பிக்கும்.  

கழுத்து கருப்பு மறைய...

கால் டீஸ்பூன் ஆம்சூர் பவுடருடன், ஒரு டீஸ்பூன் தக்காளிச்சாறு, 20 சொட்டு ஆரஞ்சு ஜூஸ் கலந்து கழுத்தைச் சுற்றி தடவி விட்டு, ஒரு மணி நேரம் கழித்து வாஷ் செய்து விடுங்கள். இதைத் தொடர்ந்து செய்து வர இரண்டு வாரங்களில், முகத்தைப் போலவே கழுத்தும் பளிச்சென்று மாறும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism